1. கர்த்தாவே யுகாயுகமாய்


எம் துணை ஆயினீர்நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர்
உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள
புயமே நிச்சய கேடகம்
பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்
ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
இமைக்கு ஒப்பாமே

சாவுக்குள்ளான மானிடர்
உலர்ந்த பூவைப்போல்
உதிர்ந்து அழிந்தாலுமே
கடாட்சம் செய்கிறீர்
மறு ஜீவனை அருளி
எம் நித்ய வீடானீர்
கர்த்தாவே யுகாயுகமாய்
எம் துணை ஆயினீர்

2. ஆத்துமமே என் முழு உள்ளமே உன் ஆண்டவரைத் தொழுதேத்து இந்நாள்வரை அன்பு வைத்தாதரித்த - உன் ஆண்டவரைத் தொழுதேத்து


ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் ஆண்டவரைத் தொழுதேத்து
இந்நாள்வரை அன்பு வைத்தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து
தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்தருளும், மேலான
வாதை நோய் துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தயைசெய்துயிர் தந்த - உன் ஆண்டவரை
உற்றுனக்கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடிசூட்டும்
துதி மிகுந்தேற ஸ்தோத்திரி தினமே
இதயமே உள்ளமே என் மனமே - உன் ஆண்டவரை
உம்மைத் துதிக்கிறோம் மா யாவே
பரிசுத்தரே
உம்மைப் பணிகிறோம்
ஒன்றான மெய்த் தேவரீரே
உமது மா
கிருபைக்காக என்றும்
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே
கிறிஸ்துவே ஆசாரியராக
பலிசெலுத்தி
லோகத்தின் பாவத்தை நீக்கிட்ட
தேவாட்டுக்குட்டி
எங்கள் மனு
கேளும் எம் ஆண்டவரே
ராஜாதி ராஜா இரங்கும்
நித்ய பிதாவின்

3.உம்மைத் துதிக்கிறோம் மா யாவே


பரிசுத்தரே
உம்மைப் பணிகிறோம்
ஒன்றான மெய்த் தேவரீரே
உமது மா
கிருபைக்காக என்றும்
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே
கிறிஸ்துவே ஆசாரியராக
பலிசெலுத்தி
லோகத்தின் பாவத்தை நீக்கிட்ட
தேவாட்டுக்குட்டி
எங்கள் மனு கேளும்
எம் ஆண்டவரே ராஜாதி ராஜா இரங்கும்
நித்ய பிதாவின்மகிமையில்
யெஷுஆவே நீரே
பரிசுத்தர்களோடு இன்று
ஆளுகிறீரே
ஏகமாய் நீர்
அர்ச்சிக்கப்படுகிறீர்
உன்னத கர்த்தரே ஆமென்.

4.காலை நேரம் இன்ப ஜெப தியானமே


கருணை பொற்பாதம் காத்திருப்பேன்
அதிகாலையில் அறிவையுணர்த்தி
அன்போடு யெஷுஆ தினம் பேசுவார் //2
காலை நேரம் இன்ப ஜெப தியானமே
எஜமான் என் யெஷுஆ முகம் தேடுவேன்
என் கண் அவரின் கரம் நோக்குமே //2
எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும் ்
என்னை அழைத்தார் அவர் சேவைக்கே //2
காலை நேரம் இன்ப ஜெப தியானமே
பலர் தீமை நிந்தை மொழிகள் உன் மேல்
பொய்யாய்ச் சொன்னாலும் களிகூருவாய் //2
இதுவே உன் பாக்கியம் என யெஷுஆ சொன்னார்
இந்த மெய் வாக்கு நிறைவேறுதே //2
காலை நேரம் இன்ப ஜெப தியானமே
சிலுவை சுமந்தே அனுதினமே
சோராமல் என் பின் வா என்றாரே //2
அவரோடு பாடு சகித்து என்றுமே
ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே //2
காலை நேரம் இன்ப ஜெப

5. கூடி மீட்பர் நாமத்தில்


அவர் பாதம் பணிவோம்
யெஷுஆவை இந்நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்
ஆ! இன்ப இன்ப ஆலயம்
நல்மீட்பர் கிருபாசனம்!
கண்டடைவோம் ரகசியம்
இன்ப இன்ப ஆலயம்
இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும்போது வருவார்
வாக்குப் போலத் தயவாய்
ஆசீர்வாதம் தருவார் - ஆ! இன்ப இன்ப
சொற்பப் பேராய் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யெஷுஆ நம்மோடிருப்பார் - ஆ! இன்ப இன்ப
வாக்கை நம்பி நிற்கிறோம்
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்
வல்ல ஆவி தாருமேன் - ஆ! இன்ப இன்ப

6. வந்தனம் வந்தனமே எங்கள் து/தி/யின்


பாத்/திரரே இது
வரையில் எமையே வளமாய்க் காத்த
எம் தேவனே மிக வந்தனம்
எப்போதும் எப்போதுமே எங்கள் தகுநன்றிக்
கடையாளமே நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில்
தயைகூர் யாவே தேவனே
மாறாப் பூரணரே, எங்கள் வாழ்வின் ஒளிச்
சுடரே - உந்தன்
வாக்குத் தவறா கிருபை பொழிந்திட்ட
வல்லவர்க்கும் துதியே
சருவ வியாபகமும் எமைச்சார்ந்து
தற்காத்ததுவே எங்கள்
தேவா பணிவாய் ஆழி துதி புகழ்
வந்தனமே நிதமே
சருவ வல்லமையதால் எமைத்
தாங்கினதும் பெரிதே சத்திய
சருவேசுரனே கிருபாகரனே உன்
சருவத்துக்கும் துதியே
உந்தன் சருவ ஞானமும் உம்
மீட்பின் திட்டம் யாவையும் பார்த்தால்
உள்ளம் பொங்கி பொங்கும் உன்னருளுக்கு
தரும் புகழ் துதி துதியே - வந்தனம்

7. எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே, நீஎந்நாளுமே துதிப்பாய்


இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த /2
எண்ணில்லா நன்மைகள்
யாவும் மறவாது
எந்நாளுமே துதிப்பாய்
பாவங்கள் எத்தனையோ நினையாதிருந்தார்
உன் பாவங்கள் எத்தனையோ
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே /2
எண்ணில் உன் பாவம் அகன்றதன் தூரமே - எந்நாளுமே
மன்னிப்பு மாட்சிமையாம் மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி /2
நித்தியமான ஜீவனை ஈந்ததால் - எந்நாளுமே
நன்மையால் உன் வாயை நிறைத்தாரே பூர்த்தியாய்
நன்மையால் உன் வாயை
உன் வயது கழுகைப் போல் பலங்கொண்டு /2
ஓங்கு இளமைப்போல் ஆகவே செய்ததால் - எந்நாளுமே
பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம்போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
தேவ பயமுள்ளவர் மேல் அவரருள் /2
சாலவும் தங்குமே சத்தியமேயிது - எந்நாளுமே

8.அல்லேலூயா, யாவேயை ஏகமாய் துதியுங்கள்


அவர் நடத்தும் செயல்களெல்லாம்
பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரை துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் தேவனை துதியுங்கள்
ராஜாதி ராஜனாம் யெஷுஆ ராஜன்
பூமியில் ஆளுகிறார்
அல்லேலூயா அல்லேலூயா
தேவனை துதியுங்கள்
தம்புரோடும், வீணையோடும் யாவேயை துதியுங்கள்
ரத்தத்தினால் பாவங்களை போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிட துதியுங்கள்
எக்காலமும் மாறாத தேவனை துதியுங்கள் - ராஜாதி
அக்கினியே, கல்மழையே படைத்தோரை துதியுங்கள்
ஆழ்கடலே சமுத்திரமே யாவையை துதியுங்கள்
சூரியனே சந்திரனே தேவனை துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரை துதியுங்கள்- ராஜாதி
ஜனங்களே, வாலிபரே யாவேயை துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
மூப்பர்களே, தூதர்களே தேவனை துதியுங்கள்
பரலோகத்தை பரிசுத்தர்கள் நிரப்பினர் துதியுங்கள் - ராஜாதி

9.சீர்மிகு வான்புவி தேவா, ஸ்தோத்ரம்


சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், ஸ்தோத்ரம்
ஏர்குணனே, ஸ்தோத்ரம், அடியார்க்கு
இரங்கிடுவாய், ஸ்தோத்ரம், மா நேசா
நேர்மிகு அருள்திரு அன்பா, ஸ்தோத்ரம்
நித்தமும் உமக்கடியார்களின் ஸ்தோத்ரம்
என் ஆண்டவரே ஸ்தோத்ரம் உமது
அன்பினுக்கே ஸ்தோத்ரம், மா நேசா
ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் ஸ்தோத்ரம்
தினம், தினம் அருள் நன்மைக்காகவும் ஸ்தோத்ரம்
ஆவலுடன் ஸ்தோத்ரம், உமது
அன்பினுக்கே ஸ்தோத்ரம், மா நேசா
ஆத்தும நன்மைகட்காகவும் ஸ்தோத்ரம்
அதிசய நடத்துதற்காகவும் ஸ்தோத்ரம்
சாற்றுகிறோம் ஸ்தோத்ரம், உமது
தகுமன்புக்கே ஸ்தோத்ரம், மா நேசா
மாறா தேவாதி தேவா, ஸ்தோத்ரம்
தேற்றும் ஆவியை தருவாய் ஸ்தோத்ரம்
தாரும் துணை, ஸ்தோத்ரம், இந்த
தருணமே கொடு ஸ்தோத்ரம், மா நேசா

10.யாவே தேவனை துதித்திடுவோம் - நம்


சபையில் தேவன் வந்தருள
ஒரு மனதோடு யெஷுஆ நாமத்தில்
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ரட்சகர்க்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா உன்னதர்க்கே
வானில் அடையாளம் தோன்றிடுதே - நம்
யெஷுஆ ராஜரீகம் செய்கிறாரே
நாமும் அவர் ராஜ்யம் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கிக்கொள்வோம் - அல்லேலூயா
எங்கள் காலடி வழுவிடாமல் - நீர்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணிபோல காத்தருளும்
கிருபையாய் ஜீவ வழிநடத்தும் - அல்லேலூயா
உம் பாளயத்தில் வாசஞ்செய்ய - நீர்
தேர்ந்து அண்டிக்கொள்ளச் செய்கிற
பாக்கியவான், உம் பாத்திரமாய்
வீட்டின் நன்மையால் திருப்தியாவான் - அல்லேலூயா

11.துதித்துப் பாடிட பாத்திரமே


ரட்சகர் யெஷுஆவின் நாமத்திலே
துதிகளின் மத்தியில் வாசஞ்செய்யும்
மா யாவே தேவனை
ஸ்தோத்திரிப்போமே
ஆ! அற்புதமே தேவ நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
தம்மோடு ஒப்புரவாக்கி என்றும்
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே -ஆ! அற்புதமே
இந்த வனாந்திர யாத்திரையில்
அன்பராம் யெஷுஆ நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்திரிப்போமே -ஆ! அற்புதமே
நீதியுடன் யெஷுஆ ஆண்டிடுவார்
புவியில் தேவ சித்தம் செய்திடுவோம்
யாவேயோடு ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்குதே ஸ்தோத்திரிப்போமே -ஆ! அற்புதமே

12.நான் நேசிக்கும் கர்த்தர் யெஷுஆ


என்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும்
என்றென்றுமே மாறாதவர் //2
நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் யெஷுஆவை துதித்திடுவேன்
என் ஜீவகாலமெல்லாம்அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன் //2 - நான் நேசிக்கும்
துன்பத்தில் தவிக்கும் வேளையில் யெஷுஆ
நான்தான் பயப்படாதே
என்று தேற்றி புயல் காற்றையும்
கடலையும் அமர்த்திடுவார் //2 - நான் பாடி
தாசர் தாகத்தால் வாடும் நேரத்தில்
வதண்ணீர் தருவார்
பசியால் சோரும் காலத்திலே
மன்னாவைத் தந்திடுவார் //2 - நான் பாடி

13.கர்த்தாவே ஆ/ழங்/களிலிருந்து


உம்மை நோக்கி கூப்/பிடுகிறேன்
ஆண்டவா உந்/தன் செவியைச் சாய்/த்து
என் விண்ணப்பம் யா/வும் கேட்டருளும் //2
கர்த்தாவே நீர் அக்/கிர/மங்க/ளைக்
கவனித்தால்/ யார்/ நிலைநிற்பான்
உமக்கு ப/யப்/படும் படிக்/கு
மன்னிப்பு உண்/டு உம்/மிடத்தில் //2
கர்த்தருக்கு/ நான்/ காத்திருக்கி/றேன்
காத்திருக்கும்/ என்/ ஆத்மா என்றும்
கர்த்தாவே உம்/மு/டைய வார்த்தை/யை
நான் என்றென்றும் நம்/பி இருக்கிறேன் //2
எப்பொழுது/ வி/டியுமோ எ/னும்
ஜாமக்கார/ரைப் பார்க்கிலும் வெ/கு
அ/திகம/தி/கமாய் என் ஆ/த்மா
உமக்காய் என்/றும் காத்திருக்கும் //2
இஸ்ரயேல் எல்/லாம் யாவே தேவனை
என்றென்றும் நம்/பி இருப்பதாக
அவரிட/த்தில் திரண்ட மீட்/பும்
கிருபையும் உண்/டு என்றென்றுமே //2
கர்த்தர் இஸ்ரேலை அதன் சக/ல
அக்ரமங்க/ளி/னின்றும் மீட்பார்
இது முதல் இஸ்/ரயேல் அவர்/க்கே
என்றென்றும் கா/த்தி/ருப்பதாக //2

14.கர்த்தரை பாடியே போற்றிடுவோமே


கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை
கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
கறையில்லை அவர் அன்பு கரையற்றதே //2
யெஷுஆ நல்லவர், யெஷுஆ வல்லவர்
யெஷுஆவைப்போல் வேறொரு
நேசர் இல்லையே
போராட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
தேவ குமாரனின் விசுவாசத்தாலே
ஜீவித்து சேவிக்க திடமளித்தார் - யெஷுஆ
கல்லும் முள்ளுகள் உள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
எல்லை இல்லா எதிர்ப்பு நமக்கு வந்தாலும்
வல்லவர் யெஷுஆ நம்முன்னே செல்கிறார் - யெஷுஆ

சீயோனை சிறப்புடன் சேர்த்திட்ட யெஷுஆவின்
ராஜ்யம் பூமியில் தோன்றும் விரைவிலே
கீழ்ப்படிந்தோர்கள் பூரண ஆயுளை
நித்தி/யமாய் பெற்று சுகித்திடுவார் - யெஷுஆ

15.ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை


இன்றும் என்றும் துதித்திடுவோம்
காத்தீரே எம்மை கருத்தாக
வழுவாமல் எம்மை உமக்காக
கொடுத்தீர் யெஷுஆவை எமக்காக /2
எடுத்தீர் எம்மையும் உமக்காக - ஸ்தோத்திரம்
வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவோம்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே /2
அலையும் எம்மையும் மீட்டீரே - ஸ்தோத்திரம்
கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மை
துதியே துதியே துதித்திடுவோம்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரை கண்பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தானே /2
எந்நாளும் எங்கள் துணை நீரே - ஸ்தோத்திரம்
தீயோன் அம்புகள் தாக்காதே எம்மை
துதியே துதியே துதித்திடுவோம்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணுகாதும் மறைவினிலே /2
தேடியும் உமதடி சேர்ந்திடுவோம் - ஸ்தோத்திரம்

16. துதிசெய் துதிசெய் மனமே நிதம் துதிசெய்


துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே /2
துதிசெய் துதிசெய் மனமே நிதம் துதிசெய்
முன் காலமெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உனக்களித்தாரே /2 - துதிசெய்
ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
யெஷுஆ உன் காவலராய் இருந்தாரே /2 - துதிசெய்
சோதனை பலவாய் மேகம்போல் உன்னை சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை /2 - துதிசெய்
தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும்
தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே /2
- துதிசெய்
நித்தமும் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே /2 - துதிசெய்

17.எத்தனை நாவால் பாடுவேன்


என் மீட்பர் துதியை /2
என் ஆண்டவர் என் ராஜனின்
மேன்மை மகிமையை /2
மேன்மை மேன்மை மகிமையை
பாவிக்கு உந்தன் நாமமே
ஆரோக்கியம் ஜீவனாம் /2
பயமோ துக்க துன்பமோ

ஓட்டும் இன்கீதமாம் /2
ஓட்டும் ஓட்டும் இன்கீதமாம்
உமது சத்தம் கேட்குங்கால்
மரித்தோர் ஜீவிப்பார் /2
புலம்பல் நீங்கும் பூரிப்பால்
நிர்பாக்கியர் நம்புவார் /2
நிர்பாக்கியர் நிர்பாக்கியர் நம்புவார்
ஊமையோர் உம்மை போற்றிடுவார்
செவிடர் கேட்டிடுவார் /2
ஊனர் சந்தோஷத்தால் குதித்திடுவார
அந்தகர் காணுவார் /2
அந்தகர் அந்தகர் காணுவார்
என் ஆண்டவா என் தேவனே
பூலோக எங்கணும் /2
பிரஸ்தாபிக்க உம் நாமமே
பேர் அருள் ஈந்திடும் /2
பேர் அருள் அருள் ஈந்திடும்

18.கண்களை ஏறெடுப்பேன்


என் பர்வதங்கள் நேர் கண்களை ஏறெடுப்பேன்
விண்மண் உண்டாக்கிய யாவேயிடமிருந்து /2
எண்ணில்லா ஒத்தாசை எந்தனுக்கே வரும்
காலைத் தள்ளாடவொட்டார் உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாடவொட்டார்
இதோ இஸ்ரயேலை காக்கிறவர் என்றும் /2
உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லை
- கண்களை ஏறெடுப்பேன்
உனக்கு நிழல் அவரே நின் வலப்பக்கத்தில்
உனக்கு நிழல் அவரே
பகலில் வெயிலோ ராவில் நிலவோ /2
சேதப்படுத்தாது காக்கிறவர் அவர் - கண்களை ஏறெடுப்பேன்
எல்லா தீமைகட்கும் உன்னை விலக்கியே
எல்லா தீமைகட்கும்
இதுமுதற்கொண்டுன் போக்குவரத்தையும் /2
உன்னாத்துமாவையும் நாடோறும் காப்பவர்
- கண்களை ஏறெடுப்பேன்

19.அஞ்சாதிரு என் நெஞ்சமே


உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண் பார்ப்பேன் என்கிறார்
இக்கட்டில் திகையாதிரு
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார்
தாவீதும் யோபும் யோசேப்பும்
அநேக நீதிமான்களும்
உன்னிலும் வெகுவாய்
கஸ்தி அடைந்தும் பக்தியில்
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்
கருத்தாய் தேவ தயவை
எப்போதும் நம்பும் பிள்ளையை
சகாயர் மறவார்
மெய்பக்தி உன்னில் வேர் கொண்டால்
இரக்கமான கரத்தால்
அணைத்துப் பாலிப்பார்
என் நெஞ்சமே, மகிழ்ந்திரு
பேய், லோகம், துன்பம் உனக்கு
பொல்லாப்புச் செய்யாதே
இம்மானுயேல் உன் கன்மலை
அவர் மேல் வைத்த நம்பிக்கை
அபத்தம் ஆகாதே

20. அருள்மாரி எங்குமாக


பெய்ய அடியேனையும்
கர்த்தரே நீர் நேசமாக
சந்தித்தாசீர்வதியும்
என்னையும், என்னையும்
சந்தித்தாசீர்வதியும் //2
என் பிதாவே பாவி என்னை
கைவிடாமல் இரங்கும்
திக்கில்லா இவ்வேழை என்னை
நோக்கிப் பார்த்துச் சேர்த்திடும்
என்னையும், என்னையும்
நோக்கிப் பார்த்து சேர்த்திடும் //2
யெஷுஆவே நீர் கைவிடாமல்
எங்கள் பாவம் நீக்கிடும்
ரத்தத்தாலே, மாசில்லாமல்
சுத்தமாக்கியருளும்
என்னையும், என்னையும்
சுத்தமாக்கியருளும் //2
தூய ஆவியால் விடாமல்
என்னில் க்ரியை செய்திடும்
பாதை காட்டி கேடில்லாமல்
என்றும் காத்து ரட்சியும்
என்னையும், என்னையும்
என்றும் காத்து ரட்சியும் //2

21. ஆ கர்த்தாவே! தாழ்மையாக


திருப்பாதத்தண்டையே
தெண்டனிட ஆவலாக
வந்தேன் வல்ல மா யாவே
உம்மை நாடி, உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்
என் பிரார்த்தனையைக் கேளும்
அத்தியந்தம் பணிந்தேன்
கெஞ்சும் என்னை ஏற்றுக்கொள்ளும்
நான் உம் சொந்தம் ஆனேனே
உம்மை நாடி, உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்
பாவம் தீர்க்கும் பலியான
தேவ ஆட்டுக் குட்டியே
நீரே எங்கள் பரிகாரி
ஞானம், மீட்பும் ஆனோரே
உம்மை நாடி, உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்

22. நான் உம்மைப் பற்றி ரட்சகா


வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்
சிலுவை அண்டையில்
நம்பி வந்து நிற்கையில்
பாவப் பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கி பாடுவேன்
ஆ உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பி சார்வதால்
நீர் கை விடீர் இவ்வேழையை
காப்பீர் தேவ ஆவியால் - சிலுவை
மா வல்ல வாக்கின் உண்மையைக்
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த ஆத்மாவை
விடாமல் காக்கிறீர் - சிலுவை
நீர் மாட்சியோடு ஆளுவீர்
அப்போது களிப்பேன்
நித்திய ஜீவன் கொடுப்பீர்
மெய் பாக்யம் அடைவேன் - சிலுவை

23. திவ்ய அன்பின் சத்தத்தை ரட்சகா


கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவா
ஆவல் கொண்டிதோ வந்தேன்
இன்னும் கிட்டகிட்ட
சேர்த்துக்கொள்ளுமேன்
பாடுபட்ட ரட்சகா
இன்னும் கிட்டகிட்ட
சேர்த்துக்கொள்ளுமேன்
ஜீவன் தந்த ரட்சகா
என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
நாடித்தேட செய்யுமேன் - இன்னும் கிட்டகிட்ட
திருப் பாதத்தில் தங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய் சந்தோஷம் ஆகிறேன் - இன்னும் கிட்டகிட்ட
இன்னும் கண்டிராத பேர் இன்பத்தை
நித்யம் பெற்று வாழுவேன்
தேவ அன்பின் ஆழமும், நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன் - இன்னும் கிட்டகிட்ட

24. என் அருள் மீட்பர் யெஷுஆவே


சிலுவைக் காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்
என் மீட்பர் சிலுவையல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்?
சிற்றின்பம் யாவும் அதனால்
தகாததென்று தள்ளுவேன்
கை, தலை, காலிலும் இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சி போலுண்டோ
முட்கிரீடமும் ஒப்பற்றதே
சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்?
என் ஜீவன், சுகம், செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்
மாந்தர்க்கு மீட்பை கஸ்தியால்
சம்பாதித்தீந்த யெஷுஆவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே

25. பாவ சஞ்சலத்தை நீக்க


யெஷுஆ நண்பர்தான் உண்டே
என்னே மா பாக்கியம் இது
பாவ பாரம் கொட்டிட
அவரிடம் சொல்லாவிடில்
வேதனை கலக்கமே
துன்பம் துக்கம் மாறி போகும்
ஊக்கமான ஜெபத்தால்
இச்சை தூண்டும் சோதனையும்
பரீட்சை கஷ்டமும் உண்டோ
நெஞ்சமே சோர்ந்து போகாதே
கர்த்தரிடம் சொல்லிடு
அறிவார் நம் பெலவீனம்
துக்கம் எல்லாம் தாம் ஏற்பார்
அவ்வாறான ஓர் நண்பரை
கண்டுகொள்ளக் கூடுமோ!
பார கவலை துயரால்
பலவீனன் ஆனாயோ
உற்றார் கைவிட்டு இகழ்ந்து
நொந்து குன்றி போனாயோ
மீட்பர் புகலிடமாமே
அவரிடம் சொல்லிடு
தம் கரத்தால் தாங்கிக் காப்பார்
அங்கே ஆறுதல் காண்பாய்
மோசம் நாசம் நேரிட்டாலும்
தஞ்சம் யெஷுஆ பாதமே
பந்து ஜனம் சாகும்போதும்
அவரண்டை சேர்ந்திடு
நோக்குவார் உன் நெஞ்சின் நோவை
வழுவாது தாங்குவார்
ஒப்பில்லா மா நண்பர் அவர்
கிருபாசனம் உண்டே

26. நாற்பது நாள் ராப்பகல்


உபவாசம் பண்ணினீர்
நாற்பது நாள் முடிவில்
சோதிக்கப்பட்டும் வென்றீர்
நீர் வனாந்திர நிலையை
நாடினாற்போல் நாங்களும்
நாடி சத்யம் தியானிக்க
உம்மாவியை அருளும்
உம்மைப்போல நாங்களும்
லோகத்தை வெறுக்கவும்
உபவாசம் பண்ணவும்
ஜெபிக்கவும் கற்பியும்
சாத்தான் சீறி எதிர்க்கும்
போதெம் தேகம் ஆவியை
சோர்ந்திடாமல் காத்திடும்
வென்றீரே நீர் அவனை
அப்போதெங்கள் ஆவிக்கும்
மா சமாதானம் உண்டாம்
மெய்தூதர்கள் போதிக்கும்
பாக்யவான்கள் ஆகுவோம்

27. எந்தன் ஜீவன், யெஷுஆவே, சொந்தமாக ஆளுமே


எந்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும்

எந்தன் கை பேரன்பினால் ஏவப்படும் எந்தன் கால்
சேவை செய்ய விரையும் அழகாக விளங்கும்
எந்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும் என் வாய்
மீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும்
எந்தன் ஆஸ்தி யெஷுஆவே, முற்றும் அங்கீகரிப்பீர்
புத்தி கல்வி யாவையும் சித்தம்போல் ப்ரயோகியும்
எந்தன் சித்தம், யெஷுஆவே ஒப்புவித்து விட்டேனே
எந்தன் நெஞ்சில் தங்குவீர் அதை நித்தம் ஆளுவீர்
திருப்பாதம் பற்றினேன் எந்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய்

28. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா


ஒப்பில்லா ஞான ஸ்நானத்தினால்
பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா
ஆட்டு குட்டியின் ரத்தத்தினால்
மாசில்லா சுத்தமா
திரு புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கி விட குணம் மாறிற்றா
ஆட்டு குட்டியின் ரத்தத்தினால்
பரலோக சிந்தை அணிந்தீர்களா
வல்ல மீட்பர் தயாளத்தினால்
மறு ஜென்ம குணம் அடைந்தீர்களா
வல்ல மீட்பர் தயாளத்தினால் - மாசில்லா சுத்தமா
தேவ ராஜ்யம் வர களிப்பீர்களா
தூய நதியின் ஸ்நானத்தினால்
ஜீவ கரையேறி சுகிப்பீர்களா
ஆட்டு குட்டியின் ரத்தத்தினால் - மாசில்லா சுத்தமா

29. சகோதரர்கள் ஒருமித்து சஞ்சரிப்பது எத்தனை


மகா நன்மையும் இன்பமும் ஆசீர்வாதமும் ஆனது
ஆரோன் சிரசில் வார்த்த நல் அபிஷேகத்தின் தைலந்தான்
தாடி அங்கிகளின் மேல் ஒழுகுமானந்தம் போலவே
சீயோன் பர்வதங்களிலும் இசைந்த எர்மோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெய்கின்ற திவலைப் பனியைப் போலவே
வானம் பூமி இரண்டிற்கும் தேவன் யாவே தருகிற
ஆசீர்வாதமும் ஜீவனும் அங்கே என்றுமுள்ளதே.

30. யெஷுஆவுக்காக நில்லும், சிலுவை வீரரே


அவரின் ராஜகொடி ஓங்கி உயர்த்துமே
மாற்றாரை சர்வமாக அழிக்கும் வரையில்
வெற்றி மேல் வெற்றி தந்து
சேனைமுன் செல்கிறார்
யெஷுஆவுக்காக நில்லும் சிலுவை வீரரே
அவரின் பெலன் சாரும் உன் பெலன் நம்பாதே
உன் சொந்த ஆயுதங்கள் கைவிடுமே உன்னை
தேவ சர்வாயுதத்தை
அணிந்து போராடு
யெஷுஆவுக்காக நில்லும் சிலுவை வீரரே
கடமையோ மோசமோ அழைக்கும் வேளையில்
ஜெபத்தோடு விழிப்பாய் என்றும் நீ இருந்தால்
அணுகா குறையேதும்
கிறிஸ்து உன் கர்த்தரே
யெஷுஆவுக்காக நில்லும் சிலுவை வீரரே
கடமையோ மோசமோ அழைக்கும் வேளையில்
ஜெபத்தோடு விழிப்பாய் என்றும் நீ இருந்தால்
அணுகா குறையேதும்
கிறிஸ்து உன் கர்த்தரே

31. அன்பே பிரதானம் - தியாகஅன்பே பிரதானம்


பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளிலெல்லாம் - அன்பே
பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகலவென்னும் கைம்மணியாமே - அன்பே
என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பில்லையானால் அதில் பயனில்லை - அன்பே
துணிவுடன் உடலைச் சுடக்கொடுத்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை - அன்பே
சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள - அன்பே
புகழ் இறுமாப்பு பொழிவு பொறாமை
பகை அநியாயப் பாவம் செய்யாது - அன்பே
சினம் அடையாது தீங்கு எண்ணாது
தினம் அழியாது தீமை செய்யாது - அன்பே
சகலமும் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைப்பட என்றும் மேன்மை பெற்றோங்கும் - அன்பே

32. அனுக்ரக வார்த்தையோடே - இப்போ


அடியாரை அனுப்பும் ஐயா
மனமதில் தயவுறும் மகத்துவபரனே
வந்தனம் உமக்காமென் //2
நின்திரு நாமமதில் - கேட்ட
தூய்மையான மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திட
தேவா நின்னருள் புரிவாய் //2
தோத்திரம், புகழ், மகிமை - கீர்த்தி
துதிகனம் தினமுமக்கே
பாத்திரனே அதிசோபித பரனே
பாதசரண் ஆமென் //2

33. உந்தன் சுயமதியே நெறி என்றுகந்து சாயாதே அதில் நீ மகிழ்ந்து மாயாதே /2


சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு
அதின் தந்திரப் போக்கை விட்டோடு
கதி தேடு, கதி தேடு - உந்தன் சுய
துஷ்டர் தம் ஆலோசனைப்படியே
தொடர்ந்திட்டமதாய் நடவாதே
தீயர் கெட்ட வழியில் நில்லாதே
அது தீதே, அது தீதே - உந்தன் சுய
சக்கந்தக்காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே
அவர் ஐக்யம் நலம் என்றெண்ணாதே
அதொண்ணாதே, அதொண்ணாதே - உந்தன் சுய
நான் எனும் எண்ணமதால் பிறரை
அவமதிப்பது வெகு பாவம்
அதின் மேல் நிற்குமே தேவ கோபம்
மனஸ்தாபம், மனஸ்தாபம் - உந்தன் சுய
மைந்தனே தேவ மறைப்படி தேவன்
வழுத்தும் மதிதனைக் கேளாய்
தீங்கொழித் திதமாய் மனந் தாழாய்
அருள் சூழாய், அருள் சூழாய் - உந்தன் சுய

34. எங்கும் புகழ் யெஷுஆ ராஜனுக்கே எழில் மாட்சிமை வளர் அன்பர்களே


உங்களையல்லவோ உண்மை வேதம் காக்கும்
உயர் வீரரென தேவன் அழைக்கிறார் - எங்கும் புகழ்
உங்களையல்லவோ உண்மை வேதம் காக்கும்
உயர் வீரரென தேவன் அழைக்கிறார் - எங்கும் புகழ்
கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன்பட்டவர் கண் திறக்கவே
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் - எங்கும் புகழ்
தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்தக் கல்வி?
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பது உங்கள் பாரமன்றோ? - எங்கும் புகழ்
சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கி
கருணை நிறை வசனம் கற்றிடுவீர் - எங்கும் புகழ்

35. கர்த்தாவே என் பெலனே உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்


என் ஜீவனும் நீர், என் ஞானமும் நீர்
என் ரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர் - கர்த்தாவே
உமது வேதத்தின் அதிசயத்தை
பார்க்கும்படி என் கண்களை
திறந்து வேதத்தை அருள்செய்யும் /2
உம் ப்ரமாணங்களை போதியும் /2 - கர்த்தாவே
உம் வசனம் என் கால்களுக்கு
தீபமும் பாதைக்கு வெளிச்சமாமே
உமக்கு பயப்படும் ஏற்ற வாக்கை /2
என் இருதயத்தில் வைத்திடும் /2 - கர்த்தாவே
பூமியில் நான் ஒரு பரதேசி
உம் கற்பனைகளை மறையாதேயும்
பரதேசியாய் நான் தங்கும் வீட்டிலே /2
உம் ப்ரமாணங்கள் கீதமாயின /2 - கர்த்தாவே
உம் வேதம் மகிழ்ச்சியாயில்லையாயின்
நான் என் துக்கத்தில் ஆழ்ந்திருப்பேன்
உம் சாட்சிகள் எனக்கு இன்பமும் /2
என் ஆலோசனைக்காரருமாம் /2 - கர்த்தாவே
உம் கிருபையின்படி என்னை நினைத்து
ரட்சிப்பினால் என்னை சந்தியும்
பூரண நாள் வரை அதிகரிக்கும் /2
சத்திய ஒளியால் நடத்திடுமே /2 - கர்த்தாவே

36. என் மீட்பர் ராஜனாய் இருக்கையிலே எனக்கென்ன குறைவுண்டு நீ சொல், மனமே //2


என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தார்
என்னோடிருக்கவே எழுந்திருந்தார்
விண்ணுலகுயர்ந்தார், உன்னதஞ் சிறந்தார்
மித்திரனே, சுகபத்திரமருளும் - என் மீட்பர்
பாவமோ, மரணமோ, பாதக பிசாசோ
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குரு நேசன்
சஞ்சலம் இனியேன்? நெஞ்சமே, மகிழ்வாய் - என் மீட்பர்
ஆட்சி செய்திடுவார், அருள்மிகு அளிப்பார்
அம்பலந்தனில் எனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்
ஜீவ வழி சத்யம் வாசல் உயிரெனும் - என் மீட்பர்
கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டுங் கைவிடாது இருப்பார்
பாவமன்னிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்
தேவராஜ்ஜியத்தில் என்தனை சேர்ப்பார் - என் மீட்பர்

37. என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன் ஏற்றுக்கொள்ளும் தேவனே


தேவ சித்தப்படி தம்மை பலி செய்த
யெஷுஆவின் மூலம், இதோ படைக்கிறேன் - என்னை ஜீவ
அந்தகாரத்தினின்றும் பாவப் பேய்
அடிமைத்தனத்தினின்றும்
சொந்த மைந்தன் ரத்த கிரயத்தால் மீட்ட
உந்தன் அன்புக்கு இதோ அடிமையாய் - என்னை ஜீவ
ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீனமாக்கி வைத்தேன்
பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன்,கருணைசெய் என் தேவா -என்னை ஜீவ
நீதியினாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு
ஜோதி பரிசுத்த பாளயமாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை - என்னை ஜீவ

38. எனது கர்த்தரின் ராஜரீக நாள் எப்போ வருகுமோ? ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி எப்போ பெருகுமோ?


தேவசுதனின் அடையாளம் விண்ணில் தோன்றிவிட்டதே
பிரதான தூதரின் கடைசி எக்காள தொனி முழங்குதே
ஜெகத்தில் மரித்த முதற்பேறானோர் உயிர்த்தெழுந்தாரே
ஜெகத்து ஜனங்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து வருவாரே
ஜாதிகட்கு கொடியாய் ஈசாயின் வேர் எழும்பிற்றே
சகலரும் அவர் கொடியின் கீழ் வந்து பணிந்து கொள்வாரே
நீதியாய் தானே மேசியா எங்கும் ஆளுகை செய்வார்
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே
நித்தம் பிரபுக்கள் நியாயமாக துரைத்தனம் செய்வார்
சஞ்சலம் தவிப்பு கண்ணீர் யாவும் ஓடிப்போகுமே
நித்தியமான மகிழ்ச்சி அவர்கள் தலைமேல் இருக்குமே
நித்திய ஜீவனை பெற்றிட எந்தன் மனம் துடிக்குதே - எனது கர்த்தரின்

39. உம்மைப்போல் யாருண்டு யாவே தேவனே இந்த வான்புவியில் உம்மைப்போல் யாருண்டு


பாவப் பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் அழைத்தீர்
பாவப் பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் ரட்சித்தீர்
உலகம், மாமிசம் பிசாசுக்கடியில்
அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்
மனம்போல் நடந்தேன் தூய்மையை மறந்தேன்
ஏமாற்றம் அடைந்தேன் நிம்மதி இழந்தேன்
என்னையா தேடினீர் யாவே தேவனே
உம்மை தேடாத ஓர் துரோகி நான்
என்னையா தேடினீர் யாவே தேவனே
அடிமை உமக்கே இனி நான் - உம்மைப்போல்
இன்றைக்கு நான் செய்யும் இந்த தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட உம்மருள் ஈந்திடும்
நொறுக்கும், உருக்கும் உருவாக்கி வனையும்
உமக்கே உகந்த தூய பாத்திரமாய்
ஐம்புலன்களையும் யெஷுஆவுக்குள் அடக்கும்
யெஷுஆவின் ஆவியால் நிரப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ
வைராக்யம் என் உள்ளம் தந்திடும் - உம்மைப்போல்
வீட்டிலும், ஊரிலும் செல்லும் இடமெங்கும்
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
மரணம் வரையென் சிலுவை சுமந்து
யெஷுஆவை பின் செல்ல நீர் என்னை ஏவிடும்
முழங்காலில் நிற்க வேதத்தை அறிய
தினந்தோறும் தேவா உணர்த்தும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
என்றுமே வராமல் காத்திடும். - உம்மைப்போல்

40. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்


துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
ஜெபத்தால் விரைவிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
கிறிஸ்து காக்க வல்லோர்
காக்கும் வல்ல மீட்பர்
உண்டெனுக்கு /3
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனுக்கு
காத்திடுவார் என்றுமே
ஐயம் இருந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்று
யெஷுஆ கை தூக்கினார்.
முற்றும் என் உள்ளம் மாறிற்று
கிறிஸ்து காக்க வல்லோர் - காக்கும் வல்ல
ஐயம் இருந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்று
யெஷுஆ கை தூக்கினார்.
முற்றும் என் உள்ளம் மாறிற்று
கிறிஸ்து காக்க வல்லோர் - காக்கும் வல்ல

41. கர்த்தரின் பந்தியில் வா சகோதரா


கர்த்தரின் பந்தியில் வா //2
யெஷுஆ அன்பாய் சொந்த ரத்தத்தை சிந்தின
காரணத்தை மனப்பூரணமாய் எண்ணி
கர்த்தரின் பந்தியில் வா
ஜீவ அப்பம் அல்லோ?
கிறிஸ்துவின் திருச்சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ?
உனக்காய் பகீரப்பட்டதல்லோ?
தேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீ
புசித்து அவரில் என்றும் பிழைத்திட
கர்த்தரின் பந்தியில் வா
தேவ அன்பைப் பாரு
கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு
பாவக் கேட்டை கூறு
பஸ்காவின் பந்திதனில் சேரு
சாவுக்குரிய மாபாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அந்நியன் ஆகாதே
கர்த்தரின் பந்தியில் வா
அன்பின் விருந்தாமே
கர்த்தருடன் ஐக்கியப் பந்தியாமே
துன்பம் துயர் போமே
இருதயம் சுத்த திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா
கர்த்தரின் பந்தியில் வா

42. காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே


ஞாலத்தில் பரனுனை நாட்டின நோக்கத்தைச்
சீலமாய் முடிப்பவர் மூலம் பிழைத்திடாயோ //2
-காலத்தின்
மதியை இழந்து தீய வழியில் நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் ரட்சண்ய வாழ்வை கண்டு நீ மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? //2
- காலத்தின்
இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
யெஷுஆ உன்னை அழைத்தாரல்லோ
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயின்
பகற்கால முடியும் ராக் காலத்தில் என்ன செய்வாய்? //2
- காலத்தின்
நோவாவின் காலத்தில் உரைத்து பல ஆண்டு
நோக்கிப் பின் அழித்தாரன்றோ
தவறாத கிருபையால் தாங்கி உனக்கீந்த
தவணையின் காலம் இவ்வாண்டு முடியலாமே //2
- காலத்தின்
யெஷுஆ தம் சீஷருக்குரைத்த யுகத்தின்
முடிவை நீ அறியாயன்றோ
எந்தக் காலமும் சிரெஞ் சீவியென்றெண்ணிடாமல்
ஏற்ற நல் ஆயத்தமாய் என்றும் நீ இருந்திடாயோ //2
- காலத்தின்

43. காலமே தேவனைத் தேடு - ஜீவ


காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
காலமே தேவனைத் தேடு
சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு
சீரான நித்திய ஜீவனை நாடு
காலமே தேவனைத் தேடு
யாவே தம் ஏக மைந்தனை
மாண்ட மன்னுயிர் மீட்க பலியாய் தந்தாரே
யாவே தம் ஏக மைந்தனை
உன் சிருஷ்டிகரை நீ உதயத்தில் எண்ணு
உள்ளங்கனிந்து துதிகனம் பண்ணு
காலமே தேவனைத் தேடு
பாவச் சோதனையை வெல்லு
கெட்ட பாருடன் பேயுடன் போருக்கு நில்லு
பாவச் சோதனையை வெல்லு
மாம்சம் தப்பறைக்கு எதிர்த்து போராடு
சிந்தனை செய், யாவே தேவனைப் பணிந்து
காலமே தேவனைத் தேடு
சிறுவர்கள் என்னிடம் சேர
தடை செய்யாதிருங்கள் என்றார் தேவமைந்தன்
சிறுவர்கள் என்னிடம் சேர
அவர்களைப் போலவே மாறி எளிய
விசுவாசத்தோடென்றும் தேவனை அண்ட
காலமே தேவனைத் தேடு
வெற்றி உனக்குக் கைகூட
சத்ய வேதன் கிருபை வரத்தை மன்றாட
வெற்றி உனக்குக் கைகூட
காலைத் தேடுவோர் எனைக் கண்டடைவாரே
கண் விழித்து ஜெபம் செய்யுமென்றாரே
காலமே தேவனைத் தேடு

44. ஒன்றான மா யாவே தேவ
மைந்தன் யெஷுஆ கிறிஸ்துவுக்கு
ஸ்தோத்திரம் புகழ்ச்சி நித்திய
கீர்த்தனம் என்றும்


தம் மகிமையை துறந்து
சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார், நம்மை ஒன்றாய் கூட்டினார்
அருள் ஜீவன் சூட்டினார்
கிருபையால் தேற்றினார் தேற்றினார் என்றும் - ஒன்றான
பாதகப் பிசாசால் வந்த
தீதெனும் பாவத்தால் நொந்த
பாவிகளான நம்மை தேடி மீட்டாரே
தேவ பிதாவுக்குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசுவாச வீட்டாரே
மாசணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் பாவத்துயர் போடுங்கள்
ஜெயத்தைக் கொண்டாடுங்கள்
துதி சொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும் - ஒன்றான
விண்ணிலுள்ள ஜோதிகளும்
எண்ணடங்கா சேனைகளும்
விந்தையாய் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே
மண்ணிலுள்ள ஜாதிகளும் இன்னும் எல்லா சிருஷ்டிகளும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே
யாவே பிதாவுக்குகந்த புண்ணியக் குமாரனைக்
கொண்டாடிட அவர் பாதம் தேடிட
கிருபை திரள் கூடிடத்
துதி புகழ் பாடிட பாடிட என்றும் - ஒன்றான
சத்திய ஆசாரியரும்
பாத்திர லேவியர்களும்
நீதியாய் ஆளுகை செய்து என்றும் ஓங்கவே
எத்திசை மனிதர்களும் ஒத்திசைவாய் கீழ்ப்படிந்து
தேவனோடு சமாதானம் ஆகி வாழவே
யெஷுஆவோடு திருச்சபை தேவ மகிமையில் ஆள
உயர்ந்து தீயோன் முற்றும் அழிந்து
தாசர் தாழ நடந்து
கிறிஸ்துவுக்கு ஜெயந்தான் ஜெயந்தான் என்றும் - ஒன்றான

45. தெய்வன்பின் வெள்ளமே
திருவருள் தோற்றமே மெய் மனதானந்தமே
செய்ய நின் செம்பாதம் சேவிக்க இவ்வேளை
அய்யா, நின் அடி பணிந்தேன் //2


சொந்தம் உனதல்லால்
சோர வழி செல்ல எந்தாய் துணிவேனோ யான்?
எந்தன் ஜெப தூப பூமாலை கோர்த்து நின்
பொற் பாதம் பிடித்துக் கொள்வேன் //2
பாவச் சேற்றில் பல வேளை
பலமின்றிப் பாதையை தவறிடினும்
கூவி விளித்து தன் மார்போடணைத்தன்பாய்
குற்றம் பொறுத்த தேவா //2
மூர்க்க குணம் கோபம்
லோகம் சிற்றின்பமும் மோக ஏக்கமனதால்
தாக்கி யான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தற்பரா தற்காத்தருள்வாய் //2
ஆசை பாசம் பற்று
அனைத்தையும் பீடத்தில் ஆயனே யான் படைத்தேன்
மோச வழிதனை முற்றும் அகற்றி என்
யாவேயை நினைத்தொழுவேன் //2
மரணமோ, ஜீவனோ
துன்பமோ இன்பமோ நிகழ் காலம், வருங் காலமோ
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை? //2 - தெய்வன்பின்

46. யாவே தேவா உமதண்டையில் இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் //2


மாவலிய கோரமாக
வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன் - யாவே தேவா
யாக்கோபைப்போல், போகும் பாதையில்
பொழுதுபட்டு
ராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன்
வாக்கடங்கா வல்ல தேவா - யாவே தேவா
பரம ஞான படிகளைக் கொண்டு
என் பாதை தோன்ற
பண்ணும் ஐயா எந்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை அழைக்கும்
அன்பின் தூதராக செய்யும் - யாவே தேவா
நித்திரையை விட்டு விழித்து
காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மை போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என் துயர்கல் நாட்டுவேனே
எந்தன் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மை கிட்டிச் சேர்வேன் - யாவே தேவா

47. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்


யெஷுஆ ராஜன் நம் சொந்தமாயினார்
இந்த பார்தளத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்
ஆ ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மா பெரும் பாக்கியமே
இந்த பார்தளத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார் //2
தூரம் சென்ற என்னை அன்பாய் அழைத்துவிட்டார்
இந்த நிலையிலே காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
ராஜ்ய நாள்வரை காத்துக் கொள்வேன் - ஆ ஆ ஆனந்தமே
மரண இருளின் பொல்லாப்புக்கு நான் அஞ்சேன்
அவர் கோலும் தடியும் தேற்றுமே
அவர் கிருபையும் நன்மையும் என்றென்றுமே
என்னைத் தொடர்ந்து சூழ்ந்திடுமே - ஆ ஆ ஆனந்தமே
அவர் ராஜ்ய நாளிலே என்னை உயிர்த்தெழுப்பி
அன்பாய் அவரோடு சேர்த்துக் கொள்வார்
நித்ய ஜீவனை எனக்கு தந்தருளி
அவர் சமுகத்தில் மகிழச் செய்வார் - ஆ ஆ ஆனந்தமே

48. கர்த்தாவே தேவர்களில்


உமக்கொப்பானவர் யார்வானத்திலும் பூமியிலும் உமக் உமக்கொப்பானவர் யார் /2 வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் //2
செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச்சென்றீர் //2
சொற்பக் கால அறுவடையில்
ஜீவகரை சேர்த்திடுவீர் //2 - உமக்கொப்பானவர்
கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகந்தீர்த்தீர் //2
மெய் கன்மலை கிறிஸ்து யெஷுஆவால்
ஜீவதண்ணீர் கொடுத்தீரே //2 - உமக்கொப்பானவர்
பனிமேல் பொழிந்த உணவால்
உந்தன் ஜனங்களைப் போஷித்தீரே //2
மெய்மன்னாவாம் கிறிஸ்து யெஷுஆவால்
மாந்தர்க்கு ஜீவன் தந்தீர் //2 - உமக்கொப்பானவர்

49. தேன் இனிமையிலும், யெஷுஆவின் நாமம் திவ்ய மதுரமாமே


அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய்
தினமும் நீ மனமே - தேன் இனிமை
பூலோகந்தனிலே நேசமதாக
கஷ்டத்தை உத்தரித்தே
பாவ கசடதை அறுத்து சாபத்தை தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே - தேன் இனிமை
காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும்
என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே - தேன் இனிமை
துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம்
நீயும் அன்பாக சேர்ந்தால் அணைத்துனை காப்பார்
ஆசை கொள் நீ மனமே - தேன் இனிமை
பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம்
அதை பிடித்துக்கொண்டால்தான் பேரின்ப வாழ்வைப்
பெறுவாய் நீ மனமே - தேன் இனிமை

50. விந்தை கிறிஸ்து யெஷுஆ ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை /2


சுந்தரம் மிகும் இந்தப் பூவில் /2
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - விந்தை
திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிக இருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு /2
உரிய பெருமை யாவும் அற்பமே - விந்தை
உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம், வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கி /2
தூய்மையடைந்து மேன்மையாகினேன் - விந்தை
சென்னி விலா கைகானின்று
சிந்துததோ துயரோடன்பு
மன்னா இதைப் போன்ற காட்சி /2
எந்நாளிலுமே எங்கும் காணேன் - விந்தை
இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும் /2
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் - விந்தை

51. சந்தோஷம் பொங்குதே /2 சந்தோஷம் என்னில் பொங்குதே அல்லேலூயா யெஷுஆ என்னை ரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார் சந்தோஷம் பொங்கி பொங்குதே


வழி தப்பி நான் திரிந்தேன்
பாவ பழியதை சுமந்தலைந்தேன் //2
அவர் அன்பின் குரலே
அழைத்தது என்னையே //2
விசுவாசத்தாலே எந்தன்
பாவம் நீங்கிற்றே //2 - சந்தோஷம்
சத்துரு சோதித்திட
தேவ உத்திரவுடன் வருவான் //2
ஆனால் யெஷுஆ கைவிடார்
தானாய் வந்து ரட்சிப்பார் //2
இந்த நல்ல யெஷுஆ எந்தன்
சொந்தம் ஆனாரே //2 - சந்தோஷம்

52. ஸ்தோத்திரம் யெஷுஆ ராஜா உமக்கென்றும்


ஸ்தோத்திரம் யெஷுஆ ராஜா //2
ஸ்தோத்திரம் செய்கின்றோம் உம் அடியார்
திருநாமத்தின் ஆதரவில் //2
இன்றைத் தினமதிலும் ஒருமித்து
கூட உம் நாமத்தினால் //2
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே //2
நின் உதிரமதினால் திறந்த
நின் ஜீவ புது வழியாம் //2
நின் அடியார்க்கும் பிதாவின் சன்னதி
சேரவுமே சந்ததம். //2
இத்தனை மகிமையான அழைப்பு
இப்புழுக்களாம் எங்களுக்கு //2
இத்தனை மா தயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம் //2
வான, புவி சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும் //2
ஓய்வின்றி பாடித் துதிக்க மகத்துவ
மன்னவனே உமக்கு //2
நீரல்லால் எங்களுக்கு இவ்வுலகில்
யாருண்டு காருண்யரே //2
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேற்றமில்லை நேசரே //2

53. அழகாய் நிற்கும் யார் இவர்கள் சியோனில் நிற்கும் யார் இவர்கள் சேனைத் தலைவராம்
யெஷுஆவின் பொற்றளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள் ///2
அழகாய் நிற்கும் யார் இவர்கள்


ஒரு தாலந்தோ இரு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ, பெரிதானதோ
கொடுத்தப் பணி செய்து முடித்தோர் - அழகாய் நிற்கும்
காடு மேடாய் கடந்துசென்று
தேவ அன்பை பகர்ந்தவர்கள்
கர்த்தருடைய பலி ஆடாக
படைத்து தம்மை மரித்தவர்கள் - அழகாய் நிற்கும்
எல்லா ஜாதியார் எல்லா கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் யெஷுஆ ரத்தத்தால்
சீர்போராட்டம் செய்து முடித்தோர் - அழகாய் நிற்கும்
கிதியோனின் படை வீரராம்
யோர்தானடித்த எலியாவானோர்
போக்காட்டினை வனாந்தரமாய்
அனுப்பிவிட்ட ஆசாரியராம் - அழகாய் நிற்கும்
கிதியோனின் படை வீரராம்
யோர்தானடித்த எலியாவானோர்
போக்காட்டினை வனாந்தரமாய்
அனுப்பிவிட்ட ஆசாரியராம் - அழகாய் நிற்கும்

54. கிதியோனின் படை வீரராம் யோர்தானடித்த எலியாவானோர் போக்காட்டினை வனாந்தரமாய்
அனுப்பிவிட்ட ஆசாரியராம் - அழகாய் நிற்கும்


காருண்யத்தாலே யெஷுஆவை தந்தார்
தூய தேவ அன்பால்
இந்த பாழ் உலகில் தயைக் காட்டி உன்னை
மன்னித்து கழுவி அணைத்தார் - இந்த தேவன்
கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியால்
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீருற்றாய் மாற்றினாரே - இந்த தேவன்
இப்புவியாத்ரை கடந்திடுவாய்
தூய தேவ தயவால்
உன் சமாதானத்தின் உடன்படிக்கையை
உண்மையாய் யாவே காத்துக்கொள்வார் - இந்த தேவன்
வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
தூய தேவ ராஜ்யத்தில்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் - இந்த தேவன்

55. இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ்செய்கிறாரே


தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலே
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்து
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே //2 -இதோ மனுஷரின்
தேவ ஆட்டுக் குட்டியானவர்
அவரே ஆலயம் விளக்கும்
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகந்தீர்க்கும்
நித்ய ஜீவ நதியும் அவரே //2 - இதோ மனுஷரின்
சீயோனே உன் வாசல்களை
யாவே தேவனே நேசிக்கிறார்
சீர்மிகுந்திடுமே சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் யாவேயை //2 - இதோ மனுஷரின்

56. இம்மானுயேலின் ரத்தத்தால்


நிறைந்த ஊற்றுண்டே
எப்பாவத் தீங்கும் அதனால்
நிவிர்த்தியாகுமே /3
எப்பாவத் தீங்கும் அதனால்
நிவிர்த்தியாகுமே
மா பாவியான கள்ளனும்
அவ்வூற்றில் மூழ்கினான்
மன்னிப்பும் பேரானந்தமும்
அடைந்து பூரித்தான் /3
மன்னிப்பும் பேரானந்தமும்
அடைந்து பூரித்தான்
அவ்வாறே நானும் யெஷுஆவால்
விமோசனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன் /3
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன்
என் ராஜாவின் பிரசன்னத்தை
கண்டு பூரிக்கிறேன்
உலக மீட்பு நோக்கத்தை
கொண்டாடிப் போற்றுவேன் /3
உலக மீட்பு நோக்கத்தை
கொண்டாடிப் போற்றுவேன்
யாவே தேவனின் ராஜ்யத்தை
விஸ்வாசத்தால் கண்டேன்
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன் /3
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன்

57. உலகோர் உன்னை பகைத்தாலும்


உண்மையாய் அன்பு கூருவாயா
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா /2
உனக்காக யெஷுஆ மரித்தாரே
அவர்க்காக நீ என்ன செய்தாய் //2
அவர்க்காக நீ என்ன செய்தாய்
உலக மேன்மை அற்பமென்றும்
உலக ஆஸ்தி குப்பையென்றும்
உள்ளத்தில் என்றும் கூறுவாயா
ஊழியம் செய்ய வருவாயா /2 - உனக்காக
மேய்ப்பனில்லாத ஆடுகள்போல்
தீய திசையில் நிற்பவரை
மேய்ப்பன் யெஷுஆவை அறிந்த நீயும்
ஜீவ நதியண்டை நடத்துவாயா /2 - உனக்காக
சத்தியம் என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனைப்பேர்
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா? /2 - உனக்காக

58. உன்னதமானவரின் உயர்


மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே //2
அவர் செட்டையின்கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் //2
தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணும் அவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் என்பேன் //2 - அவர் செட்டையின்
இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் //2 - அவர் செட்டையின்
ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒருபோதிலும் உன்னை அணுகிடாதே
தேவன் உன் தாபரமே //2 - அவர் செட்டையின்
தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னை சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் //2 - அவர் செட்டையின்
ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னை தப்புவித்தே முற்றும் ரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் //2 - அவர் செட்டையின்

59. எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் பாடுவேன்


இந்நாள்வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே //2 - ஆஹா எண்ணிலடங்கா
என்னையும் மனுவாக்கினீரே
பாவம் சாபம் அனுமதித்தீர்
மீட்டு ஜீவனுக்கழைத்தீர்
தேவா உம்மைப் போற்றுவேன் - ஆஹா எண்ணிலடங்கா
ஆழியில் சத்துரு யாவும்
உம் புயத்தின் மகத்துவத்தால்
அமிழ்ந்தன என்றென்றுமாக
தேவா உம்மைப் போற்றுவேன் - ஆஹா எண்ணிலடங்கா
வானாதி வானங்கள் யாவும்
அதன் கீழுள்ள சிருஷ்டிகளும்
கூடுதே கிறிஸ்துவினாலே
தேவா உம்மைப் போற்றுவேன் - ஆஹா எண்ணிலடங்கா

60. எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் யெஷுஆவே உம்மை நான் துதிப்பேன், துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன்


ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே, என் கன்மலை நீரே - எந்த
வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே, என் பாதையில் நீரே - எந்த
துன்ப நேரத்தில் - இன்பமும் நீரே
இன்னல் வேளையில் என் ஆறுதல் நீரே - எந்த
ஞானமும் நீரே - நீதியும் நீரே
பரிசுத்தம் நீரே, என் ரட்சிப்பும் நீரே - எந்த

61. எனக்காய் ஜீவன் விட்டவரே


என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னை தம்மோடு சேர்த்திடுவாரே
யெஷுஆ போதுமே, போதுமே /2
எந்த நாளிலுமே, எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே
யெஷுஆ போதுமே
பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்துபோகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே - யெஷுஆ போதுமே
மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐஸ்வர்யம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் - யெஷுஆ போதுமே
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் - யெஷுஆ போதுமே

62. என் பாவம் தீர்ந்த நாளையே


அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய் கொண்டாடுவேன்
இன்ப நாள் இன்ப நாள்
என் பாவம் தீர்ந்துபோன நாள்
பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்பநாள் இன்ப நாள்
என் பாவம் தீர்ந்துபோன நாள்
இம்மானுயேல் இப்பாவியை
தம் சொந்தமாக்கிக் கொண்டனர்
சந்தேகம் நீக்கி மன்னிப்பை
தந்தென்னை அன்பாய்ச் சேர்த்தனர் - இன்ப நாள்
என் உள்ளமே, உன் மீட்பரை
என்றைக்கும் சார்ந்து வாழுவாய்
ஆருயிர் தந்த யெஷுஆவை
ஓர்க்காலும் விட்டு நீங்கிடாய் - இன்ப நாள்
ஆட்கொண்ட நேசா, எந்தனை
நாடோறும் தத்தம் செய்குவேன்
பின் ஜீவ வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன் - இன்ப நாள்

63. என்னை மறவா யாவே தேவாஉந்தன் தயவால் என்னை நடத்தும்


வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே - என்னை மறவா
பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
ஏழை என்னை நின் கையினின்று
எவரும் பறிக்க இயலாதே - என்னை மறவா
தாய் தன் சேயை மறந்துவிட்டாலும்
உன்னை மறவேன் என்றதாலே ஸ்தோத்திரம்
உள்ளங்கையில் என்னை வரைந்தீர்
உன்னதா எந்தன் புகலிடமே - என்னை மறவா
திக்கற்றோராய் கைவிடேனே
கலங்காதீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே - என்னை மறவா
உன்னைத் தொடுவோன் என் கண்மணியை
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே - என்னை மறவா
என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
கிருபையாக உம் ராஜ்ஜியத்தில்
ஏழை என்னை சேர்த்திடுமே - என்னை மறவா

64. எண்ணி எண்ணி துதி செய்வாய்


எண்ணில் அடங்காத கிருபைகட்காய்
என்றும் தாங்கிடும் உம் புயமே
இன்ப யெஷுஆவின் நாமமே //2
எண்ணி எண்ணி துதி செய்வாய்
உன்னை தாக்கும் எதிரியின்
கண்ணின் முன்னே பதறாதே //2
கண்மணிபோல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைப்பாரே //2
எண்ணி எண்ணி துதி செய்வாய்
யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ //2
எலியாவின் தேவன் இங்கே
உந்தன் விசுவாச சோதனையில் //2
எண்ணி எண்ணி துதி செய்வாய்
உனக்கு எதிராக
ஆயுதம் வாய்க்காதே //2
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசருக்கு நீதியவர் //2
எண்ணி எண்ணி துதி செய்வாய்

65. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா


ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்
ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம் //2
ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தத்தை பற்றிக் கொண்டு
நோக்கத்தையெல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர் - ஜெபமே ஜீவன்
ஆகாத நோக்கம் சிந்தனையும்
தகாத பார்வை செயலையும்
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வருந்தி வேண்டி நிற்கிறோமே - ஜெபமே ஜீவன்
இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூறெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம் - ஜெபமே ஜீவன்

66. அன்பு, யெஷுஆவின் அன்பு எந்தன் பாவத்தை நீக்கினதால் அந்த அன்பை நான் என்றும் விடேன் அல்லேலூயா அன்பை நான் என்றும் விடேன்


பாவியாக இருக்கையிலே பாரில் என்னைத் தேடி வந்த //2
பரிசுத்த தேவ அன்பு
அல்லேலூயா பரிசுத்த தேவ அன்பு - அன்பு
தத்தம் செய்ய என்னை இழுத்தார்
பாசமாய் அவரோடிணைத்தார் //2
மாபெரும் அன்பு இது
அல்லேலூயா மாபெரும் அன்பு இது - அன்பு
எந்தன் ஞானம் யெஷுஆ தானே
எந்தன் ஜீவனும் யெஷுஆ தானே //2
அவர் என்னை காக்கிறாரே
அல்லேலூயா அவர் என்னை காக்கிறாரே - அன்பு

67. தூய பந்தி சேர்ந்த கைகள்


சேவை செய்ய காத்திடும்
தூய தொனி கேட்ட செவி
தீக்குரல் கேளாமலும்
தூயர் தூயர் என்ற நாவு
வஞ்சனை பேசாமலும்
தூய அன்பைக் கண்ட கண்கள்
என்றும் நம்பி நோக்கவும்
தூய ஸ்தலம் சென்ற கால்கள்
ஒளியில் நடக்கவும்
தூய ஆவி பெற்ற எம்மில்
நவ ஜீவன் பொங்கவும்

68. போற்றித் துதிப்போம் எம் யெஷுஆ ராஜனை


புதிய கிருபையுடனே
நேற்றும், இன்றும், என்றும் மாறா
யெஷுஆவை நாம் என்றும் பாடித் துதிப்போம் //2
யெஷுஆ என்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசர் யெஷுஆவை நான் என்றும்
போற்றி மகிழ்ந்திடுவேன் //2
கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரம் கொண்டு மார்பில்
சேர்த்தணைத்த அன்பை என்றும் பாடுவேன் //2
- யெஷுஆ என்னும்
யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெயத்தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் //2
- யெஷுஆ என்னும்
இளைப்பாறுதலை உங்களுக்கு நான்
தருவேன் என்றவர் சொன்னதால்
தாழ்த்தி என்னை அவர் கையில்
தந்து ஜீவ பாதை என்றும் ஓடுவேன் //2
- யெஷுஆ என்னும்
தேவ ராஜ்ய சுவிசேஷம் சாட்சியாய்
சொல்ல என் கடமையானதால்
ஆவி ஆத்துமாவும் தேகம்
யாவும் தந்து என்றும் தொண்டு செய்குவேன் //2
- யெஷுஆ என்னும்

69. உம் நாமம் சொல்ல சொல்ல என் உள்ளம் மகிழுதையா என் வாழ்வில் மெல்ல மெல்ல மெய் இன்பம் பெருகுதையாஉம் நாமம் சொல்ல சொல்ல


மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும்
உம் தியாகம் ஈடாகுமா
உலகமே வந்தாலும், உறவுகள் சூழ்ந்தாலும்
உம் அன்புக்கு இணையாகுமா ////2 - உம் நாமம்
ஆதி நீர், அந்தம் நீர், ஒரேபேறானவர்
அனைத்திலும் முன்னானவர்
ஒளியல்லோ, வழியல்லோ, ஜீவ அப்பமல்லோ
என்னே! உம் நாமம் என்பேன் ////2 - உம் நாமம்
மேலானோர், கீழானோர் முழங்கால்கள் மடங்கிட
உம் நாமம் அதிசயமே
சமாதான பிரபுவாம், கர்த்தாதி கர்த்தாவாம்
வாழ்க உம் நாமம் என்பேன் ////2 - உம் நாமம்

70. நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி நீயுனக்குச் சொந்தமல்லவே /2 மீட்பர் கிறிஸ்து ராயர்க்கே சொந்தம் - நீயுனக்கு


சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே பரிசுத்த ரத்தம்
அவர் காயத்தில் வடியுது பாரே
வலிய மீட்கும் பலியால் கொண்டாரே
நித்திய ஜீவனை உனக்கீவாரே - நீயுனக்கு
இந்த நன்றியை மறந்துபோனாயோ
யெஷுஆவை விட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
உனது இதயம் மனம் சரீரம்
கிறிஸ்து யெஷுஆவுடையதல்லவோ? - நீயுனக்கு
பழைய பாவத்தாசை வருகுதோ?
தீமையின் மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
பாழான நிமிஷத் தாசை காட்டியே
அழிவுக்குள்ளே தள்ளுவானேன்? - நீயுனக்கு
பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே உலகைவிட்டு
மரிப்பினும் அவர்க்கே மரிப்பாயே
நரர்க்காய் மரித்து உயிர்த்த கிறிஸ்துவின்
நித்ய பாக்யத்தில் என்றும் நிலைப்பாய் - நீயுனக்கு

71. தேவன் நமக்கு அடைக்கலமும்
ஆபத்துக்காலத்தில் துணையுமானவர்
தேவன் நமக்கு அனுகூலமும்
ஆபத்துக் காலத்தில் பெலனுமானவர்

ஆகையால் பூமி நிலை மாறினும்
மலைகள் நடுக்கடலில் சாய்ந்து போனாலும்
அதன் ஜலங்கள் கொந்தளித்துப்பொங்கி /2
பர்வதங்கள் அதிர்ந்/தாலும் பயப்படோம் /2
- தேவன் நமக்கு
நதி ஒன்றுண்டு அதின் நீர்க்கால்கள்
தேவனது பரிசுத்த நகரத்தையும்
உன்ன/தமான/வர் வாசம் பண்ணும் /2
தூய ஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும் /2
- தேவன் நமக்கு
அதின் நடுவில் தேவன் இருக்கிறார்
அது என்றென்றைக்கும் ஒருபோதும் அசையாது
அதிகாலையில் தேவன் அதற்கு /2
சகாயம் பண்ணுவார், என்றும் அல்லே/லூயா /2
- தேவன் நமக்கு
ஜா/திகள் கொந்த/ளித்தது
அவர் தமது சத்தத்தை முழங்கப் பண்ணினார்
ரா/ஜ்ஜியங்கள் தத்த/ளித்தது /2
பூ/மி உருகி அகன்று போயிற்று /2
- தேவன் நமக்கு
பூ/மியிலே பாழ்க்கடிப்புகளாம்
கர்த்தரது செய்கைகளை வந்து பாருங்கள்
சேனை/களின் கர்த்/தர் நம்மோடிருக்கிறார் /2
யாக்கோபின் தேவனே நமக்கடைக்கலம் /2
- தேவன் நமக்கு
பூ/மியின் கடைமுனைக்கும்
யுத்தங்களை தேவன் என்றும் ஓயப்பண்ணுகிறார்
வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிறார் /2
ரதங்களை தீயால் சுட்டெரிக்கி/றார் /2
- தேவன் நமக்கு
நீங்/கள் என/க்குள் அமர்ந்திருந்து
நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள்
ஜாதி/களுக்குள் உயர்ந்/திருப்பேன் /2
பூ/மியில் என்றும் உயர்ந்/திருப்பேன் /2 - தேவன் நமக்கு

72. லோகாஸ் நம் மீட்பர் யெஷுஆவாய்

மாசில்லா மானிடனாக வந்தார் /2
ஆதந்தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட /2
கீழ்ப்படிந்தோரையீடேற்றிட
யெஷுஆவுக்குள்ளே இருக்கிறது ஜீவன்
அந்த ஜீவன் மாந்தர்க்கொளியாமே /2
அவ்வொளி இருளில் பிரகாசிக்கிறது /2
இருள் அதைப் பற்றிக்கொள்ளவில்லை
மெய் - யா - ன ஒளி அவ்வொளி /2
பாரில் வருகிற எந்த மனுவையும் /2
பிரகாசிப்பிக்கிற ஒளியாமே
யெஷுஆவே வழி சத்யம் ஜீவன்
பிதாவின் ஒரே பேறானவரின் /2
மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே /2
அவரது மகிமையைக் கண்டோம் - யெஷுஆவுக்குள்ளே
அல்லேலுயா சங்கீர்த்தனம்
யெஷுஆவின் பரிபூரணத்தாலே /2
கிருபையின் மேல் நாம் கிருபை பெற்றோம் /2
தேவ ராஜ்யம் ஓங்கி நிலைக்கவே - யெஷுஆவுக்குள்ளே

73. பாதம் ஒன்றே வேண்டும் - இந்த
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம்
உம் பாதம் ஒன்றே வேண்டும்


ராஜனே துங்க மெய் வேதனே
பொங்கு நற் காதலுடன்
பரிசுத்தர் தொழுதிடும் ///2 - பாதம்
சீறும் புயலினால் வாரிதி
பொங்கிட பாரில் நடந்தாற்போல்
நீர்மேல் நடந்த ///2 - உம் பாதம்
வீசும் கமழ்கொண்ட வாசனைத்
தைலத்தை ஆசையுடன் மரி
பூசிப் பணிந்த ///2 - பொற் பாதம்
போக்கிடமற்ற எம் ஆக்கினை
யாவையும் நீக்கிடவே மரம்
தூக்கி நடந்த ///2 - நற் பாதம்

74. ஆவியை அருளும் மேசியா - எனக்காய்
உயிர் கொடுத்த வானத்தினரசே


பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்
பரம சந்தோஷம், நீடிய சாந்தம்
தேவ சமாதானம், நற்குணம், தயவு
திட விசுவாசம் சிறிதெனுமில்லை - ஆவியை
தீபத்துக்கெண்ணையை சீக்கிரம் ஊற்றும்
திரி அவியாமலே தீண்டியே ஏற்றும்
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்
பரிசுத்த வரந்தந்தென் குறைகளைத் தீரும் - ஆவியை
நற்கனி தேடிவருங் காலங்கள் அல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மரம் அல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயிரல்லவோ?
முழு நெஞ்சம் விளைவற்ற உவர் நிலம் அல்லவோ?
- ஆவியை

75. திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை யெஷுஆவே
உமதன்பை கண்டடைந்தேன்
தேவ சமுகத்திலே //2

இளைப்பாறுதல் தரும் ராஜா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன் //2 - திருப்பாதம்
என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
யெஷுஆவே, உம்மை அண்டிடுவேன் //2 - திருப்பாதம்
என்னை கைவிடாதிரும் நேசா
என்ன நிந்தை நேரிடினும்
உமது முக பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுமே //2 - திருப்பாதம்
சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
வளர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன் //2 - திருப்பாதம்
பலர் தள்ளின மூலைக் கல்லே
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதறாமலே காத்திருப்பேன் //2 - திருப்பாதம்

76. ஐயையா நான் வந்தேன்யெஷுஆவே
தேவ ஆட்டுக்குட்டி வந்தேன் /2


துங்கவன் நீர் தாம் பாவி எனக்காய்
உம் உதிரம் சிந்தினீர் - தயை
பெறுவோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா
உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று - நில்லேன்
பரிசுத்த உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா
எண்ணம் வெளியே போராடும் உட்பயம்
எத்தனை எத்தனையோ - இவை
திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா
ஏற்றுக் கொண்டு இன்று மன்னிப்பு ஈந்து
என்னை அரவணையும் - மனம்
தேற்றிக்கொண்டேன் உம் வாக்குத்தத்தங்களால்
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா
மற்றற்ற உம் அன்பினாலே தடையாவும்
மாறி அகன்றதுவே - இனி
திட்டமே உந்தன் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா

77. எந்தன் அன்புள்ள யாவே தேவனே


உந்தன் நாமத்தை போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனை
பூமியில் அறிந்திடேன்
தேவாதி தேவன் நீரே
ஆ! ஆனந்தம் ஆனந்தமே !
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
யாவே எந்தன் ஆருயிரே /2
பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடுமே நீரோ
வாக்கு மாறாதவரே - ஆ! ஆனந்தம்
உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மையல்லாது பூமியில் யாரையும் நம்பிடேன்
மெய்யான தேவன் நீரே - ஆ! ஆனந்தம்
பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
பண ஆசையும் வீண் அல்லவோ
பரலோகத்தின் ராஜாவாம் யெஷுஆவின் மூலம்
போதும் எனக்கு நீரே - ஆ! ஆனந்தம்
எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த மானிட நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அழைத்தீரே
பரிசுத்த ஜீவனுக்கே - ஆ! ஆனந்தம்

78. கர்த்தர் பெரியவர் அவர் நமது
தேவனுடைய நகரத்திலும்
தமது பரிசுத்த / பர்வ/தத்திலும்
மிகத் துதிக்கப்படத் தக்கவர்


வடதிசையிலுள்ள சீ/யோன் பர்வதம்
வடிப்ப/மான ஸ்தா/ன/மும்
சர்வ பூ/மியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது
அது மகா ராஜாவின் நகரம் - கர்த்தர்
அதின் அரண்மனைகளில் தே/வன் உயர்ந்த
அடைக்கலமாய் அறியப்/பட்டுள்ளார்
இதோ ரா/ஜாக்கள் கூ/டிக்கொண்டு ஏகமாய்
கடந்து வந்து சேர்ந்/தார்கள் - கர்த்தர்
அவர்கள் அதைக் கண்/டபோது பிரமித்து
கலங்கி விரைந்தோ/டினார்கள்
அங்கே நடுக்கங்கொண்டு பிரசவ/வேதனை
ஸ்திரீயைப்போல் வேதனைப்/பட்டார்கள் - கர்த்தர்
கீழ்காற்றி/னால் தர்ஷீசின் கப்பல்களை
நீர்/தாமே உடைக்/கி/றீர்
நாம் கே/ள்விப்பட்ட/படியே நாம் கண்/டோம்
தேவனுடைய நகரத்திலே - கர்த்தர்
நமது தேவனின்/ நகர/மாகிய
சேனைக/ளுடைய கர்த்தரின்
நகரத்தை ஸ்தி/ரப்/ படுத்து/வார்
என்றென்றைக்குமே தே/வன் - கர்த்தர்
தேவனே உம்/ ஆ/லயத்தின் நடுவில்
உம்முடை/ய/ கிருபையை
நாங்கள் சிந்/தித்துக்கொண்/டு இருக்/கி/றோம்
உம்/ நா/மம் விளங்குகிறது - கர்த்தர்
பூமியின்/ கடைசி பரியந்/த/மும்
உம்/ புகழ்ச்சி விளங்குகிறது
உமது/ வலது/கரம் நீ/தி/யால்
நி/றைந்/து இருக்கிறது - கர்த்தர்
உமது நியாயத்/ தீர்ப்புகளால் சீயோன்
பர்/வதம் மகிழ்/வதாக
யூ/தா/வினுடைய கு/மா/ரத்திகள்
களிகூ/ரு/வார்/களாக - கர்த்தர்
சீயோனைச் சுற்/றிலும் உ/லா/வியும்
அதன் கொத்/தளங்களை எண்ணுங்கள்
அலங்கம், அரண்மனைகளை உற்றுப்பாருங்கள்
பின்/வரும் சந்ததிக்கு சொல்லிட - கர்த்தர்
இந்/த யா/வே என்றென்றைக்/குமுள்ள
சதா கா/லங்கள் நமது தேவன்
மரண/பரியந்தம் நம்மை நடத்து/வார்
அல்/லே/லூயா ஆமென் - கர்த்தர்

79. ஆயிரம் ஆண்டு ஆட்சியிலே

அடைவோம் ஜீவன் அவனியிலே
ஆண்டவர் யெஷுஆ ஆட்சி செய்ய
நியாயத்தீர்ப்பு பெற்றோங்கும்
ஏதேனில் ஆதாம் செய்வினையால்
தீதுரும் சாவு வந்ததையோ
மா தேவ மைந்தன் சாதனையால்
மரண சாபம் நீங்குதையா - ஆயிரம்
மரித்தோர் மீண்டும் வந்திடுவார்
கிறிஸ்து யெஷுஆ வந்திட்டாரே
தரித்தே ஆட்சி செய்கிறாரே
கருத்தாய் நாமோ கண்டிடுவோம் - ஆயிரம்
திவ்ய சுபாவ பங்கடைய
பலியினால் உடன்படிக்கை
பண்ணிய பரிசுத்தோரையே
தம்மிடம் கூட்டிச் சேர்த்திட்டாரே - ஆயிரம்
மெய்விசுவாச பாதையிலே
பௌவியமாக பாடுபட்டோர்
மேன்மையாக உயிர்த்தெழுந்து
பாக்கியவான்கள் ஆகிடுவார் - ஆயிரம்
இத்தரையோர் எழுந்திடுவார்
உய்யும் உயர் வழியை கிறிஸ்து
போதித்து தேவ கற்பனைகள்
சாதித்து நிற்கச் செய்திடுவார் - ஆயிரம்
சோதித்து நித்ய ஜீவன் பெற
போதித்து நீதித் தீர்ப்பு செய்வார்
கீழ்ப்படிந்தவர் வாழ்ந்திடவே
மற்றவரெல்லாம் மாய்ந்திடவே - ஆயிரம்
ஆபிரகாமின் மா வித்துக்குள்
பூமியில் தோன்றும் மக்களெல்லாம்
சோபித ஆசீர் பெற்று என்றும்
சுவிசேஷத்தைப் பூர்த்தி செய்வார் - ஆயிரம்

80. ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

மகிழ் கொண்டாடுவோம் சற்றும்
மாசிலா நம் யெஷுஆ ராஜனை
வாழ்த்திப் பாடுவோம்
மகிழ் கொண்டாடுவோம் /2
ஆதரவற்ற பாவிகளை
மீட்கும் பொருளாய் - இந்த
தாரணியில் ஈன சிலுவை
மரணம் எய்தினார்
மகிழ் கொண்டாடுவோம் /2
மகா கொடிய மரணத்தின்
வலிமை நீக்கியே - பாரும்
நம் உயிரை மீட்கவே அவர்
தம் உயிர்விட்டார்
மகிழ் கொண்டாடுவோம் /2
பாவிகட்காய் பரனிடம்
பரிந்து வேண்டியும் - ரட்சை
செய்யும் அவர்கிணை நண்பர்
புவியில் யாருளர்
மகிழ் கொண்டாடுவோம் /2
தம் ஜனத்தை தேடியே அவர்
வந்திருக்கிறார் - புது
ராஜ்ய மன்னா ரஸம் அருளி
ஊக்குவிக்கிறார்.
மகிழ் கொண்டாடுவோம் /2
அந்நாளில் தேவ நீதி அன்பு
ஞானம் வல்லமை - ஓங்கி
நிற்க, வாக்குத்தத்தம்
நிறைவேறி இயங்குமாம்
மகிழ் கொண்டாடுவோம் /2

81. ஆசீர்வதியும் மா யாவே

இம்மணமக்களை
தேவ ஞானத்தால் உம்மிலே
நித்தம் மகிழவே
நின் கிருபையும் ஜீவ சத்தியமும்
இவ்விரு பேரும் அணியவே
நின்மக்களாக நிலைத்திட
ஆசீர்வதித்திடும்
வீசீரோ வான ஜோதி கதிரிங்கே
சபையின் மெய் மணவாளனே
ஆசார்யராம் வான் ராஜனே
ஆசீர்வதித்திடும்
இம்மணமக்கள் இருவரில்
எம் கிறிஸ்து ராயரே
உம்மணம் வீசச் செய்யுமே
ஓங்கும் நேசமதால்
தேற்றல் பெற்றோங்கும்
இவர் நெஞ்சத்திலே
நீதியோடன்பு விளங்கட்டும்
நித்திய ஜீவன் பெற்றிட
உம்மில் ஒழுகவே - வீசீரோ வான
உமது சமாதானத்தால்
பூரணமாகவே
ஆதரித்தாளும் என்றென்றும்
இவ்வனாந்திரத்தில்
மாபக்தியாக
இவர் சந்ததியார்
வந்துதித்தும்மை பிரஸ்தாபிக்க
ஆ! தேவ கிருபை தீர்மானம்
ஆம்போல் அருளுமேன் - வீசீரோ வான

82. ஆண்டவா பிரசன்னமாகி

ஜீவன் ஊதி உயிர்ப்பியும்
ஆசை காட்டும் தாசர்மீதில்
ஆசீர்வாதம் ஊற்றிடும்
அருள்மாரி எங்கள் பேரில்
வருஷிக்கப்பண்ணுவீர்
ஆசையோடு நிற்கிறோமே
ஆசீர்வாதம் ஊற்றுவீர்
தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடே கூடினோம்
உந்தன் திவ்ய ஆவி ஈவை
நம்பிநாடி அண்டினோம் - அருள்மாரி
ஆண்டவா! மெய்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்
அன்பின் ஜுவாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர் - அருள்மாரி
தாசர் தேடும் தூய ஆவி
பெற்றிட கடாட்சியும்
கனிதரும் ஜீவியத்தை
தந்து ஆசீர்வதியும் - அருள்மாரி

83. உம் அருள்பெற யெஷுஆவே


நான் பாத்திரன் அல்லேன்
என்றாலும் தாசன் பேரிலே
கடாட்சம் வையுமேன்
நீர் எனக்குள் ப்ரவேசிக்க
நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க
நிமித்தம் இல்லையே
ஆனாலும் வாரும் தயவாய்
மா நேச ரட்சகா
என்றைக்கும் தங்கும் ஐக்யமாய்
என் பாவ நாசகா
பஸ்கா போஜன பந்திக்கு
அபாத்திரன் ஆனேன்
நற்சீரைத் தந்து எனக்கு
கடாட்சம் செய்யுமேன்
தெய்வீக பான போஜனம்
அன்பாக ஈகிறீர்
மெய்யான நீதி என்னிலே
ஆட்கொள்ளச் செய்கிறீர்
என் பக்தி, ஜீவன் இதினால்
நீர் விருத்தியாக்குமேன்
உந்தன் சரீரம் ரத்தத்தால்
சுத்தாங்கம் பண்ணினேன்
என் ஆவி, தேகம், செல்வமும்
நான் தத்தம் செய்கிறேன்
ஆ யெஷுஆவே, சமஸ்தமும்
பிரதிஷ்டை செய்கிறேன்

84. உம்மண்டை கர்த்தரே


நான் சேரட்டும்
சிலுவை சுமந்து
நடப்பினும்
என் ஆவல் என்றுமே
உம்மண்டை கர்த்தரே /2
நான் சேர்வதே
தாசன் யாக்கோபைப்போல்
ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல்
தூங்குகையில்
எந்தன் கனாவிலே
உம்மண்டை கர்த்தரே /2
இருப்பேனே
விழித்து உம்மையே
நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம்
வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே
உம்மண்டை, கர்த்தரே /2
நான் சேர்வேனே
நீர் என்னை நடத்தும்
பாதை எல்லாம்
என் பாத்ரம் நிரப்பும்
உம் சித்தம்போல்
உம் வாக்கு காக்குமே
உம்மண்டை, கர்த்தரே /2
நான் சேரவே

85. என்னோடிரும், மா யாவே தேவனே


வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
மற்றோர் ஒத்தாசை அற்றுப்போயினும்
நீர் மெய்ச்சகாயரே, என்னோடிரும்
நீர்மேல் குமிழி போல் என் ஆயுசும்
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்
கண்கண்ட யாவும் மாறி அழியும்
மாறாத கர்த்தரே என்னோடிரும்
உம் ப்ரசன்னம் எந்நேரமும் வேண்டும்
பிசாசின் சக்தி நீர் முறிக்கிறீர்
உம்மையல்லாமல் என் துணை தஞ்சம் யார்
என் இன்ப துன்பத்தில் என்னோடிரும்
நான் அஞ்சிடேன், நீர் ஆசீர்வதித்தால்
பாரம், கசப்பு, கண்ணீர், நீங்குமே
சாவே உன் கூரும், ஜெயமும் எங்கே
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்
சாவில் மூடும் என் கண்முன் இருந்து
சூழும் இருளில் உம் ஒளி வீசும்
விண்ஜோதி லோக மாயை நீக்குதே
வாழ்நாள் சாயங்காலில் என்னோடிரும்

86. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்


மா நீதியும் சம்பாதித்தார்
என் சொந்த நீதி வெறுத்தேன்
யெஷுஆவின் நாமம் நம்புவேன்
நான் நிற்கும் பாறை கிறிஸ்துவே
வேறஸ்திபாரம் இல்லையே /2
கார்மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம் அவரை
எப்போதும் போல நம்புவேன்
மாறாதவர் என்றறிவேன் - நான் நிற்கும்
மரண வெள்ளம் பொங்கினும்
என் மாம்சம் சோர்ந்து போயினும்
உம் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும் - நான் நிற்கும்
நியாயத்தீர்ப்புக் காலத்தில்
உம் சத்யம் எங்கும் கேட்கையில்
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
பார் முழுவதும் மூடுமே - நான் நிற்கும்

87. போற்றும் போற்றும்


புண்ணிய ராஜனைப் போற்றும்
வானோர் கூடி பாடவும் இன்பமாய்
பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய
மாந்தர் யாரும் வாரும் ஆனந்தமாய்
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
யெஷுஆ ராஜா நம்மையும் தாங்குவார்
போற்றும் போற்றும்
தேவ குமாரனைப் போற்றும்
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்
போற்றும் போற்றும்
புண்ணிய ராஜனை போற்றும்
பாவநாசம் செய்விக்க முயன்றார்
பாடுபட்டு ப்ராணத் தியாகமுமாகி
வான ராஜ்ய வாசலைத் திறந்தார்
மா கர்த்தாவே ஸ்தோத்திரம் இன்றும் என்றும்
வாழ்க வாழ்க ஜெகத்து ரட்சகா
அருள் ராஜா மாசணுகா பரஞ்சோதி
வல்ல தேவா கருணை ரட்சகா
போற்றும் போற்றும்
புண்ணிய ராஜனைப் போற்றும்
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்
போற்றும் போற்றும் ஏக மகத்துவமாக
ஆட்சி செய்வார் நித்திய காலமும்
யெஷுஆ ராஜா மாட்சிமையோடு எம்மை
நித்ய காலம் பூமியில் ஆளுமே
லோகம் எங்கும் நீதியின் கிரீடத்தைச் சூடி
ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்

88. ரட்சா பெருமானே பாரும்


புண்ய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கிச் சீரைத் தாரும்
தேடி வந்து நிற்கிறோம்
யெஷுஆ ராஜா யெஷுஆ நேசா
உந்தன் சொந்தம் ஆயினோம்
யெஷுஆ ராஜா யெஷுஆ நேசா
உந்தன் சொந்தம் ஆயினோம்
மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்
ஜீவ தண்ணீர் அண்டை என்றும்
இளைப்பாறச் செய்கிறீர்
யெஷுஆ ராஜா யெஷுஆ நேசா
நித்தம் பரிபாலிப்பீர்
யெஷுஆ ராஜா யெஷுஆ நேசா
நித்தம் பரிபாலிப்பீர்
நீதி பாதை, தவறாமல்
நேசமாய் நடத்துவீர்
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்
யெஷுஆ ராஜா யெஷுஆ நேசா
ஒருபோதும் கை விடீர்
யெஷுஆ ராஜா யெஷுஆ நேசாv ஒருபோதும் கை விடீர்
ஜீவ கால பரியந்தம்
ஆற்றி தேற்றி வருவீர்
பின்பு நித்ய பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்
யெஷுஆ ராஜா யெஷுஆ நேசா
ஊழி காலம் வாழ்விப்பீர்
யெஷுஆ ராஜா! யெஷுஆ நேசா
ஊழி காலம் வாழ்விப்பீர்

89. ஏதேனில் ஆதிமணம் ஸ்தாபித்த மா யாவே
அளித்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே


இப்போதும் பக்தியுள்ளோர் விவாகம் தூய்மையாம்
தேவா பிரசன்னமாகி ஆசீர்வதித்திடும்
ஆதாமுக்கு ஏவாளை துணையாய் தந்தோரே
இம்மாப்பிள்ளைக்குப் பெண்ணைக் கொடுத்தருளுமே
இவர்கள் இன்று செய்யும் உடன்படிக்கையை
எந்நாளும் நின்று காக்க மெய்பாக்யம் ஈந்திடும்
பிதாவின் மகிமையில் ஆளும் கிறிஸ்துவே
சபையாம் பாரியோடு மகிமை ராஜ்யத்தில்
உம்முன் பணிந்து நிற்கும் இவ்விருபேரையும்
நடத்தி கரை சேர்த்து ஜீவனை அருளும்
ஊழி காலம் வாழ்விப்பீர்

90. பக்தரே வாரும் ஞானக் கண்களோடு
நீர் பாரும் நீர் பாரும் நம் ராஜனை
செங்கோல் உரிமை அவருக்கே என்றும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும் /3


யெஷுஆவை
சாவை வென்றவர் ஜீவனைத் தந்தவர்
அவர் கிருபாசனம் நம் தஞ்சமே
கீழ்ப்படிந்தோர்கள்
தாழ்ந்து வாழ்த்த வாரும் - சாஷ்டாங்கம்
பூலோகத்தாரே மா கெம்பீரத்தோடே
ராஜ்ய நற்செய்தி பாடி போற்றுமேன்
வான் புவி கர்த்தரை
முழு மனதோடு - சாஷ்டாங்கம்

91. பூலோகத்தாரே எல்லாரும்
யாவேயை கெம்பீரமாக
பாடித் துதித்து போற்றுங்கள்
அவர் கிருபையை என்றும்


மகிழ்ச்சியாய் கர்த்தருக்கு
ஆராதனையை செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடவர்
சமுகம் முன்னே வாருங்கள்
அறியுங்கள் யாவே தேவனை
நாம் அல்ல அவர் படைத்தார்
நாம் ஜனம் அவர் மேய்ச்சலின்
ஆடுகளாயிருக்கிறோம்
அவர் வாசல்களில் போற்றி
பாளயத்தில் புகழ்ந்து
பிரவேசித்து அவர் நாமத்தை
துதித்து ஸ்தோத்திரியுங்கள்
யாவே நல்லவர் அவரின்
கிருபை என்றுமுள்ளது
அவர் நன்மை தலைமுறைக்கும்
என்றென்றைக்கும் இருக்குமே

92. அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார் /2


மகிமை மாட்சிமை மறந்து திகழ்ந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோடு ஒழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே - அந்தோ
அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே - அந்தோ
முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
சேவகர் பரிகாசங்கள் செய்தும்
சிலுவை பாரத்தை சுமந்தாரே
நாமும் நம் சிலுவை சுமந்தேகிடவே - அந்தோ
சிலுவைக் காட்சியை கண்டு முன்னேகி
ஊழியம் செய்வேன் அவர் பலி சொல்வேன்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் ராஜ்ஜிய மாண்பை எடுத்துரைப்பேன் - அந்த

93. கரையேறி உமதண்டை


நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று
வெட்கப்பட்டு போவேனோ?
ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்
வெட்கத்தோடே ஆண்டவா?
வெறும் கையனாக உம்மை
கண்டுகொள்ளல் ஆகுமோ?
தேவரீர் கைதாங்க சற்றும்
சாவுக்கஞ்சி கலங்கேன்
ஆயினும் நான் பலன் காண
உழைக்காமல் போயினேன் - ஆத்மா ஒன்றும்
வாழ்நாள் எல்லாம் வீணாளாக
சென்றுபோயிற்றே அய்யோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாலும் வருமோ? - ஆத்மா ஒன்றும்

94. என் மீட்பர் சென்ற பாதையில்


செல்ல ஆயத்தமா
கல்வாரி மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா
சிலுவையை நான் விடேன் /2
சிலுவை.......யை நான் விடே......ன்
சிலுவையை நான் விடேன் /2
சிலுவையை சிலுவையை நான் விடேன்
ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர், கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா - சிலுவையை நான்
தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா - சிலுவையை நான்
வாழ்நாள் எல்லாம் நிலை நின்று
சிலுவை சுமப்பேன்
தேவ கிருபையால் வென்று
தேவ ராஜ்யம் சேர்வேன் - சிலுவையை நான்

95. என் ஜீவன் கிறிஸ்து தாமே


அதாலே எனக்கு
சாவு ஆதாயமாமே
நெஞ்சே, மகிழ்ந்திரு
நான் யெஷுஆ வசமாக சேர்ந்தென்றும் வாழவே மா சமாதானமாக ஜீவித்துப் போவேனே பாடெல்லாம் அற்றுப்போகும்
என் நோவும் முடியும்
என் மீட்பர் புண்ணியத்தால்
உயிர்த்தெழுவேனே
மரணம் அடைந்தோர்கள்
கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில்
எழுந்து கீழ்ப்படிந்து
ஜீவன் பெறுவாரே

96. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்


அப்போதென் துக்கம் மறப்பேன்
மா யாவே பாதம் பணிவேன்
என் ஆசை யாவும் சொல்லுவேன்
என் நோவு வேளை தேற்றினார்
என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்றுத் தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன்
என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்
மா தாழ்மையோடு ப்ரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்போர் வருவார்
பேர் ஆசீர்வாதம் தருவார்
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
என் பாதம் தேடு ஊக்கமாய்
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்

97. என்றும் யாவேயுடன்


என்ற இவ்வாக்கினில்
சாவிலிருந்து ஜீவனை
பெறுவேன் ஆம் ஆமென்
நான் பிரதிஷ்டை செய்து
பரதேசியாகவே
நாடோறும் வழி நடந்து
உம் வீட்டைக் கிட்டுவேன்
உம் பாக்ய சித்தத்தை
உம் வார்த்தையால் கற்று
நாடோறும் செய்ய நாடுவேன்
சித்தம் கொண்டருள்வீர்
என் பக்கம் தங்கிடின்
தப்பாமலே நிற்பேன்
கைதூக்கி என்னைத் தாங்கிடின்
போராடி வெல்லுவேன்
என் ஜீவன் போகும் நாள்
முடியும் யாத்திரை
ரட்சகர் பலி புண்யத்தால்
ஜீவன் பெற்றெழுவேன்
நிற்பேன் உம் ராஜ்யத்தில்
என்றும் களிப்புடன்
உம் முன் நித்தியமும் பணிவேன்
தாங்கியணைத்திடும்
இதோ சமீபமே
யெஷுஆவின் ராஜ்ஜியம்
என் ஞானக் கண்கள் காணுதே
மின்னும் பொன்னகர் வான்
தூயோர் சுதந்திரம்
நான் நேசிக்கும் நாடே
என் ஆவி எருசலேம் கீழ்
வாழ தவிக்குதே

98. எருசலேம் என் ஆலயம்


ஆசித்த ராஜ்யமே
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடைய வேண்டுமே /3
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடைய வேண்டுமே
ஜீவனுள்ளோரின் தேசத்தில்
எப்போதுலாவுவேன்?
மாட்சிமை தூய ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்? /3
மாட்சிமை தூய ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்?
என்றென்றும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் மீட்கப்பட்டோர்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார் /3
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார்
நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மை போற்றவே
வாஞ்சித்து, லோக துன்பத்தில்
களிப்பேன், யெஷுஆவே /3
வாஞ்சித்து, லோக துன்பத்தில்
களிப்பேன், யெஷுஆவே
கிறிஸ்துவே என் ஆலயம்
நான் உம்மால் வாழுவேன்
என் ஆவல், என் அடைக்கலம்
எப்போது சேருவேன்? /3
என் ஆவல், என் அடைக்கலம்
எப்போது சேருவேன்?

99. ஓசன்னா தாசர் பாடும்


கிறிஸ்து ராஜா இன்று
மேகத்தில் வல்லமையாய்
ப்ரசன்னமாகிறார்
யாவே நாமத்தினாலே
வந்திருக்கிறவர்
ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
ஓசன்னா ஓசன்னா
உன்னதத்தில் மகிமை
பூமியில் சமாதானம்
மனுஷர் மேல் பிரியம்
சந்தோஷ நற்செய்தி
உன்னத தூதர் சேனை
விண்ணில் புகழ்கிறார்
மாந்தர் படைப்பு யாவும்
இசைந்து போற்றுவார்
ஜாதிகளே எல்லாரும்
யாவேயை துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும்
அவரை போற்றுங்கள்
மா யாவே நம்மேல் வைத்த
கிருபை பெரியது
அவரின் உண்மை என்றும்
என்றென்றும் உள்ளது

100. கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள்


சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு /2
யூபிலி ஆண்டு வந்தது
எல்லார் முன்பாகவும் யெஷுஆவைப் போற்றுங்கள்
அவரே யாவர்க்கும் ரட்சகர் என்னுங்கள்
- சிறைப்பட்டோரின்
ஜீவனைப் பாவத்தால் இழந்த மாந்தரே
கிறிஸ்துவின் நீதியால் ஜீவன் கிடைக்குமே
- சிறைப்பட்டோரின்
பாவம், பிசாசுக்கும் சிறைப்பட்டோர்களே
உங்களை ரட்சிக்கும் மீட்பர் நல் யெஷுஆவே
- சிறைப்பட்டோரின்
சந்தோஷ செய்தியை எல்லாரும் கேளுங்கள்
அன்போடு யெஷுஆவை இப்போதே சேருங்கள்
- சிறைப்பட்டோரின்

101. பிளவுண்ட மலையே


புகலிடம் தாருமேன்
பக்கம் பட்ட காயமும்
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவ தோஷம் யாவையும்
நீக்கும்படி அருளும்
கண்ணீர் நித்தம் சொரிந்தும்
தொய்யாத்தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே
நீரே மீட்பர், யெஷுஆவே
உம்மை நித்தம் அடியேன்
தஞ்சமென்று சாருவேன்
நிழல் போன்ற வாழ்விலே
களிப்பேது பரனே
உம் ராஜ்யம் வருகையில்
உயிர்த்தெழும் தினத்தில்
பிளவுண்ட மலையே
புகலிடம் தாருமேன்

102. காலையும் மாலையும் எப்போதும் கர்த்தரை
கருத்துடன் பாடிடுவேன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர்
பாடிடும் தொனிக் கேட்குதே
யாவே என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் ரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன் - காலையும்
ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் பாளயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன் - காலையும்
எந்தன் முகத்தை தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
உம் முகத்தை தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாக பதிலளிப்பார் - காலையும்
ஜீவனுள்ளோரின் தேசத்தில்தானே
கர்த்தரின் நன்மைகளை நான்
காண்பேன் என விசுவாசம் இல்லாது இருந்தாலே
கெட்டுப்போய் நானிருப்பேன் - காலையும்
கர்த்தருக்காக காத்திருக்கின்ற
இருதயத்தை அவர்தாமே
ஸ்திரமாக ஆக்குவதால் திடமனதாக நான்
யாவேக்கு காத்திருப்பேன் - காலையும்

103. கிறிஸ்து யெஷுஆ எழுந்தார்


அல்லேலூயா
மாந்தர், தூதர் போற்றுமே
அல்லேலூயா
உன்னதத்தில் கெம்பீரம்
அல்லேலூயா
விண்ணும் மண்ணும் போற்றுமே
அல்லேலூயா
அன்பின் மீட்பு ஜெயமே
அல்லேலூயா
போரில் வெற்றி சிறந்தே
அல்லேலூயா
ஜெயங்கொண்டு எழுந்தார்
அல்லேலூயா
மரணம் மேற்கொள்ளாது
அல்லேலூயா
மா ராஜா என்றும் வாழ்வீர்
அல்லேலூயா
மரணம் உன் கூர் எங்கே
அல்லேலூயா
மரித்தார் நம்மை மீட்க
அல்லேலூயா
பாதாளம் ஜெயம் எங்கே
அல்லேலூயா

104. சிலுவை சுமந்தோனாக


யெஷுஆ உம்மைப் பற்றுவேன்
ஏழைப் பரதேசியாக
தேவ ராஜ்யம் நாடுவேன்
உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி
ஞானம், லோகம் அனைத்தும்
அற்பக் குப்பை என்று எண்ணி
வெறுப்பேனே முற்றிலும்
துஷ்டர் என்னைப் பகைத்தாலும்
நீரே தஞ்சம் ஆகுவீர்
கஸ்தி என்ன நேரிட்டாலும்
இனி மேன்மை தருவீர்
உமதன்பு என்னைத் தேற்ற
பயம், துக்கம் இல்லையே
ராஜா உம் பிரசன்னம் நீங்க
இன்பமெல்லாம் துன்பமே
நெஞ்சமே கர்த்தரை நோக்கி
பயம் யாவும் அகற்று
எந்த கஷ்டத்தையும் தாங்கி
அவரை நீ பின்பற்று
திவ்ய அன்பைச் சிந்தை செய்து
நித்ய மீட்பை த்யானம் செய்
ஆவியின் சகாயம் நம்பு
நெஞ்சமே கலக்கம் ஏன்?

105. சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ, ஆ

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன்
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில் /2
அடைகிறேன் ஆறுதல் மனதில் என்றும் - சிலுவையின்
பாவ பார சுமையதால் சோர்ந்து
தளர்ந்ததென் ஜீவியமே - ஆ, ஆ
பாவ பார சுமையதால் சோர்ந்து
தளர்ந்ததென் ஜீவியமே
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷம் கண்டதினால்
இளைப்படையாது ஏகுவேன் /2
ஏந்துவார் தமது கரத்தில் என்றும் - சிலுவையின்
எவ்வித கொடிய இடறுக்கும் அஞ்சேன்
யெஷுஆவை சார்ந்து நிற்பேன் - ஆ, ஆ
எவ்வித கொடிய இடறுக்கும் அஞ்சேன்
யெஷுஆவை சார்ந்து நிற்பேன்
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக்க மோதிடும் அந்நாள் /2
ஆறுதல் அளிப்பார் எம் மன்னா என்றும் - சிலுவையின்
இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டு
இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ, ஆ
இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டு
இன்னல்கள் மறந்திடுவேன்
திருமறை இன்னிசை நாதம்
தேனிலும் இனிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம் /2
நீக்குமென் இதயத்தின் தோஷம் என்றும் - சிலுவையின்

106. சோர்ந்து போகாதே மனமே


சோர்ந்து போகாதே போராட
சோர்ந்து போகாதே
கண்டு உன்னை அழைத்த
தேவன் கைவிடுவாரோ //2 - சோர்ந்து
வாக்களித்த தேவனை நீ
பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை
தாங்க மன்றாடு //2 - சோர்ந்து
துன்பங்கள் தொல்லைகள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம்
ஆனந்தம் அல்லோ //2 - சோர்ந்து
சோதனைகளை சகிப்போர்
பாக்கியவான்களல்லோ
ஜீவன் கிட்டும் நித்தியமாய்
என்ன பேரின்பம் //2 - சோர்ந்து

107. தந்தேன் என்னை தேவனே


இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியஞ்செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் //2 - தந்தேன்
ஜீவகாலம் முழுதும்
தேவபணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
உந்தன் கரத்தினில் காத்திடும் //2 - தந்தேன்
உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய்ச் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தில் உம்மால், வெல்லுவேன் //2 - தந்தேன்
உந்தன் சித்தமே செய்வேன்
என்றன் சித்தம் ஒழித்திடுவேன்
ஒன்றுமில்லை நான் உம்மாலன்றி
ஒன்றும் செய்ய முடியாதே //2 - தந்தேன்
கஷ்டம், நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
உம்மாவியால் என்றும் நிரப்பி
என்னை உம்மில் அமரச் செய்யும் //2 - தந்தேன்

108. தீராத தாகத்தால் என் உள்ளம் தோய்ந்ததே


ஆ ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே
விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே
நீர் போஷிக்காவிடில் திக்கற்றுச் சாவேனே
தெய்வீக போஜனம் மெய் மன்னா யெஷுஆவே
மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர்
உம் தூய ரத்தத்தால் என் பாவம் போக்கினீர்
உம் திரு மாம்சத்தால் ஆத்மாவை போஷிப்பீர்
மா திவ்ய ஐக்யத்தை இதால் உண்டாக்குவீர்
மேலான பாக்யத்தை திரளாய் ஆக்குவீர்
இவ்வருள் பந்தியில் ப்ரசன்னமாகுமே
என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே

109. தீவினை செய்யாதே மா சோதனையில்


பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில்
வீண் ஆசையை முற்றும் கீழ் அடக்குவாய்
மேசியாவை நம்பி வென்றேகிப்போவாய்
ஆற்றித் தேற்றியே காப்பார் நித்தம் உதவி செய்வார்
மீட்பர் பெலனை ஈவார் ஜெயம் தந்திடுவார்
வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும்
சேராமலே நீங்கி நல்வழியிலும்
நின் ஊக்கமும் அன்பும் சற்றேனும் விடாய்
மேசியாவை நம்பி வென்றேகிப்போவாய் - ஆற்றித்
பொல்லாங்கன் அக்கினியாஸ்திரங்களை
விஸ்வாசத்தால் வென்று பேர்வாழ்வடைவாய்
ரட்சகரின் பெலன் என்றும் சார்ந்திடுவாய்
மேசியாவை நம்பி வென்றேகிப்போவாய் - ஆற்றித்

110. மயங்கும் தாசனை, தேவா, நீர் நடத்தும்


என் பாதை காட்டியாய் சகாயம் புரியும்
கபோதி நான் ஐயா, முன் நிற்பதறியேன்
நீர் என்னை நடத்தும் நான் பின்னே செல்லுவேன்
என் சித்தம் ஆபத்தாம் உம் சித்தம் நாடுவேன்
நான் செல்லும் பாதையை நீர் காட்ட கெஞ்சுவேன்
நீர் காட்டும் பாதை தான் எப்போதும் நல்லதே
சுற்று நேர் ஆயினும் உம் ராஜ்யம் சேர்க்குமே
உம் சித்தம் போல நீர் என் பாத்ரம் எடுத்தும்
சந்தோஷம், சஞ்சலம், எதாலும் நிரப்பும்
என் இஷ்டம் எதிலும் வேண்டாம், என் தேவனே
நீர் சர்வ ஞானரே எல்லாம் என் நன்மைக்கே
நான் தேடும் ராஜ்ஜியம் உம் சொந்தமானதே
நான் அங்கு சேர்ந்திட ஒத்தாசை அருளும்

111. தேவாதி தேவரீரே உமது புகழை நான் பாடுவேன் //2


பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ளவரை நின் புகழ் பாட வேண்டும் //2 - தேவாதி
உம் மைந்தன் யெஷுஆவின் ரத்தத்தினால்
பாவியாம் என்னுள்ளம் கழுவிடுமே //2 - பாரில்
உம் வழி துயரம் நிறைந்ததுவே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே //2 - பாரில்
உம் வீட்டில் இடமுண்டு என்றவரே
பரிவாக உம் கிருபை சூழச் செய்யுமே //2 - பாரில்

112. நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே

திவ்ய சரணம் சரணம் சரணம் ஐயா நான்
நம்பிவந்தேனே
யாவே தேவமைந்தனே, தஞ்சமே தருவனே
வரு தவிது குமர குரு பரமனுயேலே
நம்பிவந்தேனே - நான் நம்பிவந்தேன்
நின் பாத தரிசனம், அன்பான கரிசனம்
தினம் தினசரி தொழுவது இதம் என உறுதியில்
நம்பிவந்தேனே - நான் நம்பிவந்தேன்
ராஜனே சிறுமைதீர் வேதனே கிருபைகூர்
அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே
நம்பிவந்தேனே - நான் நம்பிவந்தேன்
பாவியில் பாவியே துரோகியில் துரோகியே
கன பரிவுடன் அருள்புரி அகலவிடாதே
நம்பிவந்தேனே - நான் நம்பிவந்தேன்
யாவே தேவமைந்தனே, பாதுகா காலமே
உனதடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த
நம்பிவந்தேனே - நான் நம்பிவந்தேன்

113. நான் பாவிதான், ஆனாலும் நீர்

மாசற்ற ரத்தஞ் சிந்தினீர்
வா, என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன், வந்தேன்
நான் பாவிதான் என் நெஞ்சிலே
கறை பிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே, வந்தேன், வந்தேன்
நான் பாவிதான், சோரத்தினால்
அலைந்து, பாவப்பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே, வந்தேன், வந்தேன்
நான் பாவிதான், இரங்குவீர்
அணைத்து காத்து, ரட்சிப்பீர்
அருளாம் ஆசீர் அளிப்பீர்
என் மீட்பரே, வந்தேன், வந்தேன்

114. நான் பிரமித்து நின்று பேரன்பின்

பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்
மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கக் கண்டேன்
யெஷுஆவின் ரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன்
முந்நாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கினபோதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன் - மா தூய
எந்த வேளையும் யெஷுஆவில்
தங்கினால் சொந்தங் காட்டுவார்
எந்நேரமும் புண்ணிய நேசர்
என் பக்கத்தில் விளங்குவார் - மா தூய
தம் முகத்தின் அருள் பிரகாசம்
என் பேரிலே வீசச் செய்வார்
சோதனையில் என்றும் காத்து
முடிவிலே கரை சேர்ப்பார் - மா தூய

115. நானும் என் வீட்டாருமோவென்றால்
யாவேயையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா? /2


அடிமைத் தனத்தில் இருந்துமே
அடியானை மீட்டவரே
கடந்த வழி பாதுகாத்தவரே
இந்த மா யாவே தாமே //2 - நானும் என்
வேறே தேவனை சேவிக்கவே
யாவேயை விட்டுவிடல்
நமக்கு என்றும் அது தூரமான
செயலாய் இருப்பதாக //2 - நானும் என்
யாவே எனும் நாமங்கொண்ட
என் தேவன் ஒருவரே
பூமியனைத்திலும் உன்னதரென்று
மனுஷர் உணரும்படி //2 - நானும் என்
யாவேயையே தெய்வமாக
ஏற்றுக் கொண்ட ஜாதியும்
சுதந்தரமாய் அவர் தேர்ந்துகொண்ட
ஜனமும் பாக்கியமானோர் //2 - நானும் என்

116. நீரோடையை மான் வாஞ்சித்து

கதறும் வண்ணமாய்
என் ஆண்டவா, என் ஆத்துமம்
தவிக்கும் உமக்காய்
தயாள யாவே, உமக்காய்
என் உள்ளம் ஏங்காதோ?
உம் மாட்சியுள்ள ராஜ்யத்தை
எப்போது காண்பேனோ!
என் உள்ளமே, விசாரம் ஏன்?
நம்பிக்கை கொண்டு நீ
சதா உன் ஜீவ ஊற்றேயாம்
கர்த்தாவை ஸ்தோத்திரி

117. பாதை காட்டும் யாவே தேவா!

பரதேசியான நான்
பலவீனன் அறிவீனன்
இவ்வுலகம் காடுதான்
வானாகாரம் /2
தந்து என்னைப் போஷியும் /2
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன்
தீப மேக ஸ்தம்பம் காட்டும்
வழியில் நடத்துமேன்
வல்ல மீட்பர் /2
என்னைத் தாங்கும் யெஷுஆவே - வானாகாரம்
சாவின் அந்தகாரம் வந்து
நான் அழிந்து போகிலும்
சாவின் மேலும் வெற்றி தந்து
என்னைச் சேர்க்கும் காலத்தில்
கீத வாழ்த்தல் /2
உமக்கென்றும் பாடுவேன் - வானாகாரம்

118. பகலோன் கதிர்போலுமே


யெஷுஆவின் ராஜரீகமே
பூலோகத்தில் வியாபிக்கும்
நீடூழி காலம் வர்த்திக்கும்
பற்பல ஜாதி தேசத்தார்
அற்புத அன்பைப் போற்றுவார்
பாலரும் இன்ப ஓசையால்
ஆராதிப்பார் சந்தோஷமாய்
நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே
சிரேஷ்ட பாக்யம் தங்குமே
துன்புற்றோர் ஆறித் தேறுவார்
திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்
பூலோக மாந்தர் யாவரும்
வானோரின் சேனைத்திரளும்
சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்
நீர் வாழ்க, ராயரே என்பார்

119. பாதைக்குத் தீபமாமே பரிசுத்த ஆகமம்

மா நல்ல ஆகமம், பாதைக்குத் தீபமாமே
ஆன்மாவை உயிர்ப்பிக்கும் பூரணமானதே /2
பேதைக்கு ஞானமாமே
பரிசுத்த ஆகமம் - மா நல்ல ஆகமம்
பாதைக்குத் தீபமாமே
நீதியின் தூய்மையே இதய சந்தோஷமே /2
கண்களுக்கு தெளிவே
பரிசுத்த ஆகமம் - மா நல்ல ஆகமம்
பாதைக்குத் தீபமாமே
தேனின் மதுரமே பொன்னிலும் மேன்மையே /2
எனது வாஞ்சையுமாமே
பரிசுத்த ஆகமம் - மா நல்ல ஆகமம்
பாதைக்குத் தீபமாமே
நியாய எச்சரிப்பாம் நின் அடியேனுக்கு /2
கைக்கொண்டால் பலனுண்டே
பரிசுத்த ஆகமம் - மா நல்ல ஆகமம்
பாதைக்குத் தீபமாமே
எல்லையில்லா விஸ்தாரம் எவருக்கும் ஆகாரம் /2
யாவே தேவனின் வாக்கே
பரிசுத்த ஆகமம் - மா நல்ல ஆகமம்
பாதைக்குத் தீபமாமே

120. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும்


உம்பாதம் அண்டினோமே தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்
இவர்கள் செய்த உடன்படிக்கையின்
அடையாளத்தை ஆசீர்வதியும்
இருதயத்தில் இவ்வுடன்படிக்கை
பதிந்து என்றும் ஆளச் செய்குவீர்
ஆ! ஜீவ ஊற்றே இவரில் உம் நேசம்
நல் நம்பிக்கையும் வாழ்வு தாழ்விலும்
உம் பேரில் சாரும் ஊக்கம் விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும்
பூலோக துன்பம் இன்பமாக ஏற்க
மெய்ச் சமாதானம் ஈந்து தேற்றுவீர்
வாழ்நாளின் ஈற்றில் ஜீவ கரையேற்றி
உம் ராஜ்ய பாக்யம் அன்பும் நல்குவீர்

121. மாறிடா என் மா நேசரே


ஆகா மாறா அவர் அன்பென்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே என் மா அன்பிதே
ஆ யெஷுஆவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணையேதும் வேறில்லையே
பாவியாக இருக்கையிலே
அன்பாய் பாரில் உன்னை தேடிவந்தாரே
நீசன் என்றுனை தள்ளாமல்
நேசனாக மாற்றிடவே - ஆ யெஷுஆவின்
உள்ளத்தால் அவரைத் தள்ளினும்
நம்மை உள்ளம் போல நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
தேவ மைந்தன் பலியானாரே - ஆ யெஷுஆவின்
நியாய விதி தினமதிலே
நீயும் நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெற்றிட
புண்ணியரின் அன்பு வல்லதே - ஆ யெஷுஆவின்

122. யாவே என் மேய்ப்பராய் இருக்கிறாரே தாழ்ச்சியடையேன் என்றுமே

அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார் //2 - யாவே
யாவே என் ஆத்மாவை ஆற்றி தேற்றி
சமாதானத்தால் என்றுமே
தமது நாமத்தின் நிமித்தமாக
என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார் //2 - யாவே
மரண நிழலின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலும் பொல்லாப்புக்கஞ்சேன்
தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்
உம் கோலும் தடியும் என்னைத் தேற்றிடும் //2 - யாவே
என சத்துருக்கள் முன்பாக எனக்கோர்
பந்தியை ஆயத்தம் செய்து
ன் தலையை எண்ணையால் அபிஷேகம் செய்கிறீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது //2 - யாவே
என் ஜீவனுள்ள நாளெல்லாம் என்னை
நன்மை கிருபை தொடரும்
என்றென்றும் என் யாவேயின் ஜீவ வீட்டிலே
நான் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் //2 - யாவே

123. யாவே தேவா

உம் கிரியைகளையெல்லாம்
பிரமித்து விந்தை/யாய் பார்க்கையில்
கேட்கும் இடி முழக்கம் காணும் விண்மீன்
உம் வல்லமையை காட்சியாக்கையில்
என் நெஞ்சம் ரட்/சகரை போற்றுதே
மா உன்னதர், மா உன்னதர்
என் நெஞ்சம் ரட்/சகரை போற்றுதே
மா உன்னதர், மா உன்னதர்
சோலை, வனம்
ஊடாய் அலையும் வேளை
கேட்குதே இன்/னிசை பட்சி நாதம்
நீரோட்ட ஓசை ஓங்கும் மலைக் காட்சி
இதமாய் வீசும் தென்றல் உணர்வால் - என் நெஞ்சம்
தேவனே நீர்
மைந்தனெனவும் பாராது
யெஷுஆவை ர/த்தம் சிந்தச் செய்தீரே
சாவுக்குள்ளா/க்கி என் பாவ பாரத்தை
எனக்காய் தீர்/த்ததை நினைக்கையில் - என் நெஞ்சம்
யெஷுஆ கிறிஸ்து
தம் ஆட்சி ஸ்தாபிக்கையில்
பாளய வீட்டில் என்னை சேர்க்கையில்
பேரானந்த/மாய் தாழ்மையாக நான்
பணிந்து போற்றி துதி செய்கையில் - என் நெஞ்சம்

124. யாரை நான் புகழுவேன்

யாரை நான் அறிகிறேன்?
என் கதியும் பங்கும் யார்?
நான் பாராட்டும் மேன்மை யார்?
தேவ ஆட்டுக்குட்டிதான் /2
யார் நான் நிற்கும் கன்மலை?
யார் என் திட நம்பிக்கை?
குற்றத்தைச் சுமந்தோர் யார்?
தெய்வ நேசம் தந்தோர் யார்?
தேவ ஆட்டுக்குட்டிதான் /2
என்தன் ப்ராண பெலன் யார்?
ஆத்துமத்தின் சாரம் யார்?
யாரால் பாவி நீதிமான்?
யாரால் தெய்வ பிள்ளை நான்?
தேவ ஆட்டுக்குட்டியால் /2
கஸ்தியில் சகாயர் யார்?
சாவின் சாவு ஆனோர் யார்?
என்னை அவர் கூட்டத்தில்
சேர்ப்போர் யார் மறுமையில்?
தேவ ஆட்டுக்குட்டிதான் /2
யார் எனக்கு ஞானமும்?
யார் என் பரிசுத்தமும்?
யார் என் மீட்பும் நீதியும்?
தேவனால் எனக்குண்டு
தேவ ஆட்டுக் குட்டியே /2

125. யுத்தம் செய்வோம், வாரும், கிறிஸ்து வீரரே யெஷுஆ சேனை கர்த்தர் பின்னே செல்வோமே


வெற்றி வேந்தராக முன்னே போகிறார்
ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார் - யுத்தம்
கிறிஸ்து வீரர்கள், நீர் வெல்ல முயலும்
பின்னிடாமல் நின்று ஆரவாரியும்
சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும்
மரணத்தின் கூரும் அஞ்சி அசையும் - யுத்தம்
கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம்
பக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்
கிறிஸ்து சபை யாரும் ஓர் சரீரமே
விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஒன்றே - யுத்தம்
கிரீடம், ராஜ மேன்மை யாவும் சிதையும்
கிறிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும்
பாதாளத்தின் வாசல் ஜெயங்கொள்ளாதே
என்ற திவ்விய வாக்கு வீணாய் போகாதே - யுத்தம்

126. யெஷுஆவாம் என் வாசலாலே


தேவ ஐக்கியம் சேருவேன்
தெய்வ வீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன்
உம் திவ்ய சமுகம் என்
மெய்வெளிச்சம் பாக்கியம்
கர்த்தரே உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன்
உம் கிருபையின் அனந்த
இன்பத்தால் மகிழுவேன்
என் இருதயத்தில் நீர்
வசித்தாசீர் நல்குமே
பக்தியால் உம்மண்டை சேர
என் ஜெபம் புகழ்ச்சியாய்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும்
நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர்
விசுவாசத்தை விடாமல்
அதில் பலப்படவும்
ஒருக்காலும் தவறாமல்
உம்மை நான் பின் செல்லவும்
புது மனுஷனை நீர்
என்னில் காத்தருள்வீரே
சொல்லும் கர்த்தரே நான் கேட்பேன்
நீர் இப்பாழ் நிலத்திலே
பெய்யப் பண்ணும் மன்னா சேர்ப்பேன்
நல்தியானத்துடனே
தாரும் ஜீவபானத்தை
தீரும் பசித்தாகத்தை

127. யெஷுஆவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன்


பளிங்கு கடல் மீதும் மாட்சி நகர் நின்றும்
தூதரின் இன்ப கீதம் பூரிப்புண்டாக்கிவிடும்
- யெஷுஆவின் கைகள்
யெஷுஆவின் கைகள் காக்க பாழ் லோகின் கவலை
சோதனை பாவக் கேடும் கஷ்டம் துக்கம் கண்ணீர்
பாதிக்காமல் நீங்குமே உள்ளத்தை தாக்காதே
வதைக்கும் துன்பம் நோவும் விரைவில் நீங்குமே
- யெஷுஆவின் கைகள்
யெஷுஆ என் இன்பக் கோட்டை எனக்காய் மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன், நீரே நித்திய கன்மலை
காத்திருப்பேன் அமர்ந்து ராக்காலம் நீங்கிட
பேரின்ப கரை சேர மா ஜோதி தோன்றிட
- யெஷுஆவின் கைகள்

128. யெஷுஆவே, கிருபாசனபதியே
கெட்ட இழிஞன் எனை மீட்டருள்வீர்
யெஷுஆவே, கிருபாசனப்பதியே


பூவுலகில் உம்மையன்றி
தாசன் எனக்காதரவு கண்டிலேன்
என்னுடைய நேச ரட்சகா
நேசமாய் ஏழைக்கிரங்கி
மோசம் அணுகாது காத்து
நித்தனே என்னைத் திருத்தி
வைத்தருள் புத்தி வருத்தி - யெஷுஆவே
பேயுடைச் சிறையதிலும்
காய வினைக் கேடதிலும்
பின்னமாகச் சிக்குண்ட துர்க்கன்மி ஆயினேன்
தீயோரை மீட்கும் பொருளாய்
நேயம் உற்றுதிரம் விட்ட
கிறிஸ்துவே, எனைக் கண்நோக்கித்
தீவினை அனைத்தும் நீக்கி - யெஷுஆவே
சிறைப்படுத்தினவற்றைச்
சிறையாக்கிவிட்ட அதி
தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே
குறை ஏதுனை அண்டினோர்க்
கிருபா எனைச் சதிக்கும்
குற்றங்கள் அறவே தீர்த்து
முற்றுமுடியக் கண் பார்த்து - யெஷுஆவே
பொல்லா உலகம் இதில்
நல்லார் எவரும் இல்லை புண்ணியனே
உம் சரணம் நண்ணி அண்டினேன்
எல்லார்க்கும் எல்லாம் நீர்
அல்லோ எனக்குதவி
இந்நாள், அருள் புரிந்து
உம் ஆவியை சொரிந்து - யெஷுஆவே

129. விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில்


மாறி மாறி வருமே
ஒவ்வொரு யுகங்களின் முடிவிலும் அறுப்போடு
நல்மணிகள் சேர்ந்திடுமே
சிந்திப்பீர், சிந்திப்பீர் காலங்களைச் சிந்திப்பீர்
மீட்பர் கிறிஸ்துவின் வேலை ஒன்றே
என்றும் பிரதானம்
பாளய எபிப்பெனி சத்திய வெளிச்சத்தை
உன் கண்கள் காண்பதுவும்
நிதனீம் அழைப்பினை காதுகள் கேட்பதும்
கீழ்ப்படிந்தோர் பாக்கியமே - சிந்திப்பீர்
பாபிலோன் மதுவினால் போதனை மலிந்த
கிறிஸ்தவ உலகினைப் பார்
மனந்தெளிவாகவே போராடி தீங்கினை
வைராக்யமாய் மேற்கொண்டிடு - சிந்திப்பீர்
இருள்சூழ் காலத்தில் குன்றுமேல் ஒளிரும்
நீ ஒரு விளக்கு அல்லோ
தப்பறைக் கடலினில் தவிக்கும் யாவர்க்கும்
உன் படகு சாட்சியல்லோ - சிந்திப்பீர்
மலைகள் கடலினில் சாயுங் காலத்தில்
நதி உண்டு சந்தோஷிப்பிக்க
அஞ்சாது திடனாய் அமர்ந்து அறிந்திடு
யாவேதான் தேவன் என்று - சிந்திப்பீர்

130. விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்


ஆகாரம் பாருமேன் போஷிப்பிப்பார்
தாகத்தை தீர்க்கவும் யெஷுஆவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும் வா, பாவி, வா
ஊற்றண்டை சேரவும், ஜீவனுண்டாம்
பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்
நம்பி வந்தோருக்கு திருப்தி உண்டாயிற்று
ஜீவாற்றின் அண்டைக்கு வா, பாவி, வா
மீட்பரின் பாதத்தில் சேராவிடில்
தோல்வியே நேரிடும் போராட்டத்தில்
யெஷுஆவே ரட்சகர் யெஷுஆவே வல்லவர்
யெஷுஆவே ஆண்டவர் வா, பாவி, வா
சிலுவை பாதையில் முன் செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்?
நித்திய ஜீவனும் ஆனந்தக் களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும் வா, பாவி, வா
சேருவேன் யெஷுஆவே ஏற்றுக் கொள்வீர்
பாவமும் அறவே சுத்தம் செய்வீர்
உம் சிந்தை ஆட்கொள்ள உம் சாயல் வளர
ஊக்கமாய் சகிக்க அருள் ஈயும்

131. ஆராய்ந்து பாரும் கர்த்தரே


என் க்ரியை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும்
ஆராயும் எந்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர்
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்
ஆராயும் திவ்ய ஒளியால்
துராசை தோன்றவும்
மெய் மனஸ்தாபம் அதினால்
உண்டாக்கியருளும்
ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும்
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்
ஆராயும் மறைவிடத்தை
மா தூய பார்வையால்
அரோசிப்பேன் என் பாவத்தை
உம் பேரருளினால்
இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன்
உம் பொற்பாதம் நான் பணிந்து
சுத்தாங்கம் தேடுவேன்

132. ஏற்றுக்கொண்டருளும் மா யாவே - இப்போ
ஏழையென் ஜெபத்தை யெஷுஆவின் மூலம்


சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்
சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்
திவ்விய பாதத்தில் வைக்கிறேன் அடியேன்
தேற்றிக்கொண்டருளும் மன்னிப்பின் மகிழ்ச்சி
- ஏற்றுக்கொண்டருளும்
குறைவுண்டு இதிலே அருமைப் பிதாவே
குற்றம் மன்னித்திடும் யெஷுஆவின் மூலம்
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி
முழுதும் மேசியா மேல் வைக்கிறேன் அடியேன்
- ஏற்றுக்கொண்டருளும்
பரிசுத்த ஆவி வேண்டுமென் தேவா
மனம் சித்தம் உள்ளம் புதிதாக்கிடும்
சிறுமைப்பட்டடியேன் கேட்கிறேன் உம்மை
தேற்றிடும், புதுபெலன் ஊற்றிடும் என்றும்
- ஏற்றுக்கொண்டருளும்
விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்
வெளிப்படும் மறைபொருள் புலப்படச் செய்யும்
அர்மகெதோன் நாளில் அமர்ந்திடச் செய்யும்
உமதாவி என்னுள்ளம் தங்கிடச் செய்யும்
- ஏற்றுக்கொண்டருளும்

133. மெய்பக்தரே நீர் விழித்தெழும்பும்


சந்தோஷமாய் யுகத்தை வாழ்த்திடும்
கர்த்தாவின் லோகாஸ் மானிடனானார்
விண்ணோர் இவ்விந்தையை கொண்டாடினார்
ரட்சண்ய மீட்கும் பலி ஆகினார்
இப்போதும் ராஜன் ஆட்சி செய்கிறார்
இதோ நற்செய்தி கேளும் என்றென்றும்
இம்மானுயேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்
எல்லோருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே
அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து
ஆனந்த பாட்டைப் பாடி இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மாதுதியும்
மண்ணில் நல்லோருக்கு சமாதானமும்
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பை போற்றினார்
சாவுக்குள்ளோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பை சிந்தை செய்வோம் நாம்
ஜென்மித்தல் முதல் சாவு மட்டுக்கும்
நம் நேசர் செய்த பலி வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்
நல் மீட்பர் பின்னே செல்ல நாடுவோம்
அப்போது வான சேனை போல் நாமும்
ஊழியம் செய்யலாம் எக்காலமும்
நம்மை பலியால் மீட்டுக்கொண்டவர்
இந்நாள் நம்மேல் தம்ஜோதி வீசுவார்
உன்னதர் அன்பால் ரட்சிப்படைந்தோம்
அவரின் நித்ய துதி பாடுவோம்

134. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா


யெஷுஆ உயிர்த்தெழுந்தாரே
சிறந்த வெற்றி ஆயிற்றே
கெம்பீர ஸ்துதி செய்வோமே அல்லேலூயா
கொடூர சாவை மேற்கொண்டார்
பாதாள வல்லமை வென்றார்
நம் ஸ்தோத்ர பாட்டை பாடுவோம் அல்லேலூயா
மரித்து எழுந்த வேந்தரே
என்றைக்கும் அரசாளுவீரே
களித்து ஆர்ப்பரிப்போமே அல்லேலூயா
எல்லோரும் உம்மை போற்ற நீர்
மரித்துயிர்த்திருக்கிறீர்
நித்திய ஜீவன் அருள்வீர் அல்லேலூயா

135. காரிருளில் என் நேச தீபமே நடத்துமே


வேறொளியில்/லை பாதை தூரமே, நட/த்துமே
நீர் தாங்கின் தூ/ய மாட்சி ஆகுவேன்
ஓர் அ/டி ம/ட்டும் என்முன் காட்டுமே
என் இஷ்டப்/படி நடந்தேன் - ஐயோ, முந்/நாளிலே
ஒத்தாசை தே/டவில்லை இப்போதோ, நட/த்துமே
உல்லாசம் நாடி/னேன் திகிலிலும்
வீம்புகொண்டேன் அன்பாக மன்னியும்
இம்/மட்டும் என்/னை ஆசீர்வதித்தீர், இனி/மேலும்
காட்டாறு சே/று குன்றில் தேவரீர், நட/த்திடும்
உம் ராஜ்யம் வர காத்திருக்கிறேன்
மெய்யான ஆ/சீர் என்றும் பெறுவேன் /2

136. யெஷுஆவே உம்மை தியானித்தால்


உள்ளம் கனியுமே
உள்ளூர உம்மை காணுங்கால்
பரமானந்தமே
மானிட மீட்பர் யெஷுஆவின்
சீர் சாயல் போலவே
உம் தூய வாழ்வை ஆய்ந்திடின்
பெறுவார் மகிழ்ச்சியே
நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு
நம்பிக்கை ஆகுவீர்
நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு
சந்தோஷம் நல்குவீர்
கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர்
ஈவீர் எந்நன்மையும்
கண்டடைந்தோரின் பாக்ய சீர்
யார் சொல்ல முடியும்
யெஷுஆவின் அன்பை உணர்ந்து
மெய்பக்தர் அறிவார்
அவ்வன்பின் ஆழம் அளந்து
மற்றோர் அறிந்திடார்
யெஷுஆவே எங்கள் பக்தியும்
பேரின்பமும் நீரே
இப்போதும் நித்ய காலமும்
நீர் எங்கள் மாட்சியே

137. யெஷுஆவே பாளயத்தில்

என்னை வைத்துக் கொள்ளும்
பாவம் போக்கும் இரத்தமாம்
திவ்ய ஊற்றை ஊற்றும்
மீட்பரே மீட்பரே
எந்தன் மேன்மை நீரே
நித்திய காலம் முழுதும்
நன்மை செய்குவீரே
பாவி நான் கல்வாரியால்
இரட்சிப்பை பெற்றேனே
ஞான ஜோதி தோன்றவும்
கண்டு பூரித்தேனே - மீட்பரே
ரட்சகா கல்வாரியின்
காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க
என்னை ஆள்வீராக - மீட்பரே
இன்னமும் விசுவாசத்தால்
ஆவலாய் நிற்பேனே
பின்பு ராஜ்ய பாக்யத்தில்
என்றும் வாழுவேனே - மீட்பரே

138. களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே


தம் இரத்தத்தால் நம்மை மீட்டார்
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவ பயம் நீக்குவார்
கர்த்தர் நம் பட்சம்
கர்த்தர் நம்மோடு
கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்?
யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்
யார் வல்லோர்?
திடனடைவோம் தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால்
உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்
அவரே திடன் ஆகையால் - கர்த்தர்
வாக்கை நம்புவோம் உறுதிமொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமென் என்றே

பொய்மை ஒழிந்தும் என்றும் உறுதியாய் நிலைக்கும் இது மெய் மெய்யே - கர்த்தர்
நிலைத்திருப்போம் கர்த்தரின் தியாகத்தால்
அதால் நித்திய ஜீவன் உண்டாம்
பற்றும் ஏழையை தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம் - கர்த்தர்

139. யெஷுஆவுக்கே ஒப்புவித்தேன்


யாவையும் முழுமையாய்
என்றும் அவரோடு தங்கி
நம்பி நேசிப்பேன் மெய்யாய்
ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன்
நேசரட்சகா நான் யாவும் ஒப்புவிக்கிறேன்
யெஷுஆவுக்கே ஒப்புவித்தேன்
அவர் பாதம் பணிந்தேன்
பாவ இன்பம் யாவும் விட்டேன்
இன்றே ஏற்றுக்கொள்ளுமே - ஒப்புவிக்கிறேன்
யெஷுஆவுக்கே ஒப்புவித்தேன்
முற்றும் ஆட்கொண்டருளும்
நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்
சாட்சியாம் தேவாவியாம் - ஒப்புவிக்கிறேன்
யெஷுஆவுக்கே ஒப்புவித்தேன்
ராஜா அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி
என்னை ஆசீர்வதியும் - ஒப்புவிக்கிறேன்

140. இந்த மங்களம் செழிக்கவே
கிருபை செய்யும்
எங்கள் மகா யாவே தேவனே //2


மூன்றாம் நாள் கானா கல்யாண
கற்சாடிநீர் திராட்சரஸம்
ஆனவிந்தைபோல் உம்
சந்தோஷத்தால் இவரிலும் - இந்த மங்களம்
ஆதித்தொடர்ந்தன்பைப் பொழிந்த
மானிடந்தனை
ஆணும் பெண்ணுமாகப் படைத்த
நீதிவரம் துணைகொடுத்த
பெற்று பெருகி
உலகை ஆள மேன்மை விடுத்த
ஒன்றான மெய்தேவரீரே
தாசர் பணிந்து நிற்க, உம்
ஆதரவைக் கொண்டு - சுதன்
யெஷுஆவின் மூலம் புரிந்த - இந்த மங்களம்
கிறிஸ்து யெஷுஆ சபைக்குத் தலையாய்
இருக்கிறார்போல்
தன் தலையாம் கணவனுக்கு
இந்த மனையாள் கீழ்ப்படிந்து
குணசாலியாய்
இவர் தம்மை அலங்கரிக்க
இப்பெண்ணை இம்மணவாளன்
தன் சொந்த சரீரமாக
நேசித்து தேவப்பிரமாணம்
இவரில் திகழ்ந்திடவே - இந்த மங்களம்
இந்த வனாந்திர யாத்ரையில்
இணைபிரியா
தாசர்களாய் உம்மில் மகிழ
ஆவியின் கனிகள் நிறைந்து
ஊக்கம் சகிப்பும்
இவரில் அணிகலனாகி
தன் சிலுவையை சுமந்து
ஜீவபாதை முன்னேகிட
எல்லாம் இவர் நன்மைக்கென
கூடி வந்திலங்கிடவே - இந்த மங்களம்

141. ஓசன்னா பாடுவோம் யெஷுஆவின் தாசரே
உன்னதத்திலே தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா


முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்ன பாலர் பாடினார்
அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய் துதி பாடுவோம்
- ஓசன்னா
சின்ன மறி மீதிலேறி அன்பர் பவனி போனார்
இன்றும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்
- ஓசன்னா
பாவமதை போக்கவும் இப்பாவியை கைத்தூக்கவும்
பாசமுள்ள யெஷு/ஆ பவனியாகப் போகிறார் - ஓசன்னா

142. குருசினில் தொங்கியே குருதியும் வடிய


கொல்கொதா மலை தனிலே – நம்
குரு யெஷுஆ சுவாமி கொடுந்துயர் அடைந்தார்
கொள்ளாய் கண்கொண்டு
சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத் திரள் சூழ
பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க – யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை
இருள் அந்தகாரம் பூமியை சூழ்ந்தே
இயற்கையும் நாணுதையோ – தேவ
சுந்தர மைந்தன் உயிர்விடுங் காட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ
ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
யெஷுஆவின் விலாவதிலே – அவன்
தீட்டிய தீட்சை குருதியும் ஜலமும்
திறந்தூற்றோடுது பார்
எருசலேம் மாதே மறுகி நீ அழுது
ஏங்கிப் புலம்பலையோ – நின்
எருசலையதிபன் இளமணவாளன்
எடுத்த கோலமிதோ

143. யெஷுஆவின் இன்ப நாமத்தை எல்லாரும் போற்றுங்கள்


விண்ணோர்கள் போல அவரை
நீர் வாழ்க! வாழ்க! வாழ்க!
வாழ்க! என்னுங்கள்
பிசாசினின்று மாந்தரை மீட்டோரைப் போற்றுங்கள்
ஒப்பற்ற நேசர் அவரை. - நீர் வாழ்க
எல்லாரும் அருள் ராஜனை மகிழ்ந்து போற்றுங்கள்
ஜீவாதிபதி அவரை - நீர் வாழ்க

144. எழுந்தார் யெஷுஆ ராஜன் - ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் யெஷுஆ ராஜன்


சாவின் பயங்கரத்தை ஒழிக்க – தீய
ஆவியின் வல்லமையை அழிக்க - இப்
புவியின் மீது சபை செழிக்க – எழுந்தார்
விண்ணவர் அவரையே போற்ற - பாவத்
தமிழ்ந்த மனுகுலத்தை மாற்ற
விழுந்தவரை கரையேற்ற – எழுந்தார்
மரித்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அடைய – தேவ
பக்தர் யாவரும் களிக்க – எழுந்தார்
கருதிய காரியம் வாய்க்க – தேவ
திட்டங்கள் யாவும் செழிக்க – தம்
மனுகுலத்தாரையும் காக்க – எழுந்தார்

145. யெஷுஆவின் வார்த்தை கேட்டு செய்தவன்


கற்பாறை மேல் தன் வீட்டைக் கட்டின
புத்தியுள்ள மனுஷனுக்கொப்பாவான்
பெருமழை பெய்தது
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது
பெருவெள்ளம் வந்து காற்றடித்தது
அந்த வீட்டின் மேல் மோதி தாக்கிற்று
அந்த வீடு நிலைத்து நின்றது
யெஷுஆவின் வார்த்தை கேட்டு செய்யாதவன்
மணலில் தன் வீட்டைக் கட்டின
புத்தியற்ற மனுஷனுக்கொப்பாவான்
பெருமழை பெய்தது
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது
பெரு வெள்ளம் வந்து காற்றடித்தது
அந்த வீட்டின் மேல் மோதி தாக்கிற்று
அந்த வீடு விழுந்துவிட்டது

146. என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
சொல்லக்கூடுமோ!
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்துவிட்டாரே


கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மை தேடியே வந்த
ஆயனை போற்றிடுவோம்
பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவ குமாரன் நம் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே
அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை நமக்கு
அருளினதாலே
நிச்சயம் மீட்பரை பற்றிய சாட்சி
பகர வேண்டியதே
ஒன்றான மெய் தேவ மைந்தனின் பலியால் மீட்கப்பட்டிடவே
மண்ணுலகில் வந்து விண்ணுலகேவிய
மன்னனை ஸ்தோத்தரிப்போம் - என்ன

147. யெஷுஆவின் நாமமே திருநாமம் - முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்


யெஷுஆவின் நாமமே திருநாமம் - முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்
பூவுலகில் அதற்கு இணையில்லையே – விசு
வாசித்த பேர்களுக் குறையில்லையே //2 – யெஷுஆவின்
இத்தரையில் மெத்த அதிசய நாமம் - அதை
நித்தமும் தொழுபவர்க்கு ஜெய நாமம் //2 – யெஷுஆவின்
உத்தம மகிமைப் பிர/சித்த நாமம் - இது
சத்திய விதேய மனமொத்த நாமம் //2 – யெஷுஆவின்
விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் - நமை
அண்டிடும் பயம் போக்கும் ஜெய நாமம் //2 – யெஷுஆவின்
பட்சமுள்ள ரட்சை செய்யும் உபகாரி – பெரும்
பாவ பிணிகள் நீக்கும் பரிகாரி //2 – யெஷுஆவின்

148. தாசரே இத்தரணிக்கு அன்பாய்
யெஷுஆவின் நற்செய்தி சொல்லுவோம்


நேசமாய் யெஷுஆவை கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் - தாசரே
வருத்தப்பட்டு பாரம் சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் யெஷுஆ பாவப் பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே - தாசரே
நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்கவொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே - தாசரே
மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்

நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம் - தாசரே

149. ராஜாதி ராஜன் புகழ் யெஷுஆ மகாராஜன் அவர்
ராஜ்ஜியம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க – அவர் திருநாமமே விளங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே
அல்பா ஓமெகா அவர்க்கே அல்லேலூயாவே


உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் யெஷுஆ மீட்பருக்கே மகிமை சூட்டிடுங்கள்
- ராஜாதி
நாலாதேசத்திலுள்/ளோரே நடந்து வாருங்கள்
மேலோன் யெஷுஆ மீட்பருக்கே மெய் துதி செய்திடுங்கள்
- ராஜாதி
நல்மனதோடு சொல்லுகிறேன் நாட்டார்களே நீங்கள்
புன்னகையோடு நிற்பானேன் புதுகீதம் பாடுங்கள் - ராஜாதி
இந்த நல் தேசத்தார்களே ஏகமாய் கூடுங்கள்
சிந்தையில் மகிழ்வடைந்தே என்றும் சீராய் வாழ்ந்திடுங்கள்
- ராஜாதி
யெஷுஆ என்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
தாவீதின் மைந்தனுக்கே துதி கனம் முழங்குங்கள்
- ராஜாதி
சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
சகலத்தையும் ஆள்பவரை பணிந்து போற்றிடுங்கள்
- ராஜாதி

150. ஐயனே உமது திருவடிகளுக்கே
ஆயிரமாயிரம் தோத்திரம்


மெய்யனே உமது தயைகளை அடியேன்
விவரிக்க எம்மாத்திரம்? ஆ...ஐயனே
இருதயங்களை நீர் புதியதே ஆக்கும்
ஏழையை முழு குணமாக்கிடும்
கருணையாய் என்னை உமதாக்கிக் கொண்டு
கள்ளமெல்லாம் போக்கும் ஆ...ஐயனே
நா விழி செவியை, ராஜனே இந்த
நாளெல்லாம் நீர் காத்திடும்
தீவினை விலகி நான் திருமுகம் நோக்க
தெய்வமே அருள் கூரும் ஆ...ஐயனே
கை காலால் நான் பாவம் புரியாமல்
கர்த்தனே துணை நில்லும்
துய்யனே உம்மால்தான் என் இதயம்
தூய வழி செல்லும் ஆ...ஐயனே
ஊழியம் தனையான் உண்மையாய் செய்ய
உதவி என்றும் நீர் செய்வீரே
ஏழை நான் உமக்கே இசைய நல் ஆவி
இன்பமாய் பெய்வீரே ஆ...ஐயனே
அத்தனே உமது மகிமை நோக்க
அயலான் மேல் நலம் பார்க்க
சித்தமாய் அருளும் மெய் விசுவாசம்
தேவனே உமக்கேற்க ஆ...ஐயனே

151. ஆனந்தமே ஜெயம் ஜெயம்
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்


ஞான ரட்சகர் யாவே நமை /2
இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் -புகழ் ஆனந்தமே
நீதி ஞானம் வல்லமை அன்பெனும்
தளரா செங்கோல் கொண்டவராம்
நம் ரட்சகர் யாவே நமை /2
வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால்-புகழ் ஆனந்தமே
முந்து வருடமதனில் மனுடரில் வெகு
மோச கஸ்திகள் தனிலே உழல
தந்து நமக்குயிர் உடை உணவும் /2
வெகு தயவுடன் தேவன் தற்காத்ததினால் -புகழ் ஆனந்தமே

152. சொற்பகாலம் பிரிந்தாலும் பார்


பின்பு ஏக சபையாக
கூடுவோம் ஆனந்தமாக
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
கூடுவோம், கூடுவோம்
யெஷுஆவோடு வாழுவோம்
கூடுவோம், கூடுவோம்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
மிக்க ஞானத்தால் நடத்தி
மோசமின்றியும் காப்பாற்றி
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் - கூடுவோம்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
சிறகாலே மூடி காத்து
மன்னா தந்து போஷிப்பித்து
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் - கூடுவோம்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
துன்பம் துக்கம் நேரிட்டாலே
கையில் ஏந்தி அன்பினாலே
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் - கூடுவோம்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
ஜெயக்கொடி பறந்தாடும்
சாவும் தோற்றுப் பறந்தோடும்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் - கூடுவோம்

153. ஆனந்தமாய் துன்பம் யாவும் மேற்கொள்ளுவோம்
தூய குமாரன் பெலன் அருளுவார்


நாளுக்கு நாள் அற்புதமாய் நம்மைத் தாங்கிடும்
நேசர் நல் யெஷுஆ நம்மோடிருப்பார் - ஆனந்தமாய்
சேற்றிலிருந்தெம்மை தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான நம் உள்ளம் உருக்கின அன்பினையே
கண்டு நன்றியுடன் பாடிடுவோம் - ஆனந்தமாய்
கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்து நம்மை அர்ப்பணிப்போம்
அவர் அல்லால் மீட்பு இப்புவியில் வேறே இல்லை
என்றும் நமக்கவர் ஆதரவே - ஆனந்தமாய்
உம்மை பின் சென்று ஊழியம் செய்து
மெய் சத்ய ஒளியை காட்டிடவே
தாரும் யெஷுஆ ஏழையாம் எமக்கும் உம் கிருபை
கண்பாரும் என்றும் உம் தாசர்களை - ஆனந்தமாய்
தேற்றிடுதே உம் வாக்குகள் எம்மை
ஆற்றிடுதே உந்தன் சமுகமே
பெலத்தின் மேல் பெலன் அடைந்து நாம் சேரவே
ராஜ்ய கிருபை நெருங்கிடுதே - ஆனந்தமாய்

154. ஆச்சரியமே! அதிசயமே
கர்த்தரின் செயல்கள் ஆதி பக்தரிடம் //2


செங்கடல் இரண்டாய் பிரிந்து போக
சொந்த ஜனங்களை நடத்தினாரே
இஸ்ரயேலின் துதிகளாலே
ஈன எரிகோ வீழ்ந்ததுவே //2 - ஆச்சரியமே
ஏழு மடங்கு எரி நெருப்பில்
ஏழை தம் தாசரை காத்திட்டாரே
தானியேலைச் சிங்க கெபியில்
தூதன் துணையால் காத்தாரே //2 - ஆச்சரியமே
பனி மழையை நிறுத்தினாரே
பக்தன் எலியாவின் வாக்கினாலே
யோசுவாவின் வார்த்தையாலே
சூரிய ஒளியும் மறைந்ததுவே //2 - ஆச்சரியமே
மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்
மா பெலன் தேவனிடம் அடைந்தான்
வீழ்த்தினானே கோலியாத்தை
வீரன் தாவீது கல்லெறிந்தே //2 - ஆச்சரியமே
நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே
தம்மை நோக்கி வேண்டும்போது
தாங்கி நம்மை ஆதரிப்பார் //2 - ஆச்சரியமே

155. தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் //2


நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ கிருபை
சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன் சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ கிருபை
அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தூதன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ கிருபை
காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் நம் பாதையில் ஒளியாய்
நம்மை நடத்தினாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ கிருபை
வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ கிருபை

156. சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே


எந்தன் நேசர் யெஷுஆ என்னை ரட்சித்தார்
பெற்றதாம் நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணியே
பேரன்பு பொங்க என்றும் பாடுவேன்
ஆர்ப்பரித்து நான் ஆனந்தம் கொள்வேன்
ஆண்டவர் சமுகம் என்னைத் தேற்றுதே
துன்பங்கள் யாவுமே இன்பமாய் மாறுதே
இன்ப யெஷுஆ நாமத்தில்
இரட்சிப்பின் கீதம் என்னில் பொங்குதே
இரட்சகர் என் பாவம் முற்றும் மன்னித்தார்
மானிடர் மாறினும் அன்பை விட்டோடினும்
மா தேவ அன்பு நம்மை என்றும் காத்ததால் - ஆர்ப்பரித்து
ஆனந்த கீதம் என்னில் பொங்குதே
ஆரவாரமின்றி ராஜ்யம் தோன்றுமே
ஆவலாய் விழித்தே ஆவியில் ஜெபித்தே
ஆனந்தமாய் நான் காத்து நடப்பதால் - ஆர்ப்பரித்து
சீயோனின் கீதம் எங்கும் தொனிக்குதே
சிறப்புடன் வந்ததை சேர்த்துக் கொண்டதால்
சீர் செங்கோல் ஆட்சியே பூமியை சூழுமே
சீரான மாந்தர் அதில் என்றும் வாழவே - ஆர்ப்பரித்து

157. எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க


யெஷுஆவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன் //2
அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
அண்ணலாம் யெஷுஆவை பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன் //2
சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
நேசமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்
ஜீவ வழி நடத்தினாரே //2 - அல்லேலூயா
சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை
மறைத்தார் போல் தோன்றினாலும்
சத்துருவின் வல்லமையை முழுவதும் வெல்ல
பெலனையும் பொழிந்தாரே //2 - அல்லேலூயா
இருட்காலம் பெருகிட நேர்ந்தாலும் சத்ய
ஒளிதனை ஈந்தாரே
அங்கும் இங்கும் தூதரை எழும்பிடச் செய்தே
அடைக்கலம் அளித்தாரே //2 -அல்லேலூயா
களிப்போடும் பரதீசில் சேர்த்திட – நம்
கர்த்தரே வந்திட்டாரே
நியாய தீர்ப்பாம் நீதியின் ஆட்சியை செய்தே
நம்மையும் சேர்ப்பாரே //2 - அல்லேலூயா

158. குதூகலம் நிறைந்த நன்னாள்
இந்த பூமியில் தோன்றிடுமே
இதுவரை இருக்கும் துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தமே //2


தள கர்த்தராம் யெஷுஆ முன்நின்று
ஜெயம் அளித்திடுவார் நன்று
அவர் கிருபையிலே புது பெலன் அடைந்து
ஜெய வீரராய் வென்றிடுவோம் //2 - குதூகலம்
பூமியின் குடிகளெல்லாம்
நடுப் பகல் போல ஒளி வீசிடும்
சத்திய ஒளிதனிலே தம் சித்தமுடன்
மெய் வார்த்தையை தியானம் செய்வார் //2 - குதூகலம்
புது விழிப்புடன் ஜெபத்தினில
தேவ வார்த்தையை அப்பியாசித்தே
அதை பரப்புவதிலும் தீமை சகிப்பதிலும்
ஒன்றாய் இணைந்திடுவோம் நாமும் //2 - குதூகலம்
இந்த ஆயிரம் ஆண்டினிலே
தேவ நீதியும் செயல்படுதே

முழு மனுகுலமும் மிகச் சீரடைந்தே நித்ய ஜீவனைப் பெற்றிடுமே //2 - குதூகலம்

159. எந்தன் நாவில் புதுப் பாட்டு
எந்தன் யெஷுஆ தருகிறார்


ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள்வரையில் அல்லேலூயா //2
பாவ இருள் நம்மை வந்து சூழ்ந்துகொள்கையில்
யாவே தேவன் சித்தப்படி நம்மை மீட்டாரே //2 - ஆனந்தம்
சேற்றில் வீழ்ந்த நம்மை அவர் தூக்கி எடுத்தார்
ஜீவ தண்ணீர் வார்த்தை கொண்டே சுத்தம் ஆக்கினார் //2
- ஆனந்தம்
உற்றார் நண்பர் யாரும் நம்மை
கையிலேந்தி நம் வழியின் பாதை காட்டினார் //2 - ஆனந்தம்
வாதை நோயும் பாவதோஷம் யாவும் போக்கினார்
சத்ய ஒளி வீசச் செய்து ராஜ்யம் சேர்க்கிறார் //2 - ஆனந்தம்

160. வாசலண்டை நின்று ஆவலாய் தட்டும்
நேசர் யெஷுஆவுக்கு உள்ளம் திறவாயோ
நீசனை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று உன்னை அழைக்கிறாரே //2


ஆதரிப்பார் யாருமில்லை என்றெண்ணி
ஆதரை மீதினில் அலைந்திடுவாயோ
காணாத ஆட்டை தேடி வந்த மேய்ப்பர்
கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் //2
அற்ப வாழ்வை நித்ய வாழ்வு என்றெண்ணி
சாத்தான் வலையில் விழுந்திட்டாயோ
தற்பரன் தயவை தள்ளிவிட்டால்
உன் நிலை என்னாகும் யோசிப்பாயே //2
பாவத்தினால் சாப ரோகத்தில் தொய்ந்து
மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்
பாவத்தை போக்கிடும் தூய ரத்தத்தில்
நம்பிக்கைக் கொண்டு நேசரிடம் வா //2 - வாசலண்டை

161. எந்தன் ஜெப வேளை உம்மைத் தேடி வந்தேன்
தேவா என் ஜெபம் கேளுமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே


உம்மை நான் தேடி வந்தேன் //2


சோராது ஜெபித்திட உம் ஆவி பெலன் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயை வேண்டி உம் பாதம் வந்தேன் - எந்தன்
உம் வார்த்தை எந்நாளும் பின்பற்ற அருள் செய்யுமே
மறைப் பொருள் விளக்கிடுமே
உமக்காக காத்திருப்பேனே – எந்தன்
நம்பிக்கை இல்லாமல் வாழ்கின்ற மாந்தர் தம்மை
மீட்டிட்ட எம் தேவனே
துதி கனம் என்றும் உமக்கே - எந்தன்

162. நெஞ்சமே தள்ளாடி நொந்து நீ கலங்காதே
வல்ல யெஷுஆ உனக்கு நல்ல நேச துணையே


தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை
தாக்கியே பகைஞராக நின்ற போதிலும் - உன்னை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் - நெஞ்சமே
ஜீவனும் இழந்து துன்பம் மேவினாலும் - மா
சிறுமையாய் சகிக்கொண்ணா வறுமை கொண்டாலும்
பஞ்சமும் பசியும் வந்து கெஞ்சவைத்தாலும் - மிகு
பாரமாய் சுமை உன் மேலே பற்றி நின்றாலும் - நெஞ்சமே
கெட்ட நோயிலும் நீ அகப்பட்டுழன்றாலும் - எந்த
கேடுகள் உன் மேலே பற்றி நின்றாலும்
ஆன வீடும் தானும் கொள்ளை ஆனபோதிலும்
கிறிஸ்தண்ணலே உமக்கே துதி எந்நாளும் என – நெஞ்சமே

163. சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உள்ளத்தின் நேசமே யெஷுஆ என் பிரியமே //2


ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே
பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே //2
- சாரோனின் ரோஜாவே
அன்பரை சந்திக்க ஆயத்தம் ஆகினோர்
யெஷுஆவின் மந்தையாய் மகிமையில் சேர்ந்தனரே //2
- சாரோனின் ரோஜாவே
நம் வல்ல ரட்சகர் வாக்கு மாறாதவர்
அவர் தம் ராஜ்யத்தை ஓங்கிடச் செய்வாரே //2
- சாரோனின் ரோஜாவே

164. அன்பின் நேசர் யெஷுஆ எனக்கெல்லாம் அவரே


பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்
அவர் பள்ளத்தாக்கின் லீலி எனக்கெல்லாம் அவரே
என் ஆத்துமத்தின் பாதுகாவலர்
என் கர்த்தர் என் ஆறுதல் அவர் மீட்பு என் ஜெயம்
என் கவலைகளெல்லாம் தாங்குவார்
அவர் பள்ளத்தாக்கின் லீலி அதிகாலை விடிவெள்ளி
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்
நம் சஞ்சலங்கள் நீங்க நம் பாவம் சுமந்து
சிலுவையில் அவர் ஜீவனை விட்டார்
நான் யாவையும் வெறுத்தேன் என் நேசர் மீட்பர்க்காய்
ஒருபோதும் அவர் கைவிட மாட்டார்
இவ்வுலக வாழ்வில் என்னை சாத்தான் சோதித்தாலும்
நல் மீட்பர் எனக்கு ஜெயம் தருவார்
அவர் பள்ளத்தாக்கின் லீலி அதிகாலை விடிவெள்ளி
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்
கர்த்தாவின் சித்தத்துக்கு நான் கீழ்ப்படிந்தோடி
எல்லா துன்பத்தையும் சகிப்பேன்
எனக்கு பயம் ஒன்றுமில்லை என் அரண் அவரே
என் கோட்டையும் என் கன்மலை அவர்
ஜீவ நதிகளின் ராஜ்யத்தில் அவர் என்னை சேர்க்கையில்
மானிட மீட்பின் மேன்மை காண்பேனே
அவர் பள்ளத்தாக்கின் லீலி அதிகாலை விடிவெள்ளி
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் /2

165. ஜீவனுள்ள யெஷுஆவே வாரும்


ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும் //2
யெஷுஆவே நீர் நித்தியர் யெஷுஆவே நீர் பரிசுத்தர்
யெஷுஆவே நீர் சத்தியர் யெஷுஆவே நீர் வல்லவர்
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்
பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே ஐயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ - யெஷுஆவே
பாரிலுள்ள மானிடர்க்காக
இன்னுயிரை ஈந்த யெஷுஆவே
மனதுருகி வந்த மக்கள் மேல்
சத்ய ஒளி வீசச் செய்குவீர் - யெஷுஆவே
வாக்குத்தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை மீட்பரே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல பெலன் அருள் ஊற்றுவீர் - யெஷுஆவே
நியாயத்தீர்ப்பின் நாட்கள் நெருங்குதே
ஞானம் நீதி வல்லமையோடே
தேவ ராஜ்ய ஆட்சி துவங்கிற்றே
தெய்வ மீட்பின் காலம் நெருங்குதே - யெஷுஆவே

166. யெஷுஆ என்தன் நேசரே


கண்டேன் வேத நூலிலே
பாலர் அவர் சொந்தந்தான்
தாங்க அவர் வல்லோர்தான்
யெஷுஆ என் நேசர் /3
மெய் வேத வாக்கிதே
என்னை மீட்க மரித்தார்
மீட்பின் வாசல் திறந்தார்
என்தன் பாவம் நீக்குவார்
மீட்பர் என்னை ரட்சிப்பார் - யெஷுஆ என்
பெலவீனம் நோவிலும்
என்றும் என்னை நேசிக்கும்
யெஷுஆ தாங்கித் தேற்றுவார்
பாதுகாக்க வருவார் - யெஷுஆ என்
என்தன் மீட்பர் யெஷுஆவே
தாங்குவார் என்னருகே
தாழ்மையாய் கீழ்ப்படிந்தால்
ராஜ்யம் சேர்ப்பார் அன்பினால் - யெஷுஆ என்

167. பூமி அதிர்ந்தாலும் ஆழி பொங்கினாலும் என்ன நேரிட்டாலும் அஞ்சிடேன்


யாவே துணை நிற்கிறார் அஞ்சிடேன்
ஓர்காலும் அவர் கைவிடார் அஞ்சிடேன் - பூமி
ஓர் ஜீவ நதியுண்டு பார் அஞ்சிடேன்
அதால் சந்தோஷம் செய்கிறார் அஞ்சிடேன் - பூமி
நான் உன் தேவன் என்கிறார் அஞ்சிடேன்
மாற்றாரை ஓடப்பண்ணுவார் அஞ்சிடேன் - பூமி
யெஷுஆ ராஜன் நாமம் ஜெயம் நம்புவேன்
என் யெஷுஆ ராஜன் நாமம் ஜெயம் நம்புவேன்
யெஷுஆ நாமம் ஜெயம் /2
யெஷுஆ நாமம் ஜெயம் நம்புவேன்

168. யெஷுஆ கற்பித்தார் ஒளி வீசவே


சிறு தீபம்போல இருள் நீக்கவே
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்
யெஷுஆ நோக்கிப்பார்க்க ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்.
பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்
உலகின் மாஇருள் நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

169. கர்த்தாவை நல்ல பக்தியாலே


எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலேயும் அவராலே
அன்பாய்க் காப்பாற்றப்படுவான்
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோருக்கவர் கன்மலை
அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ?
நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ?
விசாரத்தாலே நமக்கு
இக்கட்டு அதிகரிக்குது
உன் காரியத்தை நலமாக
திருப்ப வல்லவருக்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக
விசாரிப்பார், அமர்ந்திரு
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர்
சந்தோஷிப்பிக்கிறதற்கான
நாள் எதென்றவர் அறிவார்
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார்
தீவிரமாய்த் திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத் தரும்
நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே
எப்போதும் பாடும்
நோவுமற்றோன்
பிரியனென்றும் எண்ணாதே
அநேக காரியத்துக்கு
பின் மாறுதல் உண்டாகுது
கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னனாக்கி
உயர்த்த ஸ்வாமிக்கரிதோ?
தாழ்வாக்குவார், உயர்த்துவார்
சிட்சிக்கிறார், அணைக்கிறார்
மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக
நடந்து கொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக
அப்போ தெய்வாசீர்வாதத்தை
திரும்பக் காண்பாய் நீதிமான்
கர்த்தரால் கைவிடப்படான்

170. தேவரீரே தேவரீரே
உம் அருள் தாருமே
களிமண்ணான என்னையுமே
நல்பாத்திரம் ஆக்கிடுமே


உம்வழி சத்தியம் ஜீவனே
உம் ஆசீர் தாருமே
நீர் என்னை கைவிடீர் என்றுமே
உணர்ந்தேன் உள்ளத்திலே - தேவரீரே
என்னால் எதுவும் கூடாதுதான்
உம்மாலே கூடும் எல்லாம்
பெலனற்ற பாண்டம் நான் தானையா
உம் பெலன் தாருமையா - தேவரீரே
உம் வழி செல்ல ஆசிக்கிறேன்
என் சுயம் வெறுக்கிறேன்
உலகம் என்னை முற்றும் எதிர்த்தாலும்
உமதாவியால் தேற்றுமே - தேவரீரே
நீரே தேவன் உந்தன் தயவுக்கு
நன்றியால் பணிகிறேன்
என் வழி எதிலும் வேண்டாமே
ஆகட்டும் உம் சித்தமே - தேவரீரே

171. நன்றியால் பாடுவேன் என் நேசர் யெஷுஆவை


அவர் நாமம் போற்றுவேன் /2
என்தன் ஜீவநாளெல்லாம் /3 - நன்றியால்
கோடாகோடிகள் உந்தன் கிருபை ஈவுகள் /2
போதா நாவுகள் /2
உம்மை பாட கீதங்கள் /2 - நன்றியால்
தேடும் வேளையில் அவர் தென்படும் நேசரே /2
கேளும் வேளையில் /2
அவர் பொழிவார் அன்பையே /2 - நன்றியால்
மரண பிடிகளை முற்றும் ஜெயித்தவர் இவரன்றோ /2
மாறா ஜீவனை /2
என்றும் அருள்பவர் இவரன்றோ /2 - நன்றியால்
கோடாகோடிகள் உந்தன் கிருபை ஈவுகள் /2
போதா நாவுகள் /2
உம்மை பாட கீதங்கள் /2 - நன்றியால்
தேடும் வேளையில் அவர் தென்படும் நேசரே /2
கேளும் வேளையில் /2
அவர் பொழிவார் அன்பையே /2 - நன்றியால்
மரண பிடிகளை முற்றும் ஜெயித்தவர் இவரன்றோ /2
மாறா ஜீவனை /2
என்றும் அருள்பவர் இவரன்றோ /2 - நன்றியால்

172. மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுமே


தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர் //2
தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாய் இருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே - மான்கள்
நெஞ்சமே கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் மனமும்
மகிழ்ச்சியால் நிறைந்திடுதே - மான்கள்
யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைத்தனரே - மான்கள்
தேவரீர் பகற் காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவில் பாடும் பாட்டு எந்தன்
வாயினிலிருக்கிறது - மான்கள்
கன்மலையாம் தேவன்
நீர் என்னை மறப்பதில்லை
சத்துருவால் அடியேன் என்றும்
துன்புற்று சோர்வதில்லை - மான்கள்

173. அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் ஆவியால் உயிர்ப்பிக்குமே


அருள் ஏராளம் அருள் அவசியமே
மீட்க்கப்பட்டவர்கள் மேலே திரளாய்ப் பெய்யட்டுமே
அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் - அருள்
அருள் ஏராளமாய்ப் பெய்யும் யெஷுஆ வந்தருளுமே!
இங்குள்ள கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமே – அருள்
அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் ஆண்டவரே!
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே! - அருள்

174. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்


ஊற்றுத் தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கினிலும்
யெஷுஆ ராஜன் பின்சென்றேகி ராஜ்யம் நாடுவேன்
நித்திய ஜீவன் ஆசீர் நோக்கி ஓடுவேன்
பின்செல்வேனே மீட்பர் பின்செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின்செல்வேனே மீட்பர் பின்செல்வேனே
யெஷுஆ காட்டும் பாதை எல்லாம் செல்லுவேன்
கார்மேகம் மெல்ல ஊடும் பள்ளம் எங்கிலும்
பெருங்காற்று வீசும் இருள் ஸ்தானத்திலும்
யெஷுஆ காட்டும் பாதை எங்கும் அஞ்சவே மாட்டேன்
ரட்சகர் கைதாங்க தைரியம் கொள்ளுவேன்
- பின்செல்வேனே
நாள்தோறும் யெஷுஆ ராஜன் கிட்டிச்சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றி சுகமாய் காப்பார்
என்னை தாசரோடு சேர்த்து வாழ்விப்பார் - பின்செல்வேனே

175. நிகரே இல்லாத யாவே தேவா
மானிடர் காணா ஒளிப் பிரகாசா

துதி பாடிட எங்கள் நேசா
பதினாயிரம் நாவுகள் போதா //2 - நிகரே
விண்ணும் மண்ணும் நீர் படைத்தீரன்றோ
நீந்தும் ஜீவன்கள் உம் கிரியையன்றோ
கானில் வாழும் விலங்குகளும்
உமது கரத்தின் செய்கையன்றோ - நிகரே
பலபல நிறங்களில் மலர்கின்ற
காட்டு புஷ்பங்கள் உம் ஞானமன்றோ
பலவித சுவை தரும் கனிகள்
உமது அறிவின் வெளிப்பாடு அன்றோ - நிகரே
மண்ணின் தூளினால் மனுவை செய்தீர்
ஜீவ சுவாசத்தை அவனுக்கீந்தீர்
பாவத்தினால் அவனிழந்த ஜீவன்
பெற்றிட கருணை கொண்டீர் - நிகரே
தேவ மைந்தன் அவர் பாவிகட்காய்
தம்மை பலியாய் கொடுத்தாரே
உமது நீதி வெளிப்படவே
நாங்கள் பெற்றோம் மறு ஜீவனையே - நிகரே

176. உம் பாதம் பணிந்தேன்
எந்நாளும் மறவேன்
உம்மையன்றி யாரைப் பாடுவேன்
யெஷுஆ உந்தன் அன்பு என்னில் பொங்குதே /2


பரிசுத்தமே பரவசமே பரனே
குருவே வரம் பொருளே
உம் க்ருபையால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் -உம்
புது எண்ணையால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
தலைநகர் சாலேமில் சேர்த்திடுவீர் - உம்
நெருக்கத்திலே உம்மையழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசை கெட்டெங்கும் நான் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னை தாங்குகின்றீர் -உம்
என் முன் செல்லும் உம் சமுகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே – உம்

177. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே


ருமையாய் யெஷுஆ நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்
ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெருவெள்ளமே அல்லேலூயா
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெருவெள்ளமே
கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணிபோல் எம்மைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம் - ஆத்துமமே

178. கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்து யெஷுஆவுக்காய்


சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல //2
ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் யெஷுஆவின் அஸ்திபாரம் /2
பத்திரமாக தாங்கிடுவார் /2
கைவேலை அல்லா வீடொன்றை
கர்த்தரின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம் /2
கட்டிடுவோமே நித்தியத்திற்காய் /2
மதியின்றி மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே
ஆவலாய் யெஷுஆவின் வார்த்தைக் கேட்போம் /2
அவரே மூலைக்கல் ஆகிட்டாரே /2 - கட்டடம் கட்டிடும்

179. அன்பின் தேவ நற்கிருபையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையின் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்
அன்பின் தேவ நற்கிருபையிலே


அற்புதமாக எமை அழைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
சிந்துண்ட உம் ரத்தத்தினால்
எப்பொழுதும் வாழ் மீட்பரானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
காண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்
அன்பின் தேவ நற்கிருபையிலே
கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் ஈந்த உம் ஜீவன் நிறுத்தும்
எம் மானிடரை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுமே
உமது பலியால் யாவரும்
திரும்பவும் வாழ தயை புரிவீர் - அன்பின் தேவ

180. மகிழ்ந்திடுவேன் நான் யாவேக்குள்
களிகூருவேன் என் தேவனுக்குள்
ரட்சிப்பின் தேவனுக்குள்
ஆமென் அல்லேலூயா /4


அத்திமரம் துளிர்விடாமற் போனாலும்
திராட்சைச் செடியில் கனி இல்லாமல் போனாலும்
- மகிழ்ந்திடுவேன்
ஒலிவ மரத்தில் பலனற்று போனாலும்
வயல்களில் தானியம் விளையாமல் போனாலும்
- மகிழ்ந்திடுவேன்
கிடையில் ஆடுகள் முதலற்று போனாலும்
தொழுவத்தில் மாடுகள் இல்லாமல் போனாலும்
- மகிழ்ந்திடுவேன்

181. யெஷுஆ என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம் //2


வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது /2 - யெஷுஆ
பாவம் மரணம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே /2 - யெஷுஆ
பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது
மெய் ராஜ்யத்தில் சேர்க்கும் நாமமது /2 - யெஷுஆ
உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
தேவ குமாரனின் நாமமது
உலகெங்கும் தொனித்திடும் நாமமது /2 - யெஷுஆ
சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடை முற்றும் அகற்றிடும் நாமமது /2 - யெஷுஆ

182. இருள் சூழ்ந்த காலம் நடந்திடுதே


அருள் உள்ள நாட்களாய் மாற்றிடுமே
திறவுண்ட அழைப்பு அடைபடுமுன்
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?
திறவுண்ட அழைப்பு அடைபடுமுன்
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம் //2
தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
கரிசனம் உள்ளோர் நீர் முன் வருவீர்
மெய் சத்ய அழைப்பை அவர்களுக்கும்
அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர் - திறவுண்ட
இனிவரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் சகோதரரே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே - திறவுண்ட
அழைக்கப்பட்டோர் எனும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அதன் நடுவில் உண்டு
ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்னும் வேண்டும் -திறவுண்ட
யெஷுஆவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
மெய் விசுவாச ஓட்டத்திலே
வெற்றியின் இலக்கை அடைந்திடவே - திறவுண்ட

183. உறக்கம் தெளிவோம்
உற்சாகம் கொள்வோம்
யுகத்தின் இறுதிவரை
எக்காள தொனிதான்
இப்போதும் முழங்கும்
இந்நாளில் உழைத்திடுவோம்


அசுத்தம் களைவோம்
அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் ‌திட்டம் ஜெயிக்க
நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம் - உறக்கம்
அச்சம் தவிர்ப்போம்
தைரியம் கொள்வோம்
சத்தியம் சாட்சி கூறும்
ஞானம் நீதி வல்லமை
அன்பு செயல்பட
உறுதி கொள்வோம் - உறக்கம்
கிறிஸ்துவுக்காய்
துன்பத்தை சகிப்போம்
அவர் நுகம் இலகுவானதே
இராஜ்ய மேன்மைக்காய்
பாடுகள் அடைந்தோர்
நற்பயன் அடைவாரே - உறக்கம்
விசுவாசம் கொள்வீர்
தெய்வீக ஆணை
சீக்கிரம் நிறைவேறுதே
புது உடன்படிக்கையின்
ஆசிகள் எல்லாம்
மனுகுலம் அடைந்திடுமே - உறக்கம்

184. ஆதாரம் நீர் தாம் ஐயா, எம் துரையே
ஆதாரம் நீர் தாம் ஐயா /2


சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் /2
ஆதாரம் நீர் தாம் ஐயா
மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் /2
மற்றோர்க்குப் பற்றேதையா எளியன் மேல்
மற்றோர்க்குப் பற்றேதையா எளியனுக்கு - ஆதாரம்
நாம், நாம் துணையென நயந்துரை சொன்னவர் /2
நட்டாற்றில் விட்டாரையா தனியனை
நட்டாற்றில் விட்டாரையா தனியனுக்கு - ஆதாரம்
மெய்ஜீவ அப்பமே ஞான கன்மலையே /2
வற்றாக் கிருபை நதியே கருணையே
வற்றாக் கிருபை நதியே கருணையே - ஆதாரம்
சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து /2
துக்கம் மிகுவேளையில் என் ரட்சகரே
துக்கம் மிகுவேளையில் உம் தாசனுக்கு - ஆதாரம்

185. போற்றுவேன் என் மீட்பர் அன்பை


ப்ராணன் தந்து ரட்சித்தார்
பாடுபட்டு, ரத்தஞ்சிந்தி
பாவசாபம் நீக்கினார்
போற்றும்! போற்றும்! அல்லேலூயா
பூர்ண மீட்புண்டாக்கினார்
தூயவல்ல ரத்தஞ்சிந்தி
தீய பாவம் நீக்கினார்
நீசப்பாவி எந்தன் பேரில்
நேசம் வைத்துக் காட்டினார்
மீட்கும் பொருளாகத் தம்மை
முற்றுந்தந்தீடேற்றினார் - போற்றும்!
போற்றுவேன் சம்பூர்ண மீட்பை
ப்ராண நேசர் காக்கிறார்
வாழ் நாளெல்லாம் பாவப் போரில்
வெற்றி காணச் செய்கிறார் - போற்றும்!
போற்றுவேன் ஆனந்தமாக
பாடி, நன்றி சொல்லுவேன்
என்னை மீட்ட யெஷுஆவோடே
என்றும் தங்கிச் சேவிப்பேன் - போற்றும்!

186. தம்மண்டை வந்த பாலரை


ஆசீர்வதித்த ரட்சகர்
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்
குழந்தைகளுக்காகவும்
மரித்துயிர்த்த ஆண்டவர்
சிறந்த நன்மை வரமும்
தரக் காருண்யமுள்ளவர்
ஆ, யெஷுஆவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்து ரட்சியும்

187. என் சிலுவை எடுத்து என் யெஷுஆவே இச்சணம் பின்னே வாறேன்

இந்நில மீதினில்
எனக்காயுயிர் விட்டீர் //2
ரட்சகரே, எனக்குள்ள யாவும் விட்டு
\ என் சிலுவை எடுத்து
உலகும்மை விட்டிடினும்
உம் தயவால்
உம்மை நான் பின் செல்லுவேன்
சாத்தான் என் மேல் பாய்ந்து
அதிகமாய் எதிர்த்தாலும் //2
அஞ்சாமல் போர்செய்து
அவனை மேற்கொண்டு நான்
என் சிலுவை எடுத்து
எந்தன் சுதந்தரத்தை
இழக்கினும்
சொந்தம் நீரே எனக்கு
பந்து ஜனங்களும்
பற்றுறு நேசரும் //2
பகைத்துப் பழிப்பின்
என் பங்கு நீரல்லவோ
என் சிலுவை எடுத்து
பாடுகள் பட்டிடுவேன்
உம்மோடு நான்
பார நுகம் சுமப்பேன்
ஆடுகளுக்காக
அரிய ஜீவன் தந்த //2
அன்பான மேய்ப்பரே
உமது வழிசெல்வேன்
என் சிலுவை எடுத்து
ஆசை மேற்கொள்ளவிடேன்
கெட்ட லோக
பாசமணுகவிடேன்
ராஜன் யெஷுஆவோடென்றும்
நேசமுடன் தங்கி //2
மாசு நீங்கி உந்தன்
தாசனாய் விளங்கிட - என் சிலுவை

188. தீய மனதை மாற்ற தாரும்
தூய ஆவியை கன நேயமேவியே /2


மாயபாசத் தழுந்தி வாடி
மாளுஞ் சாவிதால் மிக மாயும் பாவி நான் /2
தீமை செய்ய நாடுதென்றன்
திருக்கு நெஞ்சமே மருள் தீர்க்கும், தஞ்சமே /2
பரத்தை நோக்க மனம் அற்றேனே
பதடிதான், ஐயா ஒரு பாவி நான் ஐயா /2
ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி
இரந்து கெஞ்சவே தினம் இதயம் அஞ்சவே /2
புதிய சிந்தை, புதிய
புதுப்பித்தாக்கவே அதைப் புகழ்ந்து காக்கவே /2
கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு
கீதம் பாடவே அவர் கிருபை தேடவே /2
தேவ வசனப் பாலின்மீது
தேட்டம் தோன்றவே மிகு தெளிவு வேண்டவே /2
ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி
ஜெபித்துப் போற்றவே மிக சிறப்பாய் ஏற்றவே /2
தீய மனதை மாற்ற தாரும்
தூய ஆவியை கன நேயமேவியே /2

189. நெஞ்சமே வீணாய் சோர்ந்து போகாதே


தஞ்சம் யெஷுஆ இருக்கையில் தளர்ந்து விடாதே /2
வஞ்சகன் வீசும் வலையில் விழாதே
பஞ்சகாயன் உன்னை பாதுகாப்பாரே
சோதனை பலவும் சூழ்ந்திடும் நேரம்
வேதனை விதம் விதம் வந்திடுங்காலம் /2
தீதனைத்தும் திருச்சிலுவையில் தொங்கும் /2
ராஜனை நினைத்திடில் நன்மையாய் முடியும் - நெஞ்சமே
பெற்றவரும் பெண்டு பிள்ளைகளும் மிக
உற்றவரும் உயிர் தோழர்களானோரும் /2
பற்றற்றவராய்ப் பழகிடும் போதும்
மற்றவர் செய்கையால் மனங்கலங்காதே - நெஞ்சமே
கஷ்டங்கள் வருங்கால் களிப்பாக எண்ணு
இஷ்டமுடன் ஜெபம் எந்நேரம் பண்ணு /2
நஷ்டங்கள் வந்தாலும் நலமென்று சொல்லு /2
துஷ்டனின் சூட்சியை தூயநாள் வெல்லும் - நெஞ்சமே
நியாயமில்லாமல் குற்றம் காண்போர்கள்
நியாயத்தீர்ப்பின் நாள் வெட்கங்கொள்வார்கள் /2
தூயவன் முன் உன் சிறு இருதயம் /2
மாயமும் மாசுமில்லானதால் போதும் - நெஞ்சமே
செய்ததும் சொன்னதும் இல்லென்று மறுப்பார்
செய்யாததும் சொல்லாததும் ஆம் என்று உரைப்பார் /2
பொய்யிலும் புரட்டிலும் புதைந்தது உலகம் /2
மெய்யுடையான் யெஷுஆ மீது வை பாரம் - நெஞ்சமே
யெஷுஆவின் சிந்தை இருந்திட வேண்டும்
யெஷுஆவின் ஆவியில் இயங்கிட வேண்டும் /2
யெஷுஆவைப் போல் எல்லாம் சகித்திட வேண்டும் /2
யெஷுஆவின் கிருபையைப் பெற்றிட வேண்டும்
- நெஞ்சமே

190. சீயோனிலே திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை /2


கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
யெஷுஆவில் மாத்திரமே //2 - சீயோனிலே
புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் //2 - சீயோனிலே
வியாதியினாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தால் அவர்
வாக்கை நான் பற்றிடுவேன் //2 - சீயோனிலே
நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில்
முடிவு வரை என்னை நடத்திடுவார்
முற்றுமாய் இரட்சிப்பாரே //2 - சீயோனிலே

191. வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் யெஷுஆ அண்டை //2


வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
மீட்பரின் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் - வருவாய்
கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவிட்டு உன் மூச்சு போனால்
கூட உன்னோடு வருவதில்லை - வருவாய்
அழகும் மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை - வருவாய்
வானத்தின் கீழே, பூமி மேலே
வானவர் யெஷுஆ நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் யெஷுஆ வழி அவரே - வருவாய்
தீராத பாவம், பெலவீனமும்
மாறாத மரணம் அழுகையையும்
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
சோரம்போன நீ குணமடைய - வருவாய்
சத்திய வாக்கை நம்பியே வா
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
நித்திய வீடாம் அவர் ராஜ்யத்தில்
உண்மையாய் என்றும் வாழ்ந்திடுவாய் - வருவாய்

192. உள்ளமெல்லாம் உருகுதையா
உத்தமரை நினைக்கையிலே


உம்மையல்லால் வேறே பெலன்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்றும் தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
உம் சொந்தமாக்கிக் கொண்டீரே
எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் யெஷுஆவே
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
உம் ஈடுபலியின் மேல்
மெய் விசுவாசம் கொண்டேன்
சாட்டின ரத்தத்தால்
நித்தம் என்னை சுத்தமாக்கும் - உள்ளமெல்லாம்

193. எப்போதும் யெஷுஆ ராஜா


உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்குக் கொடுத்தேன்
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
அப்போது அஞ்சிடேன்
முன்சென்று பாதை காட்டும்
நான் வழி தவறேன்
பூலோக இன்பம், செல்வம்
வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்மா மயங்காமல்
தெய்வீக பெலத்தால்
நீர் துணை நின்று தாங்கும்
என் அருள் மீட்பரே
தீங்கணுகாமல் காரும்
மா வல்ல ரட்சகா
ஆங்காரம் சுயசித்தம்
தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி
நான் தடுமாறினால்
நீர் பேசும், அருள் நேசா
கொந்தளிப்படங்கும்
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்

194. யெஷுஆ மீட்பர் உந்தன் நெஞ்சில்


வாசம் பண்ண விடாயோ?
உந்தன் பாவம் சுமந்தோரை
இன்றும் ஏற்றுக் கொள்ளாயோ?
யெஷுஆ மகா ராஜர் இதோ
வாசலண்டை நிற்கிறார்
நேசா நீ இவ்வன்பை எண்ணி
வாசலை திறக்கப் பார்
பாவ லோகம் ஆசா பாசம்
யாவும் இடம் பெற்றதோ?
நீச சிலுவையில் மாண்ட
நேசர்க்கு இடமில்லையோ? - யெஷுஆ
இன்னுமே நீ தாமதித்தால்
பின்பு மோசம் வருமே
இப்போதே இரட்சண்யக் காலம்
அப்பாற் பிந்திப் போகுமே - யெஷுஆ
கூவி நிற்கும் மீட்பர் சத்தம்
நண்பா கேட்டு பணிவாய்
உந்தன் ஜீவன் பெலன் யாவும் இன்றே
தத்தம் செய்குவாய் - யெஷுஆ

195. அதிசயமான அருள்மிகு நாடாம்
யெஷுஆவின் நாடாம்
நாம் வாஞ்சிக்கும் நாடாம் //2


பாவமில்லாத நாடு - ஒரு
சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா -அதிசயமான
நீதியின் சூரியனால் - அங்கு
இருள் ஏதும் காணவில்லை
தேவகுமாரனின் நீதியின் ஆட்சி
நித்திய வெளிச்சமாகும் - என்றும் புகழ் - அதிசயமான
வித வித கொள்கை இல்லை - பல
பிரிவுள்ள சபையுமில்லை
நித்திய குடும்பம் நித்திய தலைவர்
எங்குமே அன்புமயம் -அன்புள்ளோர் வாழும் - அதிசயமான
தெய்வீக திட்டம் உண்டு
அதை நிறைவேற்ற சட்டம் உண்டு
பாத்திரவான்களின் சீரிய ஆட்சியில்
மாந்தர் தாம் நீதி கற்பார் – எங்கும் நிறை - அதிசயமான
யெஷுஆவின் இரத்தத்தினால் -மீண்ட
மனுகுலம் முழுவதிலும்
இத்தனை பெரிய சிலாக்கியம் பெறாதோர்
இப்பூமியில் எவரும் இல்லை இன்றேவாரீர் - அதிசயமான

196. எல்லாம் யெஷுஆவே எனக்கெல்லாம் யெஷுஆவே
தொல்லைமிகு இவ்வுலகில் துணை யெஷுஆவே


ஆயரும் சகாயரும் நேயரும் உபாயரும்
ராயரும் எனக்கன்பான ஞானக் கன்மலையானோரும்
- எல்லாம்
தந்தை தாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேகிதர்
சந்தோஷ சகல யோக சம்பூரண பாக்கியம் - எல்லாம்
போதகப் பிதாவும் என் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடும் என் கன்மலையும் கோட்டையும்
- எல்லாம்
கவலையில் ஆறுதலும் இருளில் என் ஜோதியும்
கஷ்ட நோய் படுக்கையிலே கைக்கண்ட ஒளஷதமும்
- எல்லாம்
அணியும் ஆ/பரணமும் ஆஸ்தியும் சம்பாத்தியமும்
ஒன்றும் வேண்டேன் என் பிரிய நேசர் என்றும் போதுமே
- எல்லாம்
வான ஜீவ அப்பமும் ஆவலும் என் காவலும்
ஞான கீதமும் மெய்யான மேய்ப்பரும் நல் ராஜனும்
- எல்லாம்

197. பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
என் தேவனே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் பாருமேன் //2


சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே //2
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்தருளுமே //2 -
பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை //2
மனம் நொந்து வருந்துகின்றேன்
மன்னிப்பை கெஞ்சுகின்றேன் //2 - பரிசுத்தர்
தூய்மை வேண்டும் தகப்பனே உள்ளத்தில்
எங்கும் எதிர்க்கும் சக்திகள் பல உண்டே //2
எங்கள் ஜீவன் போகும் வரையில்
உம் ஆவி வேண்டுகிறோம் //2 - பரிசுத்தர்

198. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானர் நீரே


சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
எங்கள் உள்ளத்தில் உம்மைப் போற்றிடுவோம்
உம்மை என்றும் பணிந்து தொழுவோம்
ஆ-ஆ-ஆ அல்லேலூயா /3
ஆ-ஆ-ஆ ஆமேன்
வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து மறைந்துபோம்
விசுவாசி என்றும் நிலைப்பான் - ஆஆ
கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
எந்தன் ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை என்றும் தத்தம் செய்குவேனே - ஆஆ
சத்தியத்தில் அனுதினம் வழிநடத்தும்
பிரதிஷ்டை வாழ்வை அங்கீகரியும்
உம் சித்தத்தை நித்தம் வாஞ்சிக்கின்றோம்
நித்திய ஜீவன் என்றென்றும் பெற்றிடவே - ஆஆ
எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோமே
ஏங்குகின்றோம் உம் ஆசீர் பெறவே - ஆஆ

199. யாவேக்கு பயந்து, அவர் வழியில்
பணிந்து நடப்போன் பாக்யவான்
முயன்று கைகளின் பலனை உண்பான் /2
பாக்யமும் நன்மையும் உண்டாயிருக்குமே - யாவேக்கு


உன் மனைவி உன் வீட்டோரங்களில்
கனிதரும் திராட்சைக் கொடியாய் இருப்பாள்
உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் /2
ஒலிவக் கன்றுகளைப்போல் இருப்பார்கள் - யாவேக்கு
இதோ கர்த்தருக்கு பயப்படுகிற
மனுஷன் இவ்விதமாகவேதான்
ஆசீர்வதிக்கப்படுவான் என்றென்றுமே /2
சீயோனிலிருந்தே ஆசீர்வதிப்பாரே - யாவேக்கு
நீ ஜீவனுள்ள நாளெல்லாமே
எருசலேமின் வாழ்வை காண்பாய்
உனது பிள்ளைகளின் பிள்ளைகளையும் /2
இஸ்ரேலுக்கு சமாதானத்தையும் காண்பாய் - யாவேக்கு

200. மகனே உன் நெஞ்சவர்க்குத் தாராயோ /2


நித்ய வாழ்வைத் தருவார் இதை பாராயோ /2 - மகனே
அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பாரே /2
பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பாரே /2 - மகனே
உந்தன் பாவம் முற்றும் பரிகரிப்பாரே /2
அதை உண்மையாய் அகற்ற அவர் மரித்தாரே /2 - மகனே
பாவம் அனைத்துமே விட்டோடாயோ /2
நித்ய ஜீவ வழி வாழ்வை இன்றே தேடாயோ /2 - மகனே
உலக வாழ்வினை விட்டகல்வாயே /2
மகா உவப்பாய் கதி ஈவார் மகிழ்வாயே /2 - மகனே
உந்தன் ஆத்துமத்தை நீ படைப்பாயே /2
அதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே /2 - மகனே

201.கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே - நல்
துதி செலுத்திடுவோம் யெஷுஆவுக்கே
கதிரவன் தோன்றும் காலையிதே


வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையை
காற்று பறவை ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே - கதிரவன்
காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளிமான்களைப்போல்
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்
தற்பரன் யெஷுஆவில் வளர்ந்திடுவோம் - கதிரவன்
காலை விழிப்பில் கர்த்தரின் வார்த்தை
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவோம் - கதிரவன்
நீதியின் சூரியன் ஒளிவீசும்போது
யெஷுஆவே என்றும் ஆட்சி செய்வார்
நாமும் நமது ஒளியினை என்றும்
ஓங்கி ஒளிர்ந்திட செய்திடுவோம் - கதிரவன்

202.எல்லாருக்கும் மா உன்னதர்


மா யாவே தேவனே மா யாவே தேவனே
ஒன்றான பரிசுத்தரே
நீர் வா...ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..ஆ வாழ்க
வாழ்க !வாழ்க! வாழ்க!
நீர் வாழ்க தேவனே
சர்வத்தையும் சிருஷ்டித்தவர்
பூரணமாகவே பூரணமாகவே
வழிநடத்தி காப்பவர் - நீர்
விண்ணில் ராஜாதி ராஜனாம்
மண்ணுயிர்க்காகவே மண்ணுயிர்க்காகவே
உம் ஏக மைந்தனை தந்தீர் - நீர்
மரண சாபம் நீக்கவே
மரித்த யெஷுஆவை மரித்த யெஷுஆவை
உயிர்த்தெழுப்பி உயர்த்தினீர் - நீர்
இழந்துபோனவைகளை
மீட்டு தந்து ஆசீர்வதித்திட
இரட்சிப்பின் திட்டம் வரைந்தீர் - நீர்

203. யெஷுஆ சுவாமி அருள் நேசா


கெஞ்சி கேட்கிறேன்
பாவி என்னைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமே
யெஷுஆ சுவாமி
கெஞ்சி கேட்கிறேன்
பாவி என்னைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமே
கெஞ்சினோர் அநேகம் பேரில்
தயை காட்டினீர்
இந்த நேச அன்பினாலும்
தள்ளவே மாட்டீர் - யெஷுஆ
தீய குண கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்
நீரே தஞ்சம் என்று நம்பி
வந்து நிற்கின்றேன் - யெஷுஆ
தூய ரத்தத்தாலே என்னை
சுத்தமாக்குவீர்
வல்ல ஆவியாலே நாளும்
காத்து ஆளுவீர் - யெஷுஆ

204. யெஷுஆவின் ரத்தத்தில் நானும்


நம்பிக்கை வைக்கக் கூடுமோ
எனக்காய் மரித்தவரை
தொடர்ந்து சிலுவையே கொண்டேன்
அற்புத அன்பு ஆச்சரியம்
என் மீட்பர் எனக்காய் மாண்டார்
அற்புதம் ஆச்சரியம்
அற்புதம் ஆச்சரியம்
என் மீட்பர் எனக்காய் மாண்டார்
கல்வாரியின் சிலுவையில் மரித்தாரே
என் ஆண்டவர்
உன்னத அன்பின் ரகசியத்தை
யார் கண்டு உணரக் கூடும்
இரக்கமே துதித்திடுவோம்
உன்னத அன்பை போற்றுவோம்
இரக்கமே துதித்திடுவோம்
உன்னத அன்பை போற்றுவோம்
அவரின் நாள் நீதியை போதிக்கும்
என் யெஷுஆ எனக்கு சொந்தம்
அவரில் பிழைத்திருக்கிறேன்
இனிய நாளை களிப்பேன்
பணிந்து நான் அவர் முன் நிற்பேன்
நித்திய ஜீவனைப் பெறுவேன்
பணிந்து நான் அவர் முன் நிற்பேன்
நித்திய ஜீவனைப் பெறுவேன்

205. கொல்கொதா மலை மேல்


தோன்றுதோர் சிலுவை
அல்லல் கழித்து தம் ரத்தத்தால்
நீசப் பாவிகட்காய்
நேசர் மாண்டாரதில்
நேசிப்பேன் அத்தொல் சிலுவையை
அந்த சிலுவையை நேசிப்பேன்
பெலனோய்ந்து நான் சாகும்வரை
உம் சிலுவையை நான் பற்றுவேன்
வென்றதோர் உம் வழி செல்லுவேன்
தேவாட்டுக்குட்டி தம்
மாட்சிமையை விட்டு
உலகோர் பழித்த குருசை
கல்வாரி மலைக்கு
சுமந்தார் நமக்காய்
வைத்தார் மீட்கும் பலி புண்ணியத்தை - அந்த
என் பாவம் மன்னிக்க
என்னை சுத்தமாக்க
நேசர் மாண்ட சிலுவை அதோ
தூய ரத்தம் தோய்ந்த
அந்த சிலுவையின்
தியாக காட்சி என்னே மாட்சிமை - அந்த
குருசின் இழிவை
மகிழ்வாய் சுமப்பாய்
மேன்மை பாராட்டுவாய் என்றுமே
பின்பு ராஜ்ய வீட்டினில்
நேசர் கூட்டிச் சேர்க்கையில்
மகிழ்வோம் என்றும் மகிமையில் - அந்த

206. நீர் உண்மையுள்ளவர் என் அன்பின் தேவா


மாறாத கர்த்தரே நீர் என் பிதா
நீர் திரவிய சம்பன ஐஸ்வரியமுள்ளவர்
சதா காலமுமே மாறாதவர்
நீர் உண்மையுள்ளவர் உம் சத்தியம் பெரியது
காலைதோறும் புது கிருபைகள்
தேவை யாவும் உம் கரங்களால் பெற்றேன்
உம் சத்தியம் பெரியது என்னிடமாய்
உம் உண்மை இரக்கம் அன்பு கிருபை
எத்தனை மாதிரள் என்பதற்கு
கோடை பனி காலம் அறுப்பு யாவும்
சர்வ சிருஷ்டியும் சாட்சியாகும் - நீர்
தேவ சமாதானம் பாவ மன்னிப்பும்
ராஜ்ய நம்பிக்கை எனக்களித்தீர்
உம் திவ்ய சமுகம் என்னை நடத்த
ஆசீர்வதியுமென் அன்பின் தேவா - நீர்

207. சேனையின் கர்த்தா


சீர்நிறை யாவே
உம் வாசஸ்தலங்களே
எத்தனை இன்பம்
கர்த்தனே என்றும்
அவற்றை வாஞ்சித்திருப்பேன்
ராஜாதி ராஜா
சேனைகளின் கர்த்தா
உம் பீடம் என் வாஞ்சையே
உம் தயை அடைந்தே
உம்மைத் துதித்தே
உறைவோர் பாக்கியவான்களே
சேனையின் கர்த்தா
சீர் பெருகும் ராஜா
எம் கேடகமானோரே
விண்ணப்பம் கேளும்
கண்ணோக்கிப் பாரும்
ஏழையாம் உம் தாசனை
மன்னா நீர் கன்மலை
என் நற்கேடகமும்
நன்மை கிருபை ஈவீர்
உம் பக்தர் பேறு
நன்மை அனந்தம்
உம்மை நம்புவோன் பாக்கியவான்
என் யாவே தேவா
மகிமை உமக்கே
வளமாய் உண்டாகவே
நித்தியம் ஆளும்
சதா/காலமும்
உம் சித்தப்/படியே ஆமென்.

208. கர்த்தாவைப் போற்றிப் பாடு


என் ஆவியே, என் உள்ளமே
தேவன்பை நீ கொண்டாடு
அதை மறக்கலாகாதே
உன் பாவத்தை மன்னித்தார்
உன் கேட்டை நீக்கினார்
உன் ப்ராணனை ரட்சித்தார்
குணம் அளிக்கிறார்
மகா இரக்கமான
சகாயர் ஆண்டவர்
ஒடுங்குண்டோருக்கான
துணை தயாபரர்.
தம் நீதி நியாயத்தாலே
முன்னாள் முதல் வெளிப்பட்டார்
உருக்க தயவாலே
நிறையப்பட்டிருக்கிறார்
சினத்தை என்றென்றைக்கும்
வைக்கார்; மகா தயை
தாழ்ந்தோருக்குக் கிடைக்கும்
அது விண்ணத்தனை
உயர்ந்ததாயிருக்கும்
கிழக்கு மேற்குக்கு
இருக்கும் தூரத்துக்கும்
எம் பாவம் போயிற்று
தன் மைந்தருக்கன்புள்ள
பிதா இரங்கும்போல் அவர்
தமக்குப் பயமுள்ள
சன்மார்க்கருக்கிரங்குவார்
நாம் இன்ன உருவென்று
நன்றாக அறிவார்
நாம் தூளும் மண்ணுமென்று
நினைத்திருக்கிறார்
நாம் புல்லைப்போல் வளர்ந்து
பூப்போலே பூக்கிறோம்
காற்றதின் மேல் கடந்து
போனால், உலர்ந்துபோம்
ஆனாலும் தாம் நிர்ணயித்த
உடன்படிக்கைக்கேற்றதாய்
நடந்து, தாம் கற்பித்த
படியே தேவ பயமாய்ச்
செய்தோர் மேல் என்றென்றைக்கும்
கர்த்தாவின் கிருபை
நீங்காததாய் நிலைக்கும்
அவர்கள் நன்மையை
விசாரிக்க சமர்த்தர்
பரத்தில் ஆளுவார்
அனைத்தின் மேலும் கர்த்தர்
உயர்ந்த அரசர்
உற்சாக வேகமாகப்
பண்செய்யும் பணிவுள்ளோரே
கர்த்தாவை நேர்த்தியாகத்
துதிப்பதுங்கள் வேலையே
விண் மண்ணில் எங்குமுள்ள
மா சேனையாகிய
எச்சிருஷ்டியும், அன்புள்ள
கர்த்தாவைச் சகல
வகை வகையுமாக
துதிப்பதாகவே
கர்த்தாவைப் பக்தியாகத்
துதி, என் ஆவியே

209 .யாவே தம் நோக்கத்தை செய்கிறார்


ஆண்டாண்டுதோறுமே
தேவன் தம் நோக்கத்தை செய்கிறார்
அவர் ராஜ்யம் கிட்டுதே
விரைந்து காலம் நெருங்குதே
அவரின் ராஜ்யமே
ஓ தேவனின் மகிமை புவியை நிரப்பும்
ஆழி ஜலம் போலவே
பூமியில் மாந்தர் நடந்த
கடையாந்திரம் எங்கும்
செல்லுதே தேவ சப்தமே
பக்தர் பலர் வாயினால்
கண்டமே, தீவே, கேட்டிடுவீர் ஆம்
அவரின் வார்த்தையே - ஓ தேவனின்
தேவனின் வேலை செய்தோங்கி
திவ்ய ராஜ்யம் பெருகவே
மானிடர் எல்லாம் ஒன்றாகவே
யெஷுஆ ராஜன் ஆட்சியில்
என்ன வேலை என்னாலாகும்
துரிதமாய் நெருங்குதே - ஓ தேவனின்
தேவ பலத்தில் ஏகிடு
க்றிஸ்து கொடியை ஏற்றியே
சத்திய சுவிசேஷ ஜோதி
எத்திக்கிலும் ஒளிர்ந்திட
தூக்கி முன் செல்லுமே
தேவ மைந்தன் ராஜ்யத்தில் - ஓ தேவனின்

210. ஒப்பில்லா எம் யாவே தேவா


நீரே எம் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசய/மாம் /2
ஒப்பில்லா யெஷுஆ ராஜா
யாவையும் ஆளும் மா
தேவ மைந்தனார் பாவிகளை
மீட்டு ஜீவனுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்தினாரே /2
ஒப்பில்லா யெஷுஆ ராஜா
வந்திட்டார் நீதியாய்
தேவ தூதரின் சேனைகளும்
நாமும் சேர்ந்து, ரட்சகரைப்
பூரிப்பாய் தோத்தரிப்போம் /2

211. பிதாவே, எங்களை கல்வாரியில்


நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே
நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்
பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே
ஒரே சரீரம் பலி படைத்தனரே
இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.
ஆ, எங்கள் குற்றம் குறை யாவையும்
பாராமல் கிறிஸ்து மூலம் நோக்குமே
விசுவாசம் மங்கி, ஜெபம் குன்றியும்
உம் பேரருளைப் போக்கடித்தோமே
என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை
இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை
இவ்வேளை விஸ்வாச வீட்டாருக்கும்
உம் சந்நிதானம் வேண்டல் செய்வோமே
சிறந்த நன்மை யாவும் அளியும்
உம் மார்பினில் அணைத்துக் காருமே
எத்தீங்கும் அணுகாமல் விலக்கும்
உம்மில் நிலைக்க பெலன் அருளும்
இவ்வாறு அண்டினோம் உம் பாதத்தை
மா சாந்தமுள்ள மீட்பரான நீர்
பேரின்பம் தரும் திவ்ய போஜனம்
கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்
உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
சேவித்துப் பற்றத் துணை புரியும்

212. பாவி கேள் உன் ஆண்டவர்!


அறையுண்ட ரட்சகர்
கேட்கிறார் என் மகனே
அன்புண்டோ என் பேரிலே!
நீக்கினார் உன் குற்றத்தை
கட்டினார் உன் காயத்தை
தேடிப் பார்த்து ரட்சித்தார்
ஒளிவீசப் பண்ணினார்
தாயின் மிக்க பாசமும்
ஆபத்தாலே குன்றினும்
குன்றமாட்டாதென்றுமே
ஒப்பில்லா அவர் நேசமே
அவரன்பின் பெருக்கும்
ஆழம் நீளம் உயரமும்
சொல்லி முடியாது, பார்
அவரைப் போன்ற நேசரை!
அவர் சாயல் தரிப்பாய்
அவர் ஆள சுகிப்பாய்
ஆதலால் சொல், மகனே
அன்புண்டோ அவர் பேரிலே!
யெஷுஆவே, என் பக்தியும்
அன்பும் சொற்பமாயினும்
உம்மையே நான் பற்றினேன்
அன்பின் ஜூவாலை ஏற்றுமேன்!

213. நேர்த்தியானதனைத்தும்
சிறிதும் பெரிதெல்லாம்
ஞானம், விந்தை ஆனதும்
கர்த்தாவின் படைப்பாம்


பற்பல வர்ணத்தோடு
மலரும் புஷ்பமும்
இனிமையாகப் பாடி
பறக்கும் பட்சியும் - நேர்த்தி
மேலோர், கீழானோரையும்
தத்தம் ஸ்திதியிலே
அரணில், குடிசையில்
வசிக்கச் செய்தாரே - நேர்த்தி
இலங்கும் அருவியும்
மா நீல மலையும்
பொன் நிற உதயமும்
குளிர்ந்த மாலையும் - நேர்த்தி
வசந்தகால தென்றல்
பூங்கனித் தோட்டமும்
காலத்துக்கேற்ற மழை
வெய்யோனின் காந்தியும் - நேர்த்தி
மரமடர்ந்த சோலை
பசும் புல் தரையும்
தண்ணீர் மேல் தாமரைப்பூ
மற்றெந்த வஸ்துவும் - நேர்த்தி
ஆம், சர்வவல்ல கர்த்தா
எல்லாம் நன்றாய்ச் செய்தார்
இதை நாம் பார்த்து போற்ற
நாவையும் சிருஷ்டித்தார் - நேர்த்தி

214. எந்தன் ஆத்ம நேசரே


வெள்ளம் போன்ற துன்பத்தில்
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்
தஞ்சம் தந்து யெஷுஆவே
திவ்விய மார்பில் காருமேன்
அப்பால் கரையேற்றியே
ராஜ்ய வீட்டில் சேருமேன்
வல்ல தேவரீர் அல்லால்
வேறே தஞ்சம் அறியேன்
கைவிடாமல் நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
நீரே எந்தன் நம்பிக்கை
நீர் சகாயம் செய்குவீர்
ஏதுமற்ற ஏழையை
செட்டையாலே மூடுவீர்
குறை யாவும் நீக்கிட
வேதா நீர் சம்பூரணர்
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்
நான் அசுத்த பாவிதான்
நீரோ தூயர் தூயரே
நான் அநீதி கேடுள்ளோன்
நீர் நிறைந்த நித்தியரே
பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க
அருள் பாயச் செய்குவீர்
ஜீவ ஊற்றாம் யெஷுஆவே
எந்தன் தாகம் தீருமேன்
சுவாமி என்றும் என்னிலே
உம் ஆவியை ஊற்றுமேன்

215. யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்


உயிர்த்தெழுந்தார், சாவை ஜெயித்தெழுந்தார்
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
சாத்தானின் சேனைகள் ஓடிடவே
ஓடிடவே, என்றும் அழிந்திடவே - யூத
வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே - யூத
மரணத்தின் சங்கிலிகள் தெறிப்பட்டன
தெறிப்பட்டன, நொடியில் முறிப்பட்டன - யூத
எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே - யூத
உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, சாவை ஜெயித்தாரே - யூத
சீலமுடன் அவர் சத்தியம் பயில்வோம்
சத்தியம் பயில்வோம் அதை எங்கும் கூறுவோம் - யூத

216. ஆசீர்வாதம் நிறைத்தே அனுப்புவீர் தேவா


அடியார்க்கு நீரல்லால் வேறாருண்டு நேசா
மாசேதும் அற்ற மன்னா வழி நடத்துவீர்
என்றும் உம் சித்தம் செய்ய வல்லமை தருவீர்
கூடியிருந்து தாங்க உம் தஞ்சமே ஐயா
கோவே உம் பாதம் எங்கள் சகலமும் மெய்யாம்
நாடி உம் துதி எங்கும் நாட்டுவோம் உமக்கு
என்றும் கனம் மகிமை உண்டாகவே ஆமென்

217. என் தேவன் என் வெளிச்சம்


என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக்கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
தாயும் தந்தையும் வளர்த்தெடுத்தாலும்
அன்பர் யெஷுஆ என்னை தெரிந்தெடுத்தார் //2
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
சத்ய வழியில் என்னை நித்தம் நடத்திடுவார் //2 - என்
தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில் //2
என் ஆண்டவரின் சாயலை அணிந்து
தீயோர்க்கு நன்மை செய்ய விரைந்திடுவேன் //2 - என்

218. உம்மை பாடாத நாவும்


வணங்காத கரமும் வலிமை இழந்ததே
என்றும் வலிமை இழந்ததே ///2
உந்தன் சித்தம் செய்ய நித்தம்
யெஷுஆவே நீர் என்னை ஆட்கொள்ளுமே //2
எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த
சுதனை போற்றிடுவேன்
தேவசுதனை போற்றிடுவேன் ///2 - உந்தன்
யெஷுஆ சிந்தின இரத்தம் யாவேயின் சித்தம்
இழந்த ஜீவனுக்காய்
நீ இழந்த ஜீவனுக்காய் ///2 - உந்தன்

219. தொழுகிறோம் எங்கள் பிதாவே


பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே //2
பரிசுத்த குணசீலத்துடனே
என்றும் திகழ்வதால் சரணம் சரணம் //2
மானிடர் காணா ஒளியில் வாழ்பவர்
தம்மில் தாமே ஜீவன் உடையவர்
எம்மையே மீட்டுக் கொண்டவர்
யாவே தேவனே சரணம் சரணம் - தொழுகிறோம்
கண்களால் காணாத உருவே
கண்ணின் மணிபோல் காத்து நடத்தும்
ஞானம் நீதி அன்பு நயத்தால்
எம்மை நடத்தும் சரணம் சரணம் - தொழுகிறோம்
அடியார்களின் அஸ்திபாரம்
யெஷுஆவின் நல் ஈடுபலியாம்
கூடிவந்த எங்கள் ஐக்கியம்
என்றும் சிறக்க சரணம் சரணம் - தொழுகிறோம்

220. வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்

சேரும் ஐயா பந்தியினில் /2
சிறியவராம் எங்களிடம் - வாரும்
ஒளிமங்கி இருளாச்சே
உத்தமரே, வாரும் ஐயா
கருக்கல்வரை காத்திருப்போம் /2
கர்த்தரே கருணை செய்திடுவீர் - வாரும்
நான் இருப்பேன், நடுவில் என்றீர்
உம் நாமம் கர்த்தரே நமஸ்கரிக்க
தயை புரிந்தருளுமேன் /2
தற்பரரே, நலம் தருவீர் - வாரும்
உன்றன் மனை திருச்சபையை
உலகெங்கும் கூட்டி உயர்த்தினீரே
நீதியுடன் ஆட்சி செய்தே /2
மாந்தர்க்கு ஜீவன் அளித்திடுவீர் - வாரும்
ஆதரையிலென் ஆறுதலே
அன்பருக்குச் சதா உறைவிடமே
பேதையர்க்குப் பேரறிவே /2
பாதை மெய் ஜீவ தயாபரரே - வாரும்

221. பாரீர் கெத்செமனே பூங்காவில் என் நேசரை
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவ குமாரன் ஏக சுதன் படும்
பாடுகள் எனக்காக - பாரீர் கெத்செமனே
அப்பா இப்பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத்
தத்தம் செய்தேன் என்றாரே - பாரீர் கெத்செமனே
இரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவுமே நனைந்தே
இம்மானுயேலன் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தாரே - பாரீர் கெத்செமனே
மும்முறை தரை மீதே
தாங்கொண்ணா வேதனையால்
முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகர் மீட்புறவே - பாரீர் கெத்செமனே
அன்பின் அருள் மொழியால்
ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே
வேண்டுதல் செய்தாரே - பாரீர் கெத்செமனே
என்னையும் தம்மைப் போலே
மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணியெண்ணியே உள்ளங்கனிந்து நான்
என்றும் புகழ்ந்திடுவேன் - பாரீர் கெத்செமனே

222. ஆ! வானம் பூமி யாவையும்


உண்டாக்கி ஆளும் ஆண்டவா
உம் மேன்மை ஞானம் சத்தியம்
எல்லைக்கு அடங்காததே
இவ்வீட்டில் நாங்கள் வசித்து
இடைவிடாமல் ஜெபிப்போம்
உம் திவ்ய நாமம் துதித்து
கொண்டாடி தாழ்ந்து சேவிப்போம்
இங்கே இருக்கும் நாள் மட்டும்
உற்சாகத்தோடு உமக்கே
அடங்கி நாங்கள் நடக்கும்
குணத்தை தாரும் தேவனே
இகத்திலும் பரத்திலும்
செங்கோல் செலுத்தும் ராஜனே
உமக்கு சதாகாலமும்
துதி உண்டாவதாகவே

223. தேவாதி தேவா சர்வத்திற்கும் ஆண்டவா
ஸ்தோத்ரம் துதி ஏற்றுவோம் எம் யெஷுஆ மூலமே


யாவே தேவன் நாமத்தை
ஏகமாகப் பாடுவோம்
சர்வ வல்லவர் அவரை
நாம் என்றென்றும் புகழுவோம் - தேவாதி தேவா
இருப்பவராய் இருப்பவர்
மாறா நித்திய மகத்துவர்
ஆவி உண்மையோடுமே
ஆராதிப்போம் அன்பர் நாமே - தேவாதி தேவா
தம்புரு தாளத்தோடும்
கீர்த்தனைகள் பாடுவோம்
தேவ சுதன் யெஷுஆ முன்னே
மகிழ்ந்து ஸ்தோத்தரிப்போமே - தேவாதி தேவா
யாவே தேவன் நாமத்தை
ஏகமாகப் போற்றுவோம்
ஏகசுதன் யெஷுஆவை தந்து
நம்மைக் காத்தோரை - தேவாதி தேவா
ஒருவராய் பெரியவர்
அதிசயங்கள் செய்பவர்
மாறாதன்மையுள்ளவரை
மகிழ்ந்து போற்றி பாடுவோம் - தேவாதி தேவா

224. சர்வ நன்மைகட்கும்
சர்வ ஞானத்திற்கும்
உறைவிடமாம் எம் தேவனே ///2


உம்மையே துதித்திடுவோம்
தினமும் பரனே நன்றியால் //2
கடும் பள்ளத்தில் கிடந்த எம்மை
தம் வாக்குத்தத்தங்களால் //2
திருக்கரங்களால் தாங்கி என்றும்
தம் மார்போடு சேர்த்தணைத்தார் //2 - சர்வ நன்மைகட்கும்
பரிசுத்தாவியால் நிரப்பி
அனுதினமும் எம்மை தேவனே //2
எம் பிரதிஷ்டையின் பொருத்தனையில்
நல் வரங்களை தந்திடுமே //2 - சர்வ நன்மைகட்கும்

225. பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப் போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே


தீயவர் திருடர் கொடியவர் கொலைஞரும்
யெஷுஆவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்கு
அழைக்கிறார் ஓடியே வா - பொங்கி
தேவனின் திட்டத்தால் விடுதலை
வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு
யெஷுஆவின் பலி புண்யம் உனக்கு தான் உண்டு
நம்பி நீ ஓடியே வா - பொங்கி
கிருபையின் காலம் விரைவினில் முடியும்
அழைப்பினை கேட்டிடுவாய்
பிரசன்ன காலமும் நடந்திடுதே அதை
அறிந்து நீ ஓடியே வா - பொங்கி
யெஷுஆவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்கு
அழைக்கிறார் ஓடியே வா - பொங்கி

226. உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவைப் பெறுவார்
சொல் அதில் கூறுவார் வாழ்வதில் நிரூபிப்பார்
யெஷுஆவின் ஜனங்கள் இவரே


பிதாவின் பேரிலே பற்றுக்கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் ஞானத்தை
நீதியால் யெஷுஆவை பலியாய் கொடுத்தார்
வல்லமை கொண்டு உயிர்த்தெடுத்தார்
அன்பினால் நமக்கு ஜீவன் அருள்பவர்க்கு
துதிகள் என்றும் சாற்றிடுவோம் - உள்ளத்தில்
தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்
யெஷுஆவை அறிந்து நியாயமாகினாரே
அழைப்பின் வாய்ப்பிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் சத்தியத்தை அறிவார்
முடிவில் ஜீவனைப் பெறுவார் - உள்ளத்தில்
செல்வம் சீர் சிறப்பு நற்குடிப்பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து பேர் புகழ் திறமை
யாவையும் பெறினும் அவற்றை வெறுப்பீர்
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் யெஷுஆவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார் - உள்ளத்தில்

227. சருவ லோகாதிபா நமஸ்காரம்


சருவ சிருஷ்டிகரே நமஸ்காரம்
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே நமஸ்காரம் //2
சருவ ஞானகரே, நமஸ்காரம்
சேனைகளின் கர்த்தா நமஸ்காரம்
அன்பினால் அடியார் அகத்தினில் வசிக்கும்
மா யாவே தேவனே நமஸ்காரம் //2
அன்பின் தேவனே நமஸ்காரம்
ரட்சிப்பின் தேவா நமஸ்காரம்
தரணியில் மானிடர் உயிர் அடைந்தோங்க
தயை அருள் செய்தீர், நமஸ்காரம் //2
சர்வ வல்லவரே நமஸ்காரம்
சாவாமையுள்ளவரே, நமஸ்காரம்
திவ்விய சுபாவம் நீடிய சாந்தம்
பொறுமை கொண்டோரே, நமஸ்காரம் //2
சருவ லோகாதிபா நமஸ்காரம்
மகா நீதிபரரே நமஸ்காரம்
தம்மில் தாமே ஜீவனுடைய
தயாபர பிதாவே நமஸ்காரம் //2

228. யெஷுஆவை நம்பி பற்றிக்கொண்டேன்


மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவ குமாரன் ரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக்கொண்டார்
யெஷுஆவைப் பாடி போற்றுகிறேன்
நேசரைப் பணிந்து பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடூழி காலம் ஸ்தோத்தரிப்பேன்
அன்பு பாராட்டி காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் - யெஷுஆவைப் பாடிப்
மெய்ச் சமாதானம் ரட்சிப்பையும்
தூய தேவாவி வல்லமையும்
ஜீவாதிபதி ராஜன் தந்துவிட்டார்
மண்ணுலகிலும் வாழச் செய்வார் - யெஷுஆவைப் பாடிப்

229. தேவசேனை வானமீது கோடிகோடியாக வாழும்


பலகோடி திரள்கூடி தேவ ஆணைக்காக நிற்கும்
விண்மீன்கள் தம்மிடத்தில் ஒளியாய் என்றும் சுழலும்
பூமி முழுதும் பரதீசாய் என்றென்றும் மாறிப்போகும்
அல்லேலூயா அல்லேலூயா /4
பூமி எங்கும் தனில் ஆளும் ஆட்சி யாவும் அற்றுப்போகும்
தேவ ராஜ்யம் இப்புவியில் இனிதே விடியும் காலம்
தூயர் கூட்டம் கூட்டமாக சாட்சிப் பாடல் எங்கும் கேட்கும்
வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
- அல்லேலூயா
சமாதானம் அங்கு நிலவும் கண்ணீர் யாவும் அற்று போகும்
தீங்கு செய்வார் இனி இல்லை திவ்யவசனம் எங்கும் கேட்கும்
மரணம் அங்கு இல்லை கீழ்ப்படிந்தோர் எங்கும் இருப்பார்
பூமி முழுதும் பரதீசாய் என்றென்றும் மாறிப்போகும்
-

230. போற்றிடு ஆத்துமமே, சிருஷ்டி


கர்த்தாவாம் வல்லோரை
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை
கூடிடுவோம்
பாடிடுவோம் தேவனை
மாண்பாய் சபையாரெல்லோரும்.
போற்றிடு யாவையும் ஞானமாய்
ஆளும் தேவனை
ஆற்றலாய்க் காப்பாரே தம் செட்டை மறை/வில் நம்மை
ஈந்திடுவார்
நன்மை மறுமையிலே
யாவும் அவர் அருள் ஈவாம்
போற்றிடு காத்துனை
ஆசீர்வதிக்கும் தேவனை
தேற்றியே தயவால் நிரப்புவார் வாழ்/நாளை
பேரன்பராம்
பராபரன் தயவை
சிந்திப்பாய் இப்போதெப்போதும்.
போற்றிடு ஆத்துமமே, என் முழு
உள்ளமே நீயும்
ஏற்றிடும் கர்த்தரை ஜீ/வராசி/கள் யாவும்
சபையாரே
சேர்த்தென்றும் சொல்லுவீரே
வணங்கி மகிழ்வாய் ஆமென்

231. முன்னோரின் தெய்வமாம்


உன்னத ராஜராம்
அநாதியானோர் அன்பராம்
மா யாவே
சர்வ சிருஷ்டியும்
உம் பேர் நாமம் சாற்றும்
பணிந்து போற்றுவோம் என்றும்
உம் நாமமே
உன்னத தேவனை
தூய தூதர் சேனை
நீர் தூயர் தூயர் தூயரே
என்றிசைப்பார்
நேற்றும் இன்றும் என்றும்
இருக்கும் கர்த்தரும்
மா யாவே நம் பிதாவும்
துதி ஏற்பார்
மீட்புற்ற கூட்டமே
மா தேவன் போற்றுமே
அநாதி பிதா பரிசுத்தர்க்கே
துதி என்றும்
முன்னோர்க்கும் நமக்கும்
தெய்வம் ஆனோர்க்கென்றும்
வல்லமை மகத்துவமும்
உண்டாகவும்

232. தூய, தூய, தூயா! சர்வவல்ல தேவா


தேவரீர்க்கெந்நாளும் துதி கனம் ஏற்போமே
தூய, தூய, தூயா! ஒன்றான மெய் தேவா
என்றும் புகழ்ச்சி உம் மைந்தன் மூலமே
தூய, தூய, தூயா! சர்வ ஞான கர்த்தா
மானிடர் காணா ஒளியில் வாழும் நித்தியரே
கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று
என்றும் வீற்றாள்வீர், அநாதி தேவனே
தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக்காண யார் வல்லோர்?
நீரே தூய தூயர், மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோரே
தூய, தூய, தூயா! சர்வவல்ல ராஜா!
வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே
தூய, தூய, தூயா! ஒன்றான மெய் தேவா
என்றும் புகழ்ச்சி உம் மைந்தன் மூலமே

233. மா மாட்சி கர்த்தர், சாஷ்டாங்கம் செய்வோம்


வல்லவர் அன்பர், பாடிப் போற்றுவோம்
நம் கேடகம் காவல் அநாதியானோர்
மகிமையில் வீற்றுத் துதி உடையோர்
மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமே
மீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே
ஆ, சர்வ ஞானமே! சொல்லொண்ணா அன்பே!
மகிழ்வீர் விண்ணில் தூதர் போற்றவே
போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
மெய் வணக்கமாய்த் துதி பாடலோடும்
பாவிகள் பூ/மி/யி/லிருந்து
நிர்மூலமாகி இராமற்போவார்
என் ஆத்துமாவே, கர்/த்தரை ஸ்தோத்திரி
அல்லே/லூயா, அல்/லே/லூயா

234. ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்


அடியேனைக் காத்தீரே
மீண்டும் என்னை உமக்கேற்ற
சேவை செய்யக் கொள்வீரே
என் இதயம் மனம் செயல்
யாவும் உம்மைத் துதிக்கும்
ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்
அடியேனை ஆட்கொள்ளும்
இவ்வுலக வாழ்நாள் எல்லாம்
நான் உமக்காய் வாழவும்
அன்பு, தியாகம், அருள், பக்தி
அனைத்தும் பெற்றோங்கவும்
பாவ அழுக்கெல்லாம் நீக்கி
தூய பாதை செல்லவும்
ஆண்டவா, உம் அருள் தாரும்
அடியேனை ஆட்கொள்ளும்
வியாதி, துக்கம், தொல்லை வந்தால்
உம்மில் பெலன் கொள்ளுவேன்
உம் ப்ரசன்னம் எனக்கின்பம்
சாவுக்கும் நான் அஞ்சிடேன்
துன்பத்தில் என் நண்பர் நீரே
இன்பம் ஈபவர் நீரே
ஆண்டவா, நீர்தாம் என் தஞ்சம்
அடியேனை ஆட்கொள்ளும்
விண்ணோர் மண்ணோர் வாழ்த்தும் சத்தம்
மாட்சி மேன்மை மகிமை
விண்ணில் பரிசுத்தர் கூட்டம்
அவர் நாமம் துதிக்கும்
மண்ணில் மாந்தர் கூட்டம் யாவும்
அவர் பாதம் போற்றவும்
ஆண்டவா, உம் அருள் தாரும்
அடியாரை ஆட்கொள்ளும்

235. தேவாட்டுக்குட்டிக்கு


பன்முடி சூட்டிடும்
இன்னிசையாய் பேரோசையாய்
விண் கீதம் முழங்கும்
உள்ளமே போற்றிடு
உனக்காய் மாண்டோராம்
சதா காலமும் அவரே
ஒப்பற்ற ராஜாவாம்
அன்பார்ந்த கர்த்தர்க்கு
பன்முடி சூட்டிடும்
தம் ரத்தத்தால் மானிடரை
மீட்டிட்ட மீட்பரை
பார்ப்பாரோ தூதரும்
மா உன்னத அன்பை
பணிவரே சாஷ்டாங்கமாய்
மூடுவர் தம் கண்கள்
சமாதான கர்த்தருக்கே
பன்முடி சூட்டிடும்
போர் ஓய்ந்து ஜெப
ஸ்தோத்ரமே
பூமியை நிரப்பும்
ஆள்வார் என்றென்றைக்கும்
ஆளும் எவ்விடமும்
விண் லோக பாக்கிய சிறப்பு
விளங்கி வளரும்
ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு
பன்முடி சூட்டிடும்
சராசரங்கள் சிருஷ்டித்தோர்
உன்னத ராஜாவும்
பாவிக்காய் ஆருயிர்
ஈந்த என் மீட்பரே
சதா நித்திய காலமாய்
உமக்குத் துதியே

236. நடத்துவார் ஆ இன்பெண்ணம்


மாஆறுதல் சாரும் வண்ணம்
நான் எவ்விடத்திலிருக்கினும்
தேவனின் கையே நடத்தும்
நடத்துவார் நடத்துவார்
தம் கையாலே நடத்துவார்
அவரை தொடர்ந்து பின் செல்வேன்
தம் கையாலே நடத்துவார்
ஓர் வேளை இருள் பாதையில்
ஓர் வேளை ஏதேன் பூங்காவில்
அலைகடல் அமைவிலும்
அவர் நேச கை நடத்தும் - நடத்துவார் நடத்துவார்
கர்த்தா நான் உம் கைபிடிப்பேன்
திருப்தியால் குறை பேசேன்
எந்த நிலையும் பூரணம்
நீரே எனக்குத் தாரணம் - நடத்துவார் நடத்துவார்
இங்கென் வேலை முடிந்த பின்
கர்த்தரால் வெற்றி பெற்ற பின்
பங்கம் சாவிலுமஞ்சிடேன்
பொங்கும் யோர்தான் தாண்டச்செய்வார் - நடத்துவார் நடத்துவார்

237. என் முன்னே மேய்ப்பர் போகிறார்


நல்மேய்ப்பராகக் காக்கிறார்
ஓர்காலும் என்னைக் கைவிடார்
நேர் பாதை காட்டிப் போகிறார்
முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!
என் முன்னே சென்றுபோகிறார்!
நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்
அன்போடு பின்சென்றேகுவேன்
கார் மேகம் வந்து மூடினும்
சீர் ஜோதி தோன்றி வீசினும்
என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்
என்றைக்கும் முன்னே போகிறார்
மெய்ப் பாதைகாட்டி! பின்செல்வேன்
தெய்வீக கையால் தாங்குமேன்
எவ்விக்கினம் வந்தாலும் நீர்
இவ்வேழை முன்னே போகிறீர்
ஒப்பற்ற உம் காருணியத்தால்
இப்பூமி பாடு தீருங்கால்
நீர் சாவை வெல்லச் செய்குவீர்
பேரின்பம் காட்டி முன்செல்வீர்

238. லௌகீக இன்பம் மேன்மையும்


இப்பரதேசிக்கு வேண்டாம்
பரம நன்மை செல்வமும்
தேவனின் கிருபை வரமாம்!
நிலையில்லாததை நாடேன், நாடேன், நாடேன்
நிலையில்லாததை நாடேன்
நான் யெஷுஆவை சிநேகிப்பேன்
லௌகீக வாழ்வு ஒழியும்
சரீரம் பெலனற்றுப்போம்
நரர் கைவேலை அழியும்
இந்த யுகமும் மாறிப்போம் - நிலையில்லாததை
ஆனாலும் யெஷுஆ ராஜ்ஜியம்
அழிந்து போகமாட்டாதே
மா நீதியாம் சிங்காசனம்
விழாமல் என்றும் நிற்குமே - நிலையில்லாததை
நான் இங்கே தங்கும் நாள் எல்லாம்
என் துன்பம் நீங்கமாட்டாதே
ராஜ்யத்தில் சேர்ந்த பின் உண்டாம்
மெய்வாழ்வு மேன்மை பூரிப்பே - நிலையில்லாததை

239. கர்த்தர் தான் எங்கள் துருகமும்


அரண் பலமுமாமே
உண்டாம் இக்கட்டனைத்தையும்
போக்குவார் அவர் தாமே
மா எதிராளியின்
துன்பம் நம் மேல் வரும்
ஆனால் கர்த்தருடைய
அடைக்கலத்திற்கு
நிகர் புவியில் இல்லை
எதற்கு நாங்கள் வல்லவர்?
இந்நீசர் சக்தியற்றோர்
எங்களுக்காய் வேறொருவர்
போர் செய்வதற்கேற்பட்டோர்
யார்? யெஷுஆ கிறிஸ்து தான்
கர்/த்தா/தி கர்த்தர்
ஆம் எங்கள் ரட்சகர்
சேனாபதி அவர்
ஜெயிப்பார் யுகயுகமாய்
விழுங்க வரும் தீமைகளினால்
புவி நிரம்பினாலும்
பயப்படோம் சத்தியத்தினால்
அவரின் சித்தம் வெல்லும்
அந்தகார பிரபு
வெகுண்டெழுந்தாலும்
பயப்படோம் நாமும்
நிச்சய அழிவு
ஓர் சொல்லால் அது நிகழும்
பகைஞர் தெய்வ வார்த்தையை
பகைத்தும் அது நிற்கும்
கர்த்தர் சகாயர் அவர் கை
வரம் தந்தாதரிக்கும்
உற்றார் உலகமும்
ஜீவனே போனாலும்
சரீரமும் மாளும்
மெய் சத்தியம் நிலைக்கும்
அவர் ராஜ்யம் நித்தியமாம்

240. என் ஜீவிய காலமெல்லாம்
யெஷுஆவே நான் உம்மைப் பாடுவேன்
என் சோர்வின் நேரமெல்லாம்
கர்த்தரே நான் உம்மை நோக்குவேன்


வாதை என் கூடாரம் அணுகாமல்
உம் செட்டைகளால் காப்பவரே
ஆபத்து நாளிலே மறவாமல்
என் கூக்குரல் கேட்பவரே
சோதனையில் என்னைக் கழுவி
என் மனதை சுத்தம் செய்வீரே
நல்ல மணியாய் என்னை எடுத்து
உம் பாளயத்தில் சேர்ப்பீரே - என் ஜீவிய
பாவிகள் வழியில் நில்லாமல்
என் பாதையைக் காட்டுவீரே
நோவில் என் மாமிசம் சோராமல்
உம்மாவியால் தேற்றுவீரே
ரத்தத்தாலே என்னைக் கழுவி
என் பாவத்தை சுத்தம் செய்வீரே
சேற்றினின்று என்னை எடுத்து
உம் ராஜ்யத்தில் சேர்ப்பீரே - என் ஜீவிய

241. எந்தன் ஆத்மாவே எந்தன் உள்ளமே


யாவே தேவனை துதிப்பாயே
நீ பெற்ற நன்மையாவும் நினைத்து
கிறிஸ்துவின் மூலம் துதிப்பாயேர்


உனது பாவம் யாவும் மன்னித்து
உனது நோயை நீக்குவாரே
உனது ஜீவனை அழிவுக்கு மீட்டு
நன்மை கிருபையால் முடி சூட்டுவார் //2 - எந்தன்
நன்மையினாலே உனது வாயை
திருப்தியாக ஆக்கிடுவார்
கழுகுக்கு ஈடாய் உனது ஆயுள்
நிலைத்திட புதுப்பிப்பாரே //2 - எந்தன்
ஒடுங்கும் யாவர்க்கும் யாவே தேவன்
நீதி நியாயங்கள் செய்திடுவார்
இரக்கம் உருக்கம் உள்ள தேவனாம்
மிகுந்த கிருபையும் உள்ளவராம் //2 - எந்தன்

242. மெய் ஜோதியாம் என் தேவனே

நீர் தங்கினால் ராவில்லையே
என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்
மேகம் வராமல் காத்திடும்
உம் வசனத்தை என்றுமே
நான் பற்றி வாழ்தல் இன்பமே
என்றெந்தன் படுக்கையிலும்
சிந்திக்க ஏவியருளும்
என்னோடு தங்கும் பகலில்
சகியேன் நீர் இல்லாவிடில்
என்னோடு தங்கும் ராவிலும்
நீர் தாங்கின் அஞ்சேன் சாவிலும்
இன்றைக்குத் தேவ அழைப்பை
கேட்டு வந்த அடியேனை
நீர் கைவிடாமல் நியாயமாக்கி
இழுத்துக் கொள்ளும் தேவனே

243. ஒன்றுமில்லை நான் என்றே உணர்ந்திடும் உண்மை மனம் வேணும்


ஒன்றுமில்லா வெறும் பாத்திரமாய்
என்னை ஒப்புவிக்க வேணும் //2
யெஷுஆ என்தனை ஆவியால் முற்றும் நிரப்புவார்
குன்றாதென் ஊழியமே - ஒன்றுமில்லை
யெஷுஆவின் ஜீவனே என்றனுள்ளத்தினுள்
இடையூறின்றிப் பாய்ந்திட //2
எந்தன் மாசுகளான தடைகள் உடையட்டும்
வந்தேன் அவர் பாதமே - ஒன்றுமில்லை
யெஷுஆவின் கைகளே என்னை நடத்தட்டும்
யாதொன்றுமில்லையே நான் //2
அவர் ஆழைப்பில் ஊழியனாய் காத்திருப்பேன்
நிதம் மகிழ்ந்து பணி செய்திட - ஒன்றுமில்லை
தேவன் திருப்புகழ் சொல்லும் கருவியாய்
ஆவதே என் விருப்பம் //2
நான் சேவகம் செய்ய உதவாவிடினும்
அவர் சேவடி கீழிருப்பேன் - ஒன்றுமில்லை

244. காணாத ஆட்டை சேர்க்க


யெஷுஆ மனுவாகவே வந்தார்
அன்போடு உன்னை அழைக்கிறாரே
இன்றே திரும்பி நீ வா //2
காணாத ஆட்டை சேர்க்க
காடும் மேடும் திரிந்த உன்னை
உள்ளம் கனிந்தவர் தேடுகிறார்
சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் //2
- காணாத ஆட்டை
எத்தனை நேரம் உன்னை அழைத்தார்
இத்தனை காலம் நீ தள்ளலாமோ
கர்த்தரின் சித்தம் உன் வேலையிதே
கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா //2 - காணாத ஆட்டை
சுத்த இருதயம் வேண்டாமென்றெண்ணி
கர்த்தரின் அன்பை நீ தள்ளுவானேன்
கர்த்தரின் பந்தியில் பங்கடைய
கண்ணீருடன் நீயும் வந்திடுவாய். //2 - காணாத ஆட்டை
என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்
யெஷுஆவின் பாதையை விட்டுவிடாதே
நீதி நிறைந்த தம் கரங்களை
நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் //2 - காணாத ஆட்டை

245.இருள் சூழ்ந்த லோகத்தில்

இமைப்பொழுதும் தூங்காமல் //2
கண்மணிபோல என்னை
கர்த்தர் யெஷுஆ காத்தாரே //2
நெஞ்சமெல்லாம் நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன் //2
அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் நேசர் என்னோடிருப்பதால் //2
மரண பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில் //2
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால் //2
பாத்திரம் நிரம்பி வழிய
ஆசியால் நிரப்பினார் //2
அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் நேசர் என்னோடிருப்பதால் //2
அலைகள் படகின் மேல்
மோதியே அமிழ்த்தினாலும் //2
கடலின் மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னை தூக்கினார் //2
கொந்தளிப்பை அடக்கியவர்
அமைதிப்படுத்தினார் //2
அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் நேசர் என்னோடிருப்பதால் //2

246. சிலுவை சுமந்த என் நேசர்


இரத்தத்தை சிந்தி எனை மீட்டாரே
அன்போடு தனைதாழ்த்தினார்
நம்பி யெஷுஆவண்டைவா /2
பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணார் நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தரின் அன்பண்டைவா //2 - சிலுவை சுமந்த
ஆத்தும மீட்பை பெற்றிடாமல்
ஆத்துமம் நஷ்டமடைந்தால்
லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே //2 - சிலுவை சுமந்த
பாவ மனித ஜாதிகளை
பாசமாய் மீட்க வந்தார்
பாவ பரிகாரி கர்த்தர் யெஷுஆ நேசா
பாவமெல்லாம் சுமந்தார் //2 - சிலுவை சுமந்த
தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத்தண்ணீராக கர்த்தர் யெஷுஆ நேசா
ஜீவன் உமக்களிப்பார் //2 - சிலுவை சுமந்த
நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயே
இப்பூவி ஜீவ வாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம்
அதுவே ஜீவ வழியாம் //2 - சிலுவை சுமந்த

247. உன்னதத்தில் தேவனுக்கு மகிமை


உலகத்தில் எங்கும் சந்தோஷமே
சமாதானமும் சுவிசேஷமும்
இரட்சிப்பு என்னும் நல்ல செய்தியும் //2
உந்தனின் இராஜா
மகிமையோடு ஆளுகின்றாரே
எந்நாளும் களிகூர்ந்து
நித்திய வாழ்வை பெற்றிடு என்று
சீயோனை நோக்கி கூறுகின்ற
நற்செய்தியாளரின் பாதங்கள்
மலைகள் மேலே எவ்வளவாய்
அழகாய் தோன்றுகின்றன - சமாதானமும்
ஆழத்தின் தண்ணீரை வற்றிப்போகச் செ
ஆனந்த களிப்புடன் பாடி
சீயோனுக்குத் திரும்புவார்கள்
நித்திய மகிழ்ச்சி தங்கிடுமே - சமாதானமும்
மனிதர் மத்தியில் தேவன் இருப்பிடம்
உண்டாகும் நாளினிலே
அவரே அவர்கள் தேவனாய் விளங்க
மகிழ்ச்சி நிலவுமே
கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பபார்
துக்கம் அலறுதல் மாற்றிடுவார்
மரணம் முற்றிலும் நீக்கிடுவார்
யாவையும் புதுமை ஆக்கிடுவார் - சமாதானமும்

248. நல் மேய்ப்பரே இக்கூட்டத்தை


கண்ணோக்கி ஆசீர்வதியும்
தாசர் செய்யும் ஆராதனை
அன்பாக அங்கீகரியும்
உம் சித்தத்திற்கு ஏற்றதாய்
ஜெபிக்கக் கட்டளையிடும்
தேவன்பைக் காட்டி பக்தியாய்
துதிக்க ஏவியருளும்
இச்சமயத்தில் பணிவாய்
ஆராதிப்போர் அனைவரும்
உண்மையும் தூய்மை அன்புமாய்
தொழுதுகொள்ள எழுப்பும்
இங்கும் உமது ஆவியால்
ஜனங்களுக்கு உணர்வும்
நற்சிந்தையும் நீர் ஈவதால்
உம் நாமம் மாட்சிமைபடும்

249. கடல் கொந்தளித்துப் பொங்க


கப்பல் ஆடி செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்
யெஷுஆ எங்கள் இடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமர்த்தி துணை நின்று
கரை சேர செய்திடும்
கப்பல் ஏறிப் போவோருக்கு
கடும் மோசம் வரினும்
பாறை, மின், முழக்கம், காற்று
உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்சோதி
வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசை காட்டி
கரை சேர செய்திடும்
எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும்
இந்த பாழ் உலகத்தில்
யெஷுஆ எங்கள் இடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமர்த்தி துணை நின்று
கரை சேர செய்திடும்

250. நம்மோடு செல்லும் ஞானக் கன்மலையின்
தண்ணீரை அருந்திடுவோம்


அதால் பாவக்குற்றம் நீங்கி சுத்தமடைந்து
சமாதானம் பெற்றிடுவோம், அல்லேலூயா
- நம்மோடு செல்லும்
சொந்த கிரியையால் தேவ நீதிக்கு
ஈடு நான் செய்வதில்லை
என்னின் நொறுங்குண்ட இதய
நறுங்குண்ட ஆவியால்
யெஷுஆவுடன் ஒன்றினேன், அல்லேலூயா
- நம்மோடு செல்லும்
யெஷுஆ பலியில் உண்மை விஸ்வாசம்
என்னை நியாயமாக்கிற்று
அதால் எபிப்பெனி பாளய
பிரதிஷ்டை செய்ய
பாக்கியம் பெற்றேன் நான், அல்லேலூயா
- நம்மோடு செல்லும்
ரட்சிப்பின் பாத்ரம் எடுத்து யாவேயின்
நாமத்தை நாம் தொழுவோம்
என்றும் எபிப்பெனி பாளய
விசுவாச வீட்டாராய்
லேவியர் கீழ் சேவிப்போம் அல்லேலூயா
- நம்மோடு செல்லும்
ஓபேல் குன்றில் சிறந்த நிதனீம்
சேபா நாட்டு ராணியாம்
இந்த சத்திய ஆவியில்
பாளய பணிவிடை
அன்றாடம் செய்தோங்குவோம், அல்லேலூயா
- நம்மோடு செல்லும்
பொல்லாங்கை இச்சித்தல், விக்ரகாராதனை,
வேசித்தனம், பரீட்சித்தல்,
மேலும் முறுமுறுப்பு ஆன
கொழித்தலுக்குள்ளாய்
போகாதிருப்போமாக, அல்லேலூயா - நம்மோடு செல்லும்

251.துன்மார்க்கருடைய


ஆலோசனையில் நடவாமலும்
பாவிகளுடைய வழியில் நில்லாமலும்
பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து
இரவும் பகலும் அவருடைய
வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன்
பாக்கியவான்
அவன் நீர்க்கால்களின்
ஓரமாய் நடப்பட்டு நிலைத்து
தன் காலத்தில் தன் கனியை தந்து
இலையுதிராது இருக்கிற மரத்தைப்
போலிருப்பான்
யூபிலி வந்தாயிற்று இழந்த உரிமையெல்லாம்
யெஷுஆவின் கிரயத்தால் திரும்பிடும் செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4
யூபிலி வந்தாயிற்று ராவில் நிலைத்த கண்ணீர்
யாவும் துடைக்கப்படும் ரட்சிப்பின் செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4
யூபிலி வந்தாயிற்று பூமியின் எல்லையெங்கும்
சர்வ ஜனங்களுக்கும் உயிரூட்டும் செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4
யூபிலி வந்தாயிற்று பரம கிருபையால்
தேவ ஐக்கியத்தை பெற்றிடும் செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4
யூபிலி வந்தாயிற்று ஏழாம் எக்காளம்
இன்றும் தொனிக்கிறது சந்தோஷ செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4

252. புறப்பட்டுப் போகக்கடவோம் யெஷுஆவின் நிந்தையை சுமப்போம் பாளயத்தின் புறம்பே போவோம்.


தம்முடைய சொந்த ரத்தத்தால் ஜனத்தை
பரிசுத்தம் செய்ய நகர வாசலுக்கு
புறம்பே பாடுபட்ட யெஷுஆ அண்டைக்கு - புறப்பட்டு
கள்ளச் சகோதரர் துரோகம் செய்வார்கள்
பொல்லாதவைகளை சுமத்திடுவார்கள்
ஆவியின் கனியை மறுதலிப்பார்கள் - புறப்பட்டு
சன்பல்லா தொபியா சக்கந்தங்களையும்
துன்புறுத்தும் தீய கேள்விகளையும்
அன்பருடன் மா இன்பமாய் ஏற்போம் - புறப்பட்டு
ஸ்தேவான் மேல் விழுந்த கற்களை நினைத்து
சீஷர்கள் அடைந்த வாதைகளை சிந்தித்து
மோசங்கள் வரினும் பொறுமையாய் சகிப்போம் - புறப்பட்டு
நாளெல்லாம் நரரால் நசுக்கப்பட்டாலும்
செருக்கானவரால் நெருக்கப்பட்டாலும்
விக்கினங்கள் நம்மை வெகுவாய் சூழ்ந்தாலும் - புறப்பட்டு
வருத்தங்கள் வகை வகையாகவே வரும்
திருத்தங்கள் சிலரால் பொருத்தமாய் சேரும்
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை பார்த்தே - புறப்பட்டு
நடந்திடும் யுத்தம் யாவேயுடையதே
அமர்ந்து அவரே தேவனென்று அறியுங்கள்
ஸ்தோத்திர பலியை ஊக்கமாய்ச் செலுத்தி - புறப்பட்டு

253. யூபிலி வந்தாயிற்று மீட்பர் யெஷுஆ ராஜாவாய்


மகிமை நீதியோடு ஆளும் செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4
யூபிலி வந்தாயிற்று க்றிஸ்து முழுமையாய்
பாவ நிவிர்த்தி முடித்த செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4
யூபிலி வந்தாயிற்று பாவ அடிமைத்தளை
தகர்த்து எறியப்படும் விடுதலை செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4
யூபிலி வந்தாயிற்று மீட்கப்பட்ட பாவிகள்
வீடு திரும்பிடவே அழைக்கும் செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4
யூபிலி வந்தாயிற்று இழந்த உரிமையெல்லாம்
யெஷுஆவின் கிரயத்தால் திரும்பிடும் செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4
யூபிலி வந்தாயிற்று ராவில் நிலைத்த கண்ணீர்
யாவும் துடைக்கப்படும் ரட்சிப்பின் செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4
யூபிலி வந்தாயிற்று பூமியின் எல்லையெங்கும்
சர்வ ஜனங்களுக்கும் உயிரூட்டும் செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4
யூபிலி வந்தாயிற்று பரம கிருபையால்
தேவ ஐக்கியத்தை பெற்றிடும் செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4
யூபிலி வந்தாயிற்று ஏழாம் எக்காளம்
இன்றும் தொனிக்கிறது சந்தோஷ செய்தியை
எக்காளம் ஊதுங்கள் /4

254. யாவேயின் தேவநகரம்


விசுவாசத்தால் கண்டோர் பணிந்து போற்றும்
யாவேயின் தேவநகரம்
அலங்கரித்து ஆயத்தமாக்கப்பட்ட
அதற்கு மகிமை கனம் செலுத்துங்கள் //2
புதிய எருசலேமாம்
பரலோகத்தை விட்டு இறங்கி வந்த
புதிய எருசலேமாம்
புதிய வானமாம் புதிய பூமியாம்
முந்தினவை யாவும் ஒழிந்துபோயின //2 - யாவேயின்
தேவனின் வாசஸ்தலம்
இதோ மனுஷரிடம் இருக்கிறது
தேவனின் வாசஸ்தலம்
அவர்களில் அவர் வாசமாயிருப்பார்
அவர்களும் அவர் ஜனமாயிருப்பர் //2 - யாவேயின்
தேவன் தாமே இருப்பார்
கூட இருந்து அவர்களின் தேவனாக
தேவன் தாமே இருப்பார்
அவர்களுடைய கண்ணீர்கள் யாவையும்
தேவன் துடைப்பாரினி மரணமில்லை. //2 - யாவேயின்
பரிசுத்த நகரமது
அதன் வீதி சுத்த பொன்னாலானது
பரிசுத்த நகரமது
மதில் அஸ்திபாரம் ரத்தினங்களாமே
ஆட்டுக்குட்டியானவர் அதன் ஆலயம் //2 - யாவேயின்
நகரத்திற்கு வெளிச்சம்
தேவ மகிமை பிரகாசமேதான்
நகரத்திற்கு வெளிச்சம்
சூரியன் சந்திரன் அதற்கு வெளிச்சம்
கொடுக்க வேண்டிய அவசியமில்லை. //2 - யாவேயின்
ஆட்டுக்குட்டியானவர்
அதன் ஒளியாய் என்றும் இருக்கிறாரே
ஆட்டுக்குட்டியானவர்
ரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின்
வெளிச்சத்திலே துதித்து நடப்பார்கள் //2 - யாவேயின்
பூமியின் ராஜாக்கள்
தங்கள் மகிமை கனத்தை நகரத்துக்குள்
பூமியின் ராஜாக்கள்
கொண்டு வருவார்கள் தீட்டுள்ள ஒன்றும்
அதில் ப்ரவேசிப்பதில்லை அல்லேலூயா //2 -யாவேயின்

255. கர்த்தரின் மாம்சம் வந்துட்கொள்ளுங்கள்


சிந்துண்ட ரத்த பானம் பண்ணுங்கள்
தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்
நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம்
தெய்வகுமாரன் மீட்பின் காரணர்
தம் சிலுவையால் வெற்றி பெற்றவர்
தாமே ஆசாரி தாமே பலியாய்
தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய்
பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்
இந்த ரகஸ்யத்தின் முன்குறிப்பாம்
சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்
தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார்
உண்மை நெஞ்சோடு பங்கு கொள்ளுங்கள்
ரட்சிப்பின் பாதுகாப்பில் வாருங்கள்
தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்
அன்பர்க்கு நித்ய ஜீவன் ஈகிறார்
விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்
ஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கிறார்

256. I need Thee every hour


Most precious Lord
No tender voice like Thine
Can peace afford
I need Thee , Oh! I need Thee
Every hour I need Thee
O Bless me now, my Saviour
I Come to Thee.
I need Thee every hour
Stay Thou nearby
Temptations lose their power
When Thou art nigh - I need
I need Thee every hour
In joy or pain
With me dear Lord abide
Or life is vain - I need
I need thee every hour
Teach me thy will
And thy rich promises
In me fulfill - I need

257. How many times discouraged


We sink beside the way
About us all is darkness
We hardly care to pray
Then from the mists and shadows
The sweetest voice ever known
Says “Child, am I not with thee
Never to leave thee alone?"
No, never alone, no never alone
He promised never to leave me
Never to leave me alone
No, never alone, no never alone
He promised never to leave me
Never to leave me alone
O soul, hast thou forgotten
The tender word and sweet
Of Him who left behind Him
The print of bleeding feet ?
"I never will forsake thee,
O child so weary grown
Remember, I have promised
Never to leave thee alone - No, never
Take courage way worn pilgrim
Tho' mists and shadows hide
The face of him thou lovest
He is ever at thy side
Reach out thy hand and find Him
And lo the clouds have flown
He smiles on thee who promised
Never to leave thee alone - No never

258. The Lord Bless thee and keep thee


The Lord make His face shine upon thee
And be gracious unto thee
And be gracious unto thee
The Lord lift up His countenance
His countenance upon thee
And give thee peace

259. I was sinking deep in sin, far from the peaceful shore



Very deeply stained within, sinking to rise no more
But the Master of the sea heard my despairing cry
From the waters lifted me, now safe am I.
Love lifted me! Love lifted me!
When nothing else could help
Love lifted me.
Love lifted me! Love lifted me!
When nothing else could help
Love lifted me.
All my heart to Him I give, ever to Him I'll cling
In His blessed presence live, ever His praises sing
Love so mighty and so true merits my soul's best songs
Faithful loving service, too, to Him belongs. - Love lifted
Souls in danger, look above, Yeshua completely saves
He will lift you by His love out of the angry waves
He's the master of the sea, billows His will obey
He your Saviour wants to be, be saved today. - Love lifted

260. Yeshua Christ the Lord is risen, Alleluia



Sons of man and angels say, Alleluia
Raise your joys and triumphs high, Alleluia
Sing, ye heavens, and earth reply, Alleluia
Love’s redeeming work is done, Alleluia
Fought the battle victory won, Alleluia
Lo! He’s risen conqueror, Alleluia
And shall sink in death no more, Alleluia
Lives again our glorious King, Alleluia
Where O death is now thy sting, Alleluia
Once He died our souls to save, Alleluia
Where thy victory O grave, Alleluia

261. When peace like a river attendeth my way



When sorrows like sea billows roll
Whatever my lot, thou hast taught me to say
"It is well, it is well with my soul."
It is well with my soul
It is well, it is well with my soul.
Though Satan should buffet, though trials should come
Let this blest assurance control:
That Christ has regarded my helpless estate
And has shed His own blood for my soul. - It is well
My sin oh, the bliss of this glorious thought!
My sin, not in part, but the whole
Is nailed to the cross, and I bear it no more
Praise the Lord, praise the Lord, O my soul! - It is well

262. Be Thou my vision, O Lord of my heart



Naught be all else to me, save that Thou art
Thou my best thought, by day or by night
Waking or sleeping, Thy presence my light.
Be Thou my wisdom, and Thou my true word
I ever with Thee and Thou with me, Lord
Thou my great Father, I Thy true child
Thou in me dwelling, and I with Thee one.
Be Thou my battle shield, sword for the fight
Be Thou my dignity, Thou my delight
Thou my soul’shelter, Thou my high tower:
Raise Thou me from the dust, O power of my power
Riches I heed not, nor man’s empty praise
Thou mine inheritance, now and always:
Thou and Thou only, first in my heart
High King of heaven, my treasure Thou art.
High King of heaven, my victory yet
May I reach kingdom joys, O bright heaven’s sun!
Heart of my own heart, whatever befall
Still be my Vision, O Ruler of all.

263. I serve a risen Savior



He’s in the world today.
I know that He is living
Whatever men may say.
I see His hand of mercy
I hear His voice of cheer
And just the time I need Him
He’s always near.
He lives, He lives, Christ Yeshua lives today
He walks with me and talks with me
Along life’s narrow way.
He lives, He lives, salvation to impart!
You ask me how I know He lives?
He lives within my heart.
In all the world around me
I see His loving care
And though my heart grows weary
I never will despair
I know that He is leading
Through all the stormy blast
The day of His appearing
Has come at last. - He lives
Rejoice, rejoice, O Christian
Lift up your voice and sing
Eternal Hallelujahs
To Yeshua Christ the King!
The hope of all who seek Him
The help of all who find
None other is so loving
So good and kind. - He lives

264. When upon life's billows you are tempest-tossed



When you are discouraged, thinking all is lost
Count your many blessings; name them one by one
And it will surprise you what the Lord hath done.
Count your blessings, name them one by one.
Count your blessings, see what God hath done.
Count your blessings, name them one by one.
And it will surprise you what the Lord hath done.
Are you ever burdened with a load of care?
Does the cross seem heavy you are called to bear?
Count your many blessings, every doubt will fly
And you will keep singing as the days go by - Count

265. He leadeth me, O blessed thought!



O words with heavenly comfort fraught!
Whatever I do, wherever I be,
still 'tis God's hand that leadeth me.
He leadeth me, He leadeth me
By His own hand He leadeth me
His faithful follower I would be
For by His hand He leadeth me.
Sometimes mid scenes of deepest gloom
Sometimes where Eden's bowers bloom
By waters still, over troubled sea
still 'tis His hand that leadeth me. - He Leadeth
Lord, I would place my hand in thine
Nor ever murmur nor repine
Content, whatever lot I see
Since 'tis my God that leadeth me. - He Leadeth

266. Softly and tenderly Yeshua is calling



Calling for you and for me
See, on the portals He's waiting and watching
Watching for you and for me.
Come home, come home
You who are weary, come home
Earnestly, tenderly, Yeshua is calling
Calling, O sinner, come home!
Why should we tarry when Yeshua is calling
Calling for you and for me?
Why should we linger and heed not His mercies
Mercies for you and for me? - Come home
Time is now fleeting, the moments are passing
Passing from you and from me
Shadows are gathering, deathbeds are coming
Coming for you and for me. - Come home
O for the wonderful love He has promised
Promised for you and for me!
Though we have sinned, He has mercy and pardon
Pardon for you and for me. - Come home

267. When my way growth drear


Precious Lord, linger near
When my light is almost gone
Hear my cry, hear my call
Hold my hand lest I fall
Take my hand, precious Lord
Lead me on.
Precious Lord, take my hand
Lead me on, let me stand
I am tired, I'm weak, I am worn
Through the storm, through the night
Lead me on to the light
Take my hand, precious Lord
Lead me home.
When my work is all done
And my race here is run
Let me see by the light
Thou hast shown
That fair city so bright
Where the Lamb is the light
Take my hand, precious Lord
Lead me on.

268. We thank Thee each morning for a newborn day



Where we may work the fields of new mown hay
We thank Thee for the sunshine
And the air that we breathe
Oh Lord we thank Thee.
We thank Thee for the rivers that run all day
We thank Thee for the little birds that sing away
We thank Thee for the trees
And the deep blue sea
Oh Lord we thank Thee.
Oh yes we thank Thee Lord
For every flower that blooms
Birds that sing, fish that swim
And the light of the moon.
We thank Thee every day
As we kneel and pray
That we were born with eyes
To see these things.
We thank Thee for the fields
Where the clovers grow
We thank Thee for the pastures
Where the cattle may roam
We thank Thee for Thy love so pure and free
Oh Lord we thank Thee.

269. This is the day, this is the day



That the Lord has made, that our God has made.
We will rejoice, we will rejoice
And be glad in it, and be glad in it.
This is the day that the Lord has made
We will rejoice and be glad in it.
This is the day, this is the day
That the Lord has made.
You are our God, You are our God
We will praise Your name, we will praise Your name
We will give thanks, we will give thanks
For Your faithfulness, for Your faithfulness.
You are our God; we will praise Your name
We will give thanks for Your faithfulness.
You are our God, You are our God
We will praise Your name.

270. Hallelujah What a Saviour



Man of sorrows what a name
For the Son of God, who came
Ruined sinners to reclaim
Hallelujah, what a Savior!
Bearing shame and scoffing rude
In my place condemned He stood
Sealed my pardon with His blood
Hallelujah, what a Savior!
Guilty, helpless, lost were we
Blameless Lamb of God was He
Sacrificed to set us free
Hallelujah, what a Savior!
He was lifted up to die
"It is finished" was his cry
Now in heaven exalted high
Hallelujah, what a Savior!
When He comes, our glorious King
All His ransomed home to bring
Then anew this song we'll sing
Hallelujah, what a Savior!

271. To God be the glory, great things He hath done



So loved He the world that He gave us his Son
Who yielded His life an atonement for sin
And opened the life-gate that all may go in.
Praise the Lord, praise the Lord, let the earth hear His voice!
Praise the Lord, praise the Lord, let the people rejoice!
O come to the Father through Yeshua the Son
And give him the glory, great things He hath done.
O perfect redemption, the purchase of blood
To every believer the promise of God
The vilest offender who truly believes
That moment from Yeshua a pardon receives. -Praise
Great things He hath taught us, great things He hath done
And great our rejoicing through Yeshua the Son
But purer, and higher and greater will be
Our wonder, in Kingdom , when Yeshua will reign. -Praise

பல்லவிகள்


1. ஓ தேவனுக்கு மகிமை


தூக்கியெடுத்தார்
என்னை தூக்கியெடுத்தார் அன்பால்
தம் கரத்தை நீட்டி ரட்சித்தாரே
ஓ! தேவனுக்கு மகிமை
நான் அவரை நேசிக்கிறேன்
மென்மேலும் நேசிக்கிறேன்
அக்கரையில் நான் நின்று அவரை
என்றென்றும் வாழ்த்திடுவேன் //2

2. வல்லமை உண்டு உண்டு


அற்புத வல்லமை
யெஷுஆவின் ரத்தத்தால்
வல்லமை உண்டு உண்டு
அற்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்

3. என் தேவனால் ஆகாததொன்றுண்டோ /2


என் தேவனால் ஆகாதது /2
என் தேவனால் ஆகாததொன்றுண்டோ
என் தேவனால் எல்லாம் கூடும் /2
என் தேவனால் எல்லாம் /2
என் தேவனால் எல்லாம் கூடும்

4. துதி கனம் மகிமை உமக்கே


ஓ எல்லாமுமே! ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமை உமக்கே
ஓ! நீரே ராஜாவே
ஸ்தோத்ரம், ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்
மிக ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்
ஓ நீரே ராஜாவே

5. நீங்கிற்றே, நீங்கிற்றே, நீங்கிற்றே


என் பாவபாரமெல்லாம் நீங்கிற்றே
சர்வ பாவங்களும் யெஷுஆவின் ரத்தத்தால்
அல்லேலூயா நீங்கிற்றே,
நீங்கிற்றே, நீங்கிற்றே
என் பாவபாரம் எல்லாம் நீங்கிற்றே.

6. என்னுள்ளம் தேவன்பால்


பொங்கி வழியுதே
யெஷுஆ என்னை ரட்சித்தார்
நான் துதித்துப் பாடுவேன்
எவரும் அறியாரே
என் உள்ளம் பொங்குதே
என் உள்ளம் பொங்கி
பொங்கி பொங்கி
பொங்கி வழியுதே

7. யெஷுஆ மேய்ப்பர் அவர் மந்தை


ஆடுகள் நாங்கள் //3
பயப்படவே மாட்டோம் /2

8. ஜீவனுள்ள தேவா உம்


ஆவியைத் தாரும் //2
நொறுக்கும் உருக்கும்
உருவாக்கி நிரப்பும்
ஜீவனுள்ள தேவா உம்
ஆவியைத் தாரும்
கர்த்தாவே சொல்லும் உம்
அடியேன் கேட்பேன் //2
போதியும் நடத்தும்
காத்து பெலன் அருளும்
கர்த்தாவே சொல்லும் உம்
அடியேன் கேட்பேன்

9. தேவ ஆசீர்வாதத்தோடே


அடியாரை நிரப்பும்
வார்த்தை என்னும் அப்பத்தாலே
போதித்து வளர்ப்பியும்
இப்போதும்மை தேடிவந்து
மனதாரப் போற்றினோம்
நித்ய ஜீவனில் களித்து
உம்மை வாழ்த்தி தொழுவோம்

10. கர்த்தர் தந்த ஈவுக்காக


என்றென்றைக்கும் தோத்திரம்
விண்ணோர் மண்ணோர் கூட்டமாக
பாடுவார் சங்கீர்த்தனம்
மீட்கப்பட்ட யாவராலும்
ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும்
தோத்திரம் உண்டாகவே

11. ஜீவ அப்பம் நித்தம் புசிப்போம்


ஜீவ ஊற்றில் பானம் பண்ணுவோம்
கிறிஸ்து யெஷுஆ வாக்கின்படியே
ஓர் காலும் தாகம் தோன்றாதே.
தாகம் முற்றும் தீருமோ?
தாகம் முற்றும் தீருமே
நித்ய ஜீவன் கிட்டுமோ?
நித்ய ஜீவன் கிட்டுமே
கிறிஸ்து யெஷுஆ வாக்கின்படியே
ஜீவன் கிட்டும் நித்தியமாய்.

12. ஜீவாதாரம் யெஷுஆவே - என்


ஜீவாதாரம் யெஷுஆவே
துதிபாடி போற்றிடுவேன்
தினம் நாடி மகிழ்ந்திடுவேன் //2
அல்லேலூயா ஆனந்தமே
அல்லேலூயா பரமானந்தமே //2
துதிபாடி போற்றிடுவேன்
தினம் நாடி மகிழ்ந்திடுவேன் //2
ஜீவாதாரம் யெஷுஆவே - என்
ஜீவாதாரம் யெஷுஆவே

13. தேவன் கைவிடார் என்று


சொல்வோமே நாம் //2
ஒருபோதும் நம்மை கைவிடாரே
ஒரு நாளும் நம்மைவிட்டு விலகிடாரே //2
தேவன் கைவிடார் என்று
சொல்வோமே நாம் //2
ஆகார் தேவனை நோக்கி
கதறி அழுத வேளையில் //2
பிள்ளையின் சத்தத்தைக்கேட்டு
தேவன் நீரூற்றை காணச் செய்தாரே //2
நீர் என்னை காண்கிற தேவன் //2
என்று தேவனைத் துதித்தாள்
நீர் என்னை காண்கிற தேவன் //2
என்று தேவனை புகழ்ந்தாள்
தேவன் கைவிடார் என்று
சொல்வோமே நாம் //2

14. தூய தூய தூயா சர்/வ வல்ல தே/வா


தேவரீர்கெந்/நாளும் துதி கனம் ஏற்/போமே
தூய தூய தூயா ஒன்/றான மெய் தே/வா
என்/றும் புகழ்/ச்சி உம் மைந்தன் மூலமே

15. எல்லா நன்மைக்கும் காரணா


எல்லாரும் போற்றும் ஆரணா
நல்ல வேதா வல்ல வேந்தா
நல் ஆசீர் நல்கும் பேர் மன்னா
பல்கோடி நன்றி பூரணா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா

16. வேதத்திலே வேதத்திலே


விலைமதியாத முத்துக்கள் உண்டு
தினந்தோறுமே அம்முத்துக்களைப் பார்
உண்மையாகவே நீ முத்தாய் மாறுவாய்

17. ஜீவிக்கிறார் யெஷுஆ ஜீவிக்கிறார்


என்னுள்ளத்தில்
அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்
ஜீவிக்கிறார் யெஷுஆ ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில்
அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்

18. யெஷுஆ கிறிஸ்து மாறாதவரே


மாறாதவரே மாறாதவரே
ஆமாம் யெஷுஆ கிறிஸ்து மாறாதவரே
நித்திய நித்தியமாய்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

19. Everybody ought to know /3


Who Yeshua is.
He’s the Lily of the Valley,
He’s the Bright and Morning Star;
He’s the Fairest of ten thousand.
Everybody ought to know.
Everybody ought to know/3
Who Yeshua is.

20. I have decided to follow Yeshua /3/3


No turning back, no turning back
The world is behind me, the cross before me /3
No turning back, no turning back
Though friends forsake me , yet I will follow /3
No turning back, no turning back
Have you decided to follow Yeshua /3
No turning back, no turning back.
I know His presence in cloud of trouble /3
To take me home, to take me home

21. Give me oil in my lamp /3/3


Keep me burning
Give me oil in my lamp I pray
Give me oil in my lamp
Keep me burning /2
Till the break of day
Sing hosanna, sing hosanna
Sing hosanna to the King of Kings //2

22. I will sing of the mercies of the Lord forever


I will sing, I will sing.
I will sing of the mercies of the Lord forever
I will sing of the mercies of the Lord.
With my mouth will I make known
your faithfulness your faithfulness
With my mouth will I make known
your faithfulness to all generations.
I will sing of the mercies of the Lord forever
I will sing of the mercies of the Lord.

23. The Lord is mine and I am His


His banner over me is love //3
His banner over me is love!
He brought me to His banqueting table
His banner over me is love //3
His banner over me is love!
Yeshua is the rock of my salvation
His banner over me is love //3
His bassnner over me is love!